உன் வீட்டுக்காரர் பெயர் என்ன? அலெக்சாவை பாடாய் படுத்தும் இந்தியர்கள்.. எப்படி சிக்கிருக்கேன் பார்த்தியாப்பா!
ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரை Alexa-வில் இந்தியர்கள் அதிகம் கேட்ட கேள்விகள் குறித்த தகவலை அமேசான் வெளியிட்டுள்ளது. இதில் பலரும் பல விதமான கேள்விகளை கேட்டிருக்கின்றனர். ஏறத்தாழ அலெக்சாவை பாடாய் படுத்தி இருக்கின்றனர் என்றே கூறலாம். அமேசான் அலெக்சாவிடம் இந்தியர்கள் அதிகம் கேட்ட கேள்விகள் குறித்த தகவலை பார்க்கலாம்.

அமேசான் அலெக்சா
சல்மான்கானின் பெண் தோழி பெயர் என்ன? சல்மான்கான் எங்கே வாழ்கிறார்? என சிலர் கேள்வி கேட்டுள்ளனர். அலெக்சாவில் ஒரே மாதிரியாக பலர் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளனர். அது, அலெக்சா உன் வாய் எங்கே உள்ளது? என்னுடைய வீட்டுப்பாடத்தை நீ செய்ய முடியுமா? உன் வீட்டுக்காரர் இருக்கிறாரா? போன்றவைகள் ஆகும்.

அலெக்சாவிடம் இந்தியர்கள் அதிகம் கேட்ட கேள்விகள்
அமேசானில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த தகவலை பிரிவு வாரியாக விரிவாக பார்க்கலாம். முன்னதாகவே குறிப்பிட்டது போல் அலெக்சாவை இந்தியர்கள் பாடாய் படுத்தி இருக்கின்றனர்.

எனக்கு பெண் தோழி வேண்டும்..
பொது அறிவு, பொழுது போக்கு, உள்ளூர் மற்றும் சர்வதேச பிரபலங்கள், விளையாட்டுகள் என பல பிரிவுகளில் அலெக்சாவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சிலர் நகைச்சுவை உணர்வோடு சீரியஸாக பல கேள்விகளை கேட்டிருக்கின்றனர். எனக்கு பெண் தோழி வேண்டும் என்றெல்லாம் அலெக்சாவிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பொது அறிவு தொடர்பான கேள்விகள்
பொது அறிவு தொடர்பாக 2022 இல் இந்தியர்கள் அதிக முறை அலெக்சாவிடம் கேட்ட கேள்விகள் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.
அலெக்சா, Burj Khalifaவின் உயர்ம் என்ன?
அலெக்சா, உலகின் உயர்ந்த மனிதர் யார்?
அலெக்சா, உலகின் இரண்டாவது பணக்காரர் பெயர் என்ன?
அலெக்சா, இலங்கையில் என்ன மொழி பேசுவார்கள்?
அலெக்சா, ஏலியன் இருக்கிறதா?
அலெக்சா, ட்விட்டர் நிறுவனர் பெயர் என்ன?
அலெக்சா, எலான் மஸ்க் சொத்து மதிப்பு எவ்வளவு?
அலெக்சா, பிட்காயின் விலை என்ன?
அலெக்சா, இன்றைய தங்கத்தின் விலை என்ன?
அலெக்சா, தண்ணீர் ஏன் ஈரமாக இருக்கிறது?

உள்ளூர் மற்றும் சர்வதேச பிரபலங்கள்
உள்ளூர் மற்றும் சர்வதேச பிரபலங்கள் குறித்து இந்தியர்கள் அதிகம் கேட்ட கேள்விகள் இதுதான்.
அலெக்சா, ஆலியா பட் வயது என்ன?
அலெக்சா, அனுஷ்கா சர்மா குழந்தை பெயர் என்ன?
அலெக்சா, மிஸ்டர் பீஸ்ட் யார்?
அலெக்சா, ஜான் சீனாவின் சக்தி எவ்வளவு?
அலெக்சா, யார் விஜய் தேவர்கொண்டா?
அலெக்சா, யார் Duggu?
அலெக்சா, கென்டல் ஜென்னர் வயது என்ன?
அலெக்சா, பிரின்ஸ் ஹாரி வயது என்ன?
அலெக்சா, கத்ரினா கைஃப் உயரம் என்ன?
அலெக்சா, ராஷ்மிகா மந்தனா குறித்து கூறு.

சோட்டா பீம் முதல் ராக்கி பாய் வரை
ஓடிடி மற்றும் ஆன்லைன் தளங்கள் பிரபலமாகி வரும் இந்த நேரத்தில், அலெக்சாவில் சோட்டா பீம், ராக்கி பாய் போன்றவர்கள் குறித்து இந்தியர்கள் அதிக கேள்வி கேட்டிருக்கின்றனர். பொழுதுபோக்கு தொடர்பாக இந்தியர்கள் அலெக்சாவிடம் கேட்ட கேள்விகள் இதுதான்.
அலெக்சா, சோட்டா பீம் உனக்கு தெரியுமா?
அலெக்சா, யார் ராக்கி பாய்?
அலெக்சா, Peppa Pig's brother யார்?
அலெக்சா, தானோஸ் குறித்து கூறு.
அலெக்சா, மிக்கி மவுஸ் வயது என்ன?
அலெக்சா, கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?
அலெக்சா, ஷாருக் கான் வசனங்கள் கூறு.
அலெக்சா, லால் சந்தா சத்தா யார்?
அலெக்சா, சோலே படத்தில் வசனங்கள் பேசு.
அலெக்சா, லிட்டில் சிங்கம் யார்?

ரோனால்டோ மற்றும் மெஸ்ஸி இல் சிறந்தவர்கள் யார்?
காமன்வெல்த், டி20 உலகக் கோப்பை, ஃபிபா உலகக் கோப்பை என போட்டிகள் நிறைந்த ஆண்டாக 2022 இருந்தது. இந்த நிலையில் இந்தியர்கள் அலெக்சாவிடன் விளையாட்டுகள் தொடர்பாக அதிகம் கேட்ட கேள்விகள் என்ன தெரியுமா?
அலெக்சா, ஸ்கோர் என்ன?
அலெக்சா, இன்றைய ஆட்டத்தின் ரன் ரேட் என்ன?
அலெக்சா, இந்திய ஆட்டங்கள் எப்போது?
அலெக்சா, இன்றைய ஆட்டத்தில் மேன் ஆஃப் மேட்ச் யார்?
அலெக்சா, ஹர்திக் பாண்டியா எத்தனை ரன் அடித்துள்ளார்?
அலெக்சா, யார் இந்த எம்பாப்வே?
அலெக்சா, டாஸ் வென்ற அணி எது?
அலெக்சா, கால்பந்தாட்டில் ஆஃப்சைட் என்றால் என்ன?
அலெக்சா, பணக்கார கால்பந்தாட்ட வீரர் யார்?
அலெக்சா, ரோனோல்டோ மற்றும் மெஸ்ஸி இல் யார் சிறந்தவர்கள்?

உன் டூத் பேஸ்ட் இல் உப்பு இருக்கா?
அலெக்சாவில் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள் குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் இது நடப்பது தான். பயனர்கள் அலெக்சாவிடம் எப்போதும் ஒரு நகைச்சுவையான உரையாடலை வைத்திருப்பார்கள். அதன்படி மிகவும் பொதுவாக கேட்கப்பட்ட கேள்விகள் இதுதான்.
அலெக்சா, உன் டூத் பேஸ்ட் இல் உப்பு இருக்கா?
அலெக்சா, உன் வாய் எங்கே இருக்கு?
அலெக்சா, நான் குளிக்கவா?
அலெக்சா, என் வீட்டுப்பாடத்தை நீ செய்கிறாயா?
அலெக்சா, எனக்கு பெண்தோழி வேண்டும்.
அலெக்சா, அமானுஷ்யத்தை நீ நம்புகிறாயா?
அலெக்சா, உனக்கு வீட்டுக்காரர் இருக்கிறாரா?
அலெக்சா, குறும்புக்கார குழந்தைகளை நாம் என்ன செய்ய வேண்டும்?
அலெக்சா, நீ குறும்பு செய்தது உண்டா?உள்ளிட்டவைகள் ஆகும்.


Click it and Unblock the Notifications








