அசத்தலான அம்சங்கள்: அலெக்சா ஆதரவோடு அறிமுகமான செகண்ட் ஜென் அமேசான் ஃபயர் டிவி க்யூப்!

|

அமேசான் இந்தியாவில் இரண்டாம் தலைமுறை ஃபயர் டிவி க்யூப் சாதனத்தை அலெக்சா ஒருங்கிணைப்புடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த அமேசான் இரண்டாவது ஜென்ரேஷன் ஃபயர் டிவி க்யூப் பல்வேறு பிரத்யேக சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

இரண்டாம் தலைமுறை ஃபயர் டிவி கியூப்

இரண்டாம் தலைமுறை ஃபயர் டிவி கியூப்

அமேசான் நிறுவனம் இந்தியாவில் சமீபத்திய இரண்டாம் தலைமுறை ஃபயர் டிவி கியூப்பை அறிமுகம் செய்தது. இது சொந்த ஃபயர்டி, எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் அம்சத்தை கொண்ட நிறுவனத்தின் மிக சக்திவாய்ந்த ஸ்ட்ரீமிங் சாதனமாக இருக்கிறது. ஃபயர் டிவி க்யூப் அல்ட்ரா எச்டி எச்டிஆர் ஸ்ட்ரீமிங் மற்றும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ அணுகலுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்டிவி க்யூப்-ன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

க்யூப் பாக்ஸ் கிடைக்கும் தளங்கள்

க்யூப் பாக்ஸ் கிடைக்கும் தளங்கள்

அமேசான் இரண்டாம் தலைமுறை தி டிவி க்யூப் இந்தியாவில் விலை குறித்து பார்க்கையில், இது ரூ.12,999 ஆக இருக்கிறது. இந்த ஃபயர் டிவி ஆனது தொடரில் மிக விலை உயர்ந்த சாதனமாக இருக்கிறது. இந்த சாதனம் தற்போது அமேசான், க்ரோம் மற்றும் ரிலையன்ஸ் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல் கூடுதல் சலுகையாக நிறுவனம் எச்டிஎம்ஐ கேபிளை வழங்குகிறது.

டால்பி விஷன், எச்டிஆர் 10+, எச்டிார் 10

டால்பி விஷன், எச்டிஆர் 10+, எச்டிார் 10

அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்த அமேசான் இரண்டாம் தலைமுரை தி டிவி க்யூப்பின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், அமேசான் இரண்டாம் தலைமுறை ஃபயர் டிவி க்யூப் ஆனது டால்பி விஷன், எச்டிஆர் 10+, எச்டிார் 10 மற்றும் எச்எல்ஜி உள்ளிட்ட பல்வேறு எச்டிஆர் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளோடு வருகிறது. இந்த சாதனம் அல்ட்ரா எச்டி தெளிவுத்திறன் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்யும் திறனோடு வருகிறது.

முக்கிய ஸ்ட்ரீமிங் சேவைகள்

முக்கிய ஸ்ட்ரீமிங் சேவைகள்

அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், யூடியூப் மற்றும் ஆப்பிள் டிவி உள்ளிட்ட அனைத்து முக்கிய ஸ்ட்ரீமிங் சேவைகள் ஆதரவுகளையும் சொந்த ஃபயர்டிவி க்யூப் இயக்கமுறைமையோடு வழங்குகிறது. இதன் கூடுதல் அம்சம் இது அலெக்சா ஒருங்கிணைப்புடன் வருகிறது. இதன் செயல்பாடுக்கு இதில் மைக்ரோஃபோனும், அலெக்கா வார்த்தைகளை கேட்க சிறிய ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளது. இது பயனர்களின் உதவியுடன் ஸ்மார்ட்டிவியை அவர்களது குரல் மூலம் கட்டுப்படுத்த உதவுகிறது.

பாரம்பரிய வழிநடத்துதல் பயன்பாடு

பாரம்பரிய வழிநடத்துதல் பயன்பாடு

இந்த சாதனத்தில் உள்ளடிக்கிய ஸ்பீக்கர் உள்ளது. இருப்பினும் இதன்மூலம் நீங்கள் இசை உள்ளிட்ட ஆடியோ உள்ளடக்கம் எதையும் கேட்க முடியாது. அனைத்து ஆடியோ முறைகளும் இந்த சாதனத்தின் மூலம் இதன் இணைப்பிற்கு அனுப்ப முடிகிறது. அதேபோல் இதன் பாரம்பரிய வழிநடத்துதல் பயன்பாட்டிற்கு நீங்கள் ரிமோட்டை பயன்படுத்தலாம். இதில் இருக்கும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, அமேசான் மியூசிக் போன்ற முக்கிய ஓடிடி பயன்பாடுகளை விரைவாக அணுகலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Second Generation Fire TV Cube Launched in India with Ultra HD Streaming

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X