Home
News

Amazon Prime இருக்கா? 2025-ல புது ஆப்பு வருது.. கூட காசு கொடுத்தா மட்டும் டென்க்ஷன் ஃப்ரீ.. என்ன மேட்டர்?

அமேசான் (Amazon) நிறுவனம் கடந்த வருடம் அமெரிக்கா (U.S), ஆஸ்திரேலியா (Australia), ஆஸ்திரியா (Austria), கனடா (Canada), பிரான்ஸ் (France), ஜெர்மனி (Germany), இத்தாலி (Italy), மெக்சிகோ (Mexico), ஸ்பெயின் (Spain), மற்றும் லண்டன் (U.K.) ஆகிய நாடுகளில் அதன் விளம்பர சேவையை துவங்கியது. இதை இப்போது அமேசான் நிறுவனம் இந்தியாவிற்கும் (India) கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளது. எல்லா பயனர்களுக்கும் இனி கட்டாயம் விளம்பரம் காண்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. உண்மையில் பிரீமியம் சந்தா பயனர்களுக்கு விளம்பரம் காண்பிக்கப்படுமா? என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அமேசான் நிறுவனம் அதன் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தாதாரர்களுக்கு வரையறுக்கப்பட்ட விளம்பரங்களை (Limited Ads) வரும் 2025 ஆம் ஆண்டு முதல் காண்பிக்க துவங்கும் என்று அறிவித்துள்ளது. இந்திய அமேசான் பிரைம் வீடியோஸ் சந்தாதாரர்கள் (Amazon Prime Videos Subscription Users) இனி அவர்களின் வீடியோ அனுபவத்திற்கு இடையில் ஆங்காங்கே விளம்பரங்களை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் என்று தோன்றுகிறது.

Amazon Prime இருக்கா? 2025-ல புது ஆப்பு வருது.. கூட காசு கொடுத்தா மட்ட

Amazon Prime சந்தா உங்ககிட்ட இருக்கா? 2025-ல புது ஆப்பு வருது:

இந்தியாவை தொடர்ந்து, பிரேசில் (Brazil), ஜப்பான் (Japan), நெதர்லாந்து (Netherland) மற்றும் நியூசிலாந்து (New Zealand) ஆகிய நாடுகளில் உள்ள அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பிரைம் வீடியோவில் விளம்பரங்கள் காண்பிக்கப்படும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. விளம்பரங்களைச் செயல்படுத்துவதற்கான காரணம், உள்ளடக்கத்தில் தொடர்ச்சியான முதலீட்டிற்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் இது லீனியர் டிவி மற்றும் பிற ஸ்ட்ரீமிங் டிவி வழங்குநர்களைக் காட்டிலும் குறைவான விளம்பரங்களைக் கொண்டிருக்கும் என்று அமேசான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சில திட்டங்களில் விளம்பரங்கள் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் விளம்பரமில்லாத சந்தாவிற்கு பணம் செலுத்தும் விருப்பமும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் சந்தாவில் பிரீமியம் சந்தாவை வைத்துள்ளவர்களுக்கும் இனி விளம்பரங்கள் காண்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

விளம்பரங்கள் இல்லாத சந்தாவுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா?

இதில் விளம்பரமே இல்லாத பிரீமியம் சந்தாவை பெற, அமேசான் பிரேம் சந்தாதாரர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும் என்று கூறப்படுகிறது. அதன் விலை பின்னர் அறிவிக்கப்படும் என அமேசான் உறுதிப்படுத்தியுள்ளது. பிரைம் வீடியோவில் விளம்பரங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு பிரைம் உறுப்பினர்களுக்கு அவர்கள் விரும்பினால் விளம்பரமில்லாத விருப்பத்திற்கு எப்படிப் பதிவு செய்வது என்பது குறித்த தகவலுடன் மின்னஞ்சல் அனுப்பப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

தற்போதைய பிரைம் உறுப்பினர் விலை, இப்போது ஆண்டுக்கு ரூ. 1,499 ஆக இருக்கிறது. வருகிற 2025 இல் இது மாறாது என்றும் கூறப்படுகிறது. புதிய விளம்பரங்களுடனான அமேசான் பிரைம் சந்தா திட்டங்கள் அறிமுகம் செய்த பிறகு தான், சரியான விலை விபரங்கள் நமக்கு தெரியவரும். ஆனால், இனி வீடியோவிற்கு இடையில் அமேசான் பிரைம் பயனர்கள் விளம்பரங்களை பார்ப்பார்கள் என்பது உறுதி.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Prime Video Subscribers Will See Ads From 2025 In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X