'Amazon-ல இனி ஆர்டர் பண்ணவே மாட்டேன்'.. ரூ.40,000 போச்சு.. கடுப்பான கஸ்டமர்.. Refund வேணுமா? இதை செய்யணும்..
அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்த நபருக்கு நடந்த அசவுகரியமான நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ. 40,000 மதிப்பிலான கேமராவை (Rs 40,000 worth camera) ஆர்டர் செய்த நபருக்கு டெலிவரி செய்யப்பட்ட பார்ஸலில் (Amazon parcel delivery) கேமரா இல்லாமல் போனது. அமேசான் தளத்தில் புகார் அளித்தும் அந்த வாடிக்கையாளருக்கு பணம் திரும்ப கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம்? அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து பொருளை வாங்கும் ஒவ்வொருவரும் அவர்களின் பார்சல் டெலிவரி வாங்கும் போது என்ன செய்தால் முழு-ரீஃபண்ட் (full refund) கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
அமேசான் தளம் மூலம் சமீபத்தில் கோப்ரோ ஹீரோ 13 ஸ்பெஷல் பண்டல் (GoPro Hero 13 Special Bundle) கேமராவை ஆர்டர் செய்திருக்கிறார் ஷுபம் என்ற நபர். இந்த GoPro Hero 13 Special Bundle பேக் இல் ரூ. 39,990 மதிப்பிலான ஒரு கோப்ரோ ஹீரோ 13 கேமராவுடன், ரூ. 999 மதிப்பிலான ஒரு சிவ்ரோ S11 ட்ரைபாட் (Syvro S11 tripod) வழங்கப்படுகிறது.

Amazon-ல இனி ஆர்டர் பண்ணவே மாட்டேன்.. ரூ.40,000 முழுசா போச்சு.. கடுப்பான கஸ்டமர்:
இத்துடன் இந்த கம்போ பேக்கில் ரூ. 2812 மதிப்பிலான டெலிசென் ND பில்டர்ஸ் (Telesen ND Filters) சாதனமும் அடைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் பண்டல் பேக்கேஜை அமேசான் வாடிக்கையாளர்கள் ஒருவர் ஆன்லைன் பேமெண்ட் மூலம் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி, ஆர்டர் செய்திருக்கிறார். இவர் ஆர்டர் செய்த பார்சல் அவருடைய முகவரிக்கு டெலிவெரி செய்ப்பட்டிருக்கிறது. இவருடைய பர்செல்லை அவரது வாட்ச்மென் பெற்றதாக கூறப்படுகிறது.
ஷுபம் வீட்டிற்கு வந்து பார்ஸலை பிரித்து பார்த்தபோது, அதனுள் சிவ்ரோ S11 ட்ரைபாட் மற்றும் டெலிசென் ND பில்டர்ஸ் ஆகிய இரண்டு பொருட்கள் மட்டுமே இருந்துள்ளது. ஆனால், அந்த பார்ஸளுக்குள் முக்கியமாக இருக்கவேண்டிய ரூ. 39,990 மதிப்பிலான GoPro Hero 13 கேமரா மட்டும் இல்லாமல் போனது. இதனால், ஆர்டர் செய்த நபர் அதிர்ச்சி அடைந்து உடனே அமேசான் வடிக்கையாளர் சேவை மையத்தை (Amazon customer care) போன் மூலம் அழைத்து, காணாமல் போன தயாரிப்பு குறித்து புகார் அளித்துள்ளார்.
காணாமல் போன பொருளுக்கு ரீஃபண்ட் கேட்ட Amazon வாடிக்கையாளர்.. Amazon சொன்ன பதில் NO Refund.. என்ன காரணம்?
அவருடைய பார்சல் டெலிவரி செய்யப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே அது திறக்கப்பட்டிருப்பதற்கான ஆதார புகைப்படங்களை (evidence photos) அவர் அமேசான் தளத்தில் சமர்ப்பித்து, பார்சல் (Amazon parcel) உள்ளே கேமரா இல்லாத புகைப்படத்தையும் சமர்ப்பித்து புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் நிறுவனம் இந்த புகார் தொடர்பாக விசாரித்து பதில் அளிக்க 04-02-2025 வரை கால அவகாசம் கேட்டதாக அந்த நபர் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் அவர் மீண்டும் இந்த புகார் தொடர்பாக என்ன முடிவு செய்யப்பட்டுள்ளது? எப்போது எனது ரீஃபண்ட் (Refund) கிடைக்கும்? என்று கேட்டபோது அமேசான் அவர் எதிர்பார்த்திடாத பதிலை அவருக்கு வழங்கியிருக்கிறது. உங்கள் பார்சல் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது. இதற்கு மேல் ரீபண்ட் எல்லாம் கிடையாது 'No Refund' என்று கூறியிருக்கிறது. இதனால், அந்த நபர் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளதாக X தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Amazon இடமிருந்து முழு ரீஃபண்ட் பெற இதை செய்யுங்க மக்களே.. எப்போது பர்சல்லை திறக்கும் முன் இதை செய்ய மறக்காதீங்க:
பார்சலில் உள்ள ஸ்டிக்கரில் அதன் எடை 1.28 கிலோ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு கிடைத்த பார்சல் வெறும் 650 கிராம் மட்டுமே எடையுள்ளதாக இருப்பதால் GoPro தெளிவாகக் காணவில்லை என்று அவர் தெளிவாக புகார் அளித்தும் அமேசான் அவருக்கு உதவ மறுத்துவிட்டது. ஒருவேளை அவர் அமேசான் பார்சல்லை திறக்கும் முன் வீடியோ ரெக்கார்டிங் (open amazon parcel in front of video recording) செய்திருந்தால் அவருக்கு சாதகமான பதில் கிடைத்திருக்கும்.
வீடியோ ஆதாரத்தின் முன்னிலையில் பார்சல் திறக்கப்பட்டு, அதனுள் கேமரா இல்லாமல் போனதை தெளிவாக காண்பித்திருந்தால் பணம் திரும்ப கிடைத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று அவருடைய பதிவில் மற்றொரு X பயனர் கருத்து தெரிவித்திருக்கார். இதற்கு முன்பு அவருக்கும் இதே போன்ற நிகழ்வு நடந்த பொழுது, அவர் வீடியோ ரெக்கார்டிங் ஆதாரத்தை (video recording proof) காண்பித்து முழு ரீஃபண்ட் தொகையை பெற்றதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இனி அமேசான் மூலம் ஆர்டர் செய்யும் பயனர்கள் ஒருமுறை வீடியோ ரெகார்ட் செய்து, அதன் முன்னிலையில் பார்சேலை திறப்பது பாதுகாப்பானது என்று தெரிவித்திருக்கிரார்.


Click it and Unblock the Notifications








