அமேசானில் சம்மர் சேல் துவக்கம்: குறைந்த விலையில் தரமான போன்கள்.!
அமேசானில் சம்மர் சேல் துவங்கியது. இதில் வரும் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், கேஜெட்கள் விற்பனைக்கு வருகின்றது. அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோ
அமேசானில் சம்மர் சேல் துவங்கியது. இதில் வரும் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், கேஜெட்கள் விற்பனைக்கு வருகின்றது.

அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோர் போன்களை வாங்க ஆர்வமாகவும் இருக்கின்றனர்.

சம்மர் சேல் விழா:
அமேசான் சம்மர் சேல் விழாவை வரும் மே 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை கொண்டாடுகின்றது.
இதில் குறைந்த விலைக்கு நாம் எலக்ட்ரானிக்கு பொருட்கள், ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்டவைகளை நாம் பெற முடியும்.

பிராண்டு போன்கள்:
ஒன்பிளஸ் 6டி, ரியல்மி யு1, சாம்சங் கேலக்ஸி எம் 10, ஐ போன் எக்ஸ் உள்ளிட்ட போன்களை நாம் குறைந்த விலைக்கு வாங்க முடியும்.
அமேசான் பிரைம் மெம்பர்கள் மே 3 மதியம் 12 மணி முதல் துவங்கலாம். இதில் ஏராளமான எலக்ட்ரானிக் பொருட்களையும் நாம் பெற முடியும்.

எக்ஸ்சேஞ் ஆப்பர்:
இதில் ஓப்போ எப் 11 புரோ, விவோ வி 15 புரோ, ஓப்போ எப் 9 புரோ, சாம்சங் கேலக்ஸி எஸ் 10, ஓப்போ ஆர் 17 புரோ போன்களையும் நாம் பெற முடியும். மேலும் பழைய போன்களை நாம் எக்ஸ்சேஞ் செய்தும் பெற்றுக் கொள்ள முடியும்.

ஸ்பீக்கர்கள் ரூ.999 முதல்:
தற்போது அமேசானில் ரூ.999 முதல் ஸ்பீக்கர்கள், ரூ.179 முதல் மெமரிகார்டுகளையும், ஹெட்போன்களை ரூ.349 முதல், வீடியோகேம் உபகரணங்களை ரூ.249 முதல், கணினி கீ போர்டுகளை ரூ.99 முதல், லேப்டாப் பேக்களை ரூ.499 முதல் பெற்றுக் கொள்ள முடியும்.

எஸ்பிஐ கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி:
அமேசானில் இந்த ஆப்பரை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது, எஸ்பிஐ கார்டுகளை பயன்படுத்தினால் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications