Home
News

Amazon திடீர் முடிவு.. Prime Membership மீது நம்ப முடியாத விலை குறைப்பு.. நன்மைகளிலும் மாற்றம்! இனிமேல்?

அமேசான் (Amazon) நிறுவனமானது திடீரெனெ தனது ப்ரைம் மெம்பர்ஷிப்பின் (Prime Membership) விலையை குறைத்துள்ளது. எந்த திட்டத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளது? அதன் பழைய விலை என்ன? புதிய விலை என்ன? விலை குறைப்பிற்கு பின்னர் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதோ விவரங்கள்:

அமேசான் நிறுவனம் தனது ப்ரைம் மெம்பர்ஷிப்பை பலவகையான கட்டண விருப்பங்களின் கீழ் வழங்குகிறது. 1 மாத காலத்திற்கான சந்தா ரூ.299 க்கும், 3 மாத காலத்திற்கான சந்தா ரூ.599 க்கும், 1 ஆண்டுக்கான சந்தா ரூ.1,499 க்கு அணுக கிடைக்கிறது. இந்த வரிசையில் ப்ரைம் லைட் (Prime Lite) என்கிற திட்டமும் உண்டு.

Amazon திடீர் முடிவு.. Prime Membership மீது நம்ப முடியாத விலை குறைப்ப

ப்ரைம் லைட் சாந்த திட்டமானது, கடந்த ஜூன் மாதத்தில் ரூ.ரூ.999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டத்தின் விலையில் தான் அமேசான் நிறுவனம் சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. வழக்கமான ப்ரைம் மெம்பர்ஷிப்பை விட சற்றே குறைவான நன்மைகளுடன் வரும் ப்ரைம் லைட் திட்டமானது தற்போது ரூ.799 க்கு அணுக கிடைக்கிறது.

அதாவது ப்ரைம் லைட் சாந்தாவின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நிர்ணயம் ​​அமேசான் ப்ரைம் ஆதரவு பக்கத்தில் பிரதிபலிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மற்ற ப்ரைம் மெம்பர்ஷிப் சந்தா திட்டங்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை .

இங்கே கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அமேசான் நிறுவனம் தனது ப்ரைம் லைட் சாந்தாவின் விலையில் மட்டுமே மாற்றம் செய்யவில்லை. அது வழங்கும் நன்மைகளிலும் கூட சில முக்கியமான மாற்றங்களை செய்துள்ளது. முன்னதாக இது டூ-டே டெலிவரியை மட்டுமே இலவசமாக வழங்கியது.

ஆனால் இனிமேல் அமேசான் ப்ரைம் லைட் மெம்பர்ஷிப் சாந்தாவின் கீழ் ஒன்-டே டெலிவரி (One-Day Delivery), டூ-டீ டெலிவரி (Two-Day Delivery), ஸ்கேட்யூல்டு டெலிவரி (Scheduled Delivery) மற்றும் சேம்-டே டெலிவரி (Same-Day Delivery) போன்ற பல்வேறு விருப்பங்கள் அணுக கிடைக்கும்.

இருப்பினும் ப்ரைம் லைட் சந்தாவில் ப்ரைம் மியூசிக் இன்னும் சேர்க்கப்படவில்லை மற்றும் ப்ரைம் வீடியோவானது எச்டி குவாலிட்டிக்கு வரம்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் டிவைஸ் சப்போர்ட் (Device Support) எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இருந்த 2 டிவைஸ்களுக்கான ஆதரவு 1 டிவைஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதாவது மார்னிங் டெலிவரியில் ஒரு பொருளுக்கு ரூ.175 (morning delivery at Rs.175 per item), நோ-காஸ்ட் ஐஎம்ஐ (, No-cost EMI), 6 மாதங்களுக்கான இலவச ஸ்கிரீன் ரீப்ளேஸ்மென்ட் (6-month free screen replacement) மற்றும் பல நன்மைகள் அப்படியே இருக்கும்.

அமேசான் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, இது ரியல்மி நிறுவனத்துடன் சேர்ந்து 2023 கிறிஸ்துமஸ் விற்பனையை நடத்துகிறது. கடந்த டிச.18 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனை டிச.26 வரை நடக்கவுள்ளது. இதன்கீழ் பல்வேறு ரியல்மி போன்களின் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது.

இதுதவிர்த்து அமேசான் வலைத்தளமானது மிகவும் சமீபத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்களின் விற்பனையை நடத்தி வருகிறது மற்றும் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகளையும் வழங்கி வருகிறது. டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) ஸ்மார்ட்போனின் விற்பனை டிச.22 முதல் தொடங்குகிறது. இது ரூ.7999 க்கு பதிலாக ரூ.6499 க்கு வாங்க கிடைக்கும்.

ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் 12% தள்ளுபடியுடன் ரூ.52,999 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) ஸ்மார்ட்போனின் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் 26% தள்ளுபடியை பெற்று ரூ.18,499 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Reduced Rs 200 Price of Prime Lite Membership Check New Price Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X