Home
News

கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக மாறுமா அலெக்ஸா? நடந்தது இதுதான்!

ஃபுளோரிடாவில் நடந்த ஒரு கொலை வழக்கிற்கு முக்கிய சாட்சியாக அமேசான் நிறுவனத்தின் அலெக்ஸா சாதனத்தை போலீசார் நம்பி விசாரணையைத் துவங்கியுள்ளனர். தற்பொழுது இந்த கொலை வழக்கிற்கான உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க அலெக்ஸா உதவும் என்று அவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

சில்வியா கால்வாவின் மரணம்

சில்வியா கால்வாவின் மரணம்

ஃபுளோரிடாவில் வசித்துவரும் தம்பதியரான ஆடம் கிரெஸ்போ(43) மற்றும் சில்வியா கால்வா(32) ஆகிய இருவருக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தில் சில்வியா கால்வா கொல்லப்பட்டிருக்கிறார். சில்வியா கால்வாவின் நெஞ்சில் 12' இன்ச் ஆழத்திற்குக் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார்.

இரண்டாம் தரப்பு கொலையாளி

இரண்டாம் தரப்பு கொலையாளி

தனது மனைவியை யாரோ கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் என்று அவரது கணவரே போலீசில் புகாரளித்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடந்த காரணத்தினால் புகாரளித கணவரே இந்த கொலையைச் செய்திருப்பார் என்ற சந்தேகத்தில் போலீசார் அவரையும் இரண்டாம் தரப்பு கொலையாளியாக விசாரித்துள்ளனர்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணிடம் விசாரித்த போது, கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நாடாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் எதற்காக இருவரும் சண்டை இட்டுக்கொண்டனர் என்பது தெரியாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

வாய்ஸ் ஆக்டிவேஷன் அலெக்ஸா!

வாய்ஸ் ஆக்டிவேஷன் அலெக்ஸா!

வீட்டில் யாருமில்லை என்ற காரணத்தினால் என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்க, போலீசார் வீட்டில் இருந்த அலெக்ஸாவின் உதவியை நாடியுள்ளனர். வாய்ஸ் ஆக்டிவேஷன் மூலம் செயல்படும் அலெக்ஸாவில் இந்த சம்பவம் நடந்த பொது தகவல் எதுவும் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளதா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடரும் விசாரணை

தொடரும் விசாரணை

இதற்காக அமேசான் நிறுவனத்திடம் இருந்து, வீட்டிலிருந்த அலெக்ஸா ரெக்கார்ட் செய்த ஒட்டுமொத்த தகவலையும் ஃபுளோரிடா போலீசார் வாங்கி துப்பு துலக்கி வருகின்றனர். கொலை நடந்ததற்கு தற்பொழுது உள்ள ஒரே சாட்சியாக அலெக்ஸா இருக்கும் என்று அவர்கள் வழக்கைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Amazon’s Alexa may be a witness in a murder case : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X