Home
News

இதுதான் ஆஃபர்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. குறைந்த விலையில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

தற்போது அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் கம்மி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் அமேசான் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தான் தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 35 சதவீதம் தள்ளபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும்.

இதுதான் ஆஃபர்.. 6000mAh பேட்டரி.. குறைந்த விலையில் சாம்சங் 5ஜி போன்..

மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 செக்யூரிட்டி உடனான அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது பெரும்பாலான சாம்சங் போன்களில் உள்ள "பாரம்பரிய வடிவமைப்பான" இன்ஃபினிட்டி யு (Infinity U) டிசனையும் பெற்றுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, கேலக்ஸி எம்34 5ஜி ஆனது ஓஐஎஸ் (OIS0 ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் அல்லது மேக்ரோ சென்சாரும் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

இதன் கேமரா யூனிட் ஆனது மான்ஸ்டர் ஷாட் 2.0 (Infinity U) என்றழைக்கப்படும் கேமரா-சென்ட்ரிக் அம்சத்துடன் வருகிறது என்பதையும் சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்கீழ் நீங்கள் ஒரே டேக்கில் பல ஷாட்களை கிளிக் செய்ய முடியும். பின்னர் எடுக்கப்பட்ட அனைத்திலும் இருந்து, எது பெஸ்ட் ஷாட் என்பதையும் தேர்ந்தெடுக்க முடியும்.

இந்த ஸ்மார்ட்போனில் ஃபன் மோட் (Fun mode) மற்றும் நைட்டோகிராஃபி (Nightography) போன்ற கேமரா அம்சங்களும் உள்ளன. சாம்சங்கின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் 1280 சிப்செட் (Exynos 1280 SoC) மூலம் இயக்கப்படுகிறது. நினைவூட்டும் வன்ணம், இதே சிப்செட் தான் கேலக்ஸி எம்33 5ஜி, கேலக்ஸி ஏ53 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ33 5ஜி மாடல்களிலும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனானது 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்கிற இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாஃப்ட்வேரை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி-க்கு நான்கு வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 6000எம்ஏஎச் என்கிற 'மான்ஸ்டர்' பேட்டரியை பேக் செய்கிறது.

இதுதான் ஆஃபர்.. 6000mAh பேட்டரி.. குறைந்த விலையில் சாம்சங் 5ஜி போன்..

குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு தரமான சிப்செட், அருமையான கேமரா மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.

அதேபோல சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான 5ஜி போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Sale: Samsung Galaxy M34 5G phone is available at 35 percent discount: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X