சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10 ஆயிரம் அதிரடி தள்ளுபடி- அமேசான் அறிவிப்பு.!
சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களான ஸ்மார்ட் போன்கள், வாட்சுகள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆன்லைனில் வாங்கினால் ரூ.10,700 தள்ளுபடி அறிவித்துள்ளது அமோசன் நிறுவனம். வாடிக்கையாளர்க
அமேசான் நிறுவனம் சாம்சங்கின் தயாரிப்பு சாதனங்களை வாங்குவோருக்கு அதிரடி தள்ளுபடியாக ரூ.10,700யை அறிவித்துள்ளது. இதற்கு அமேசான் சாம்சங் நாட்கள் என பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

அமேசான் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் இச்சலுகை வரும் ஜுலை 25 முதல் 31ம் தேதி வரை 7 நாட்களுக்கு சாம்சங் தயாரிப்பு பொருட்களை வாங்க இந்த அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவன தயாரிப்பு பொருட்கள்:
சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களான ஸ்மார்ட் போன்கள், வாட்சுகள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆன்லைனில் வாங்கினால் ரூ.10,700 தள்ளுபடி அறிவித்துள்ளது அமோசன் நிறுவனம். வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை உடனடியாக தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ்:
தற்போது வந்துள்ள சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ6 பிளஸ் போனுக்கு ரூ.4 ஆயிரம் தள்ளுபடி அறிவித்துள்ளது. மேலும் ஐசிஐசி வங்கி கிரெடிட் கார்டில் வாங்கும் போது, ரூ.3 ஆயிரம் கேஸ்பேக் ஆகவும், இஎம்ஐயும் கிடைக்கும். மேலும், போன்களை எக்ஸ்சேஞ் மூலம் மாற்றுவோருக்கு ரூ. 2 ஆயிரம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ்:
சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் (64ஜிபி)-ன் முந்தயை விலை ரூ. 34,990 ஆகும். தற்போது 5 ஆயிரம் தள்ளுபடி போக ரூ.29,990க்கு போனை வாங்கலாம். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்குவோருக்கு இஎம்ஐயும் ரூ.3 ஆயிரம் கேஸ்பேக் ஆகவும் சலுகை கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஜே8:
தற்போது வந்த புதிய மாடல்போன சாம்சங் கேலக்ஸி ஜே8 போனின் முந்தைய விலை ரூ.19,990 ஆகும். தற்போது ஆயிரம் தள்ளுபடி போக ரூ. 18,990க்கு விற்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்குவோருக்கு ரூ.2 ஆயிரம் திரும்ப பெறும் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் அறிவிப்பு:
ஜூலை 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை 7 நாட்கள் அதிரடி சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அதிக பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications