சபாஷ்., சரியான நேரம்- அமேசான் கோடைகால விற்பனை 2022: அதீத தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் கோடைகால விற்பனை 2022 தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை தினங்களில் மொபைல் போன்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி அட்டை, ஆர்பிஎல் வங்கி அட்டைகளின் இஎம்ஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்தி சாதனங்கள் வாங்கும் கூடுதல் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அமேசான் கோடைகால விற்பனை 2022
அமேசான் கோடைகால விற்பனை மே 2022 முதல் இந்தியாவில் தொடங்கி இருக்கிறது. இந்த விற்பனையில் மொபைல் போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட்டிவிகள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உள்ளிட்ட பல வகைகளுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விலையில்லா இஎம்ஐ விருப்பம், பல்வேறு தயாரிப்புகளுக்கு பரிமாற்ற தள்ளுபடி உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அமேசானில் ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி அட்டை, ஆர்பிஎல் வங்கி அட்டைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமேசான் இந்த சலுகைதின விற்பனையில் சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் மொபைல் விவரங்களை பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 13
அமேசான் கோடை கால விற்பனையில் ஆப்பிள் ஐபோன் 13 சாதனமானது ரூ.64,900 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஐபோன் சாதனத்தின் அசல் விலை ரூ.79,900 ஆகும். ஆப்பிள் ஐபோன் 13 சாதனமானது ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப் வசதியோடு வருகிறது. இந்த சாதனமானது செராமிக் ஷீல்ட் பாதுகாப்பு வசதியுடனான 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் இரட்டை 12 எம்பி டூயல் கேமரா வசதியைக் கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் 9ஆர்டி
அமேசான் கோடைகால விற்பனை 2022-ல் ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனானது ரூ.42,999 என்ற விலையில் கிடைக்கிறது. கூடுதலாக அமேசான் ரூ.4000 வரை கூப்பன் அடிப்படையிலான தள்ளுபடியை வழங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி கார்ட்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.750 சலுகைகள் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி வசதியோடு வருகிறது. இந்த சாதனம் 6.62 இன்ச் டிஸ்ப்ளே அளவோடு 120 ஹெர்ட்ஸ் ஃப்ளூயட் அமோலெட் டிஸ்ப்ளே அளவுடன் வருகிறது. இந்த சாதனமானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 11 ஆதரவோடு வருகிறது. இந்த சாதனத்தில் 50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் கேமரா வசதியுடன் வருகிறது.

ரெட்மி நோட் 11
ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனானது அமேசான் கோடைகால விற்பனை 2022-ல் ரூ.12,999 என கிடைக்கிறது. இந்த சாதனமானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரூ.13,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனத்தை ஐசிஐசிஐ வங்கி அட்டைகள், கோடக் மகேந்திரா அட்டை, ஆர்பிஎல் வங்கி அட்டை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.1000 வரை கூப்பன் சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் இந்த சாதனத்தை ரூ.12,200 என்ற விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 980 எஸ்ஓசி வசதியோடு வருகிறது. இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்12
சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனானது ரூ.9,999 என்ற விலையில் அமேசான் கோடை கால விற்பனையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் சாம்சங் எக்ஸினோஸ் 850 எஸ்ஓசி வசதியோடு வருகிறது. சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனானது எம்12 அடிப்படையிலான குவாட் கேமரா அமைப்போடு 48 எம்பி பிரதான கேமரா அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

ரியல்மி நார்சோ 50
ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனானது ரூ.12,999 என்ற விலையில் கிடைக்கிறது. கூடுதலாக ரூ.1000 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பனும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் இந்த சாதனத்தை ரூ.11,999 என வாங்கலாம். ரியல்மி நார்சோ 50 சாதனமானது மீடியாடெக் ஹீலியோ ஜி96 எஸ்ஓசி சிப்செட் வசதியோடு வருகிறது. இந்த சாதனம் 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடனான 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி உடனான சூப்பர்டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது டைனமிக் ரேம் விரிவாக்க வசதியைக் கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போனானது ரூ.34,990 என்று கிடைத்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.3000 தள்ளுபடி விலையில் அதாவது ரூ.31,990 என வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ சாதனமானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது. இந்த சாதனம் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications