ஹிட்லர் மீசை மாதிரியில இருக்கு: நெட்டிசன்கள் கருத்தால் ஐகானை மாற்றிய அமேசான்- யாருய்யா நீங்க!

|

மக்களிடையே ஆன்லைன் ஆர்டர் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் மக்கள் வீட்டிலையே தங்கும் நிலை ஏற்பட்டது. வெளியில் சென்று பொருட்கள் மக்கள் அச்சம் அடைந்தனர். எனவே ஆன்லைன் ஆர்டர் பழக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

ஐகான் மாற்றிய நிறுவனம்

ஐகான் மாற்றிய நிறுவனம்

ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் ஒரு ஐகான் தேவை. நிறுவனம் ஆரம்பிப்பதற்கு முன்பாக லோகோ ஐகானை நிறுவனம் தேர்ந்தெடுப்பது வழக்கம். சமீபத்தில் மிந்தரா அறிமுகம் செய்த லோகோ பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது போல் இருக்கிறது என சர்ச்சை எழுந்ததையடுத்து நிறுவனம் லோகோவை மாற்றி அமைத்தது.

அமேசான் பயன்பாடு

அமேசான் பயன்பாடு

அதேபோல் அமேசான் பயன்பாட்டில் டெலிவரி செய்யப்பட்டும் அட்டைப்பெட்டி நிற பாக்ஸ், அதில் செலோடேப் வெட்டி ஒட்டியது போலும் கீழ் அமேசான் சிரிக்கும்(ஸ்மைலி) அடிப்படையிலான அம்புக்குறியும் இருந்தது. இந்த ஐகான் சமூகவலைதளங்களில் வைரலானது.

ஜனவரி மாத தொடக்கத்தில் அமேசான் நிறுவனம் புதிய ஐகானை அறிமுகம் செய்தது. புன்னகை வடிவ அம்புக்குறிக்கு மேல் வெட்டியப்படியாக இருந்த நீல நிற செலோ டேப், ஹிட்லர் மீசையை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது என நெட்டிசன்கள் கருத்து சொல்லத் தொடங்கினர்.

ஷாப்பிங் கார்ட் ஐகான்

ஷாப்பிங் கார்ட் ஐகான் சமூகவலைதளங்களில் வைரலானது. இதை பார்த்த நெட்டிசன்கள் துண்டிக்கப்பட்ட நீல நிற செலோடேப் போன்று வெட்டி வைத்தது போல் இருக்கிறது. இது ஹிட்லர் மீசை வைத்து சிரித்தப்படியே இருக்கிறது என நிறுவனம் தெரிவித்தது.

அமேசான் புதிய சின்னம்

இதையடுத்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் அமேசான் ஒரு புதிய சின்னத்தை கொண்டு வந்தது. இதன் ஒப்பீடு தற்போது சமூகவலைதளங்களில் வைரலானது. இது செலோடேப் ஒரு ஓரமாக மடித்து ஒட்டிய நிலையில் சிரித்தபடியான அம்புக்குறியோடு இருக்கிறது.

வாடிக்கையாளர்களின் கருத்தை கவனத்தில் கொண்டு அமேசான் நிறுவனம் சர்ச்சையைத் தவிர்ப்பதற்காக ஐகானை சற்று மாற்றி அமைத்ததாக தெரிவிக்கிறது. அமேசான் தங்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்க புதிய வழிகளை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் ஷாப்பிங் முறையை தொடங்கும் போது மகிழ்ச்சியை தூண்டுவதற்கே புதிய ஐகானை வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் டெலிவரி பெட்டியை வீட்டு வாசலில் வைக்கும் போது வாடிக்கையாளர்கள் எந்தளவு மகிழ்ச்சியடைகிறார்களோ அந்த அளவு ஐகான் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Best Mobiles in India

English summary
Amazon Replaced the Old Shopping Cart Icon After Criticism Like Adolf Hitler Face

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X