இனி லைவ் கிரிக்கெட் போட்டியை அமேசானில் பார்க்கலாம்: எப்படி தெரியுமா?
நியூசிலாந்து நாட்டில் நடக்கும் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் ஒளிபரப்பு செய்ய அமேசான் நிறுவனம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தோடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அமேசான், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்
நியூசிலாந்து நாட்டில் நடக்கும் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் ஒளிபரப்பு செய்ய அமேசான் நிறுவனம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தோடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்க முடியும்.

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டி
ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்கு போட்டியாக அமேசான் களமிறங்கியுள்ளது. இந்தியாவில் நடைபெறும் பல சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஹாட்ஸ்டார் ஒளிபரப்பு செய்து வருகிறது. கிரிக்கெட் போட்டியை காண்பதற்கே ஹாட்ஸ்டார் சந்தா அணுகல் பெறுபவர்கள் இங்கு ஏராளம்.

இந்தியாவில் அமேசான் ஒளிபரப்பு
தற்போது அமேசான் நிறுவனம் கிரிக்கெட் போட்டியை நேரலையாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. 2025-26 வரை நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கான இந்திய பிராந்திய உரிமைகளை அமேசான் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நியூசிலாந்தில் நடைபெறும் அனைத்து போட்டியையும் இந்தியாவில் அமேசான் ஒளிபரப்பு செய்யும்.

அமேசான் ஸ்ட்ரீமிங்
அமேசான் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி 2020-21 சீசனில் தொடங்கி 2025-26 சீசன் வரை நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் இந்தியாவில் அமேசான் ஸ்ட்ரீமிங் செய்யும்.

நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம்
2020 ஆம் ஆண்டில் இந்தியா அணி நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதேபோல் இரண்டாவதாக ஒரு முறையும் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த போட்டிகளை அமேசான் தான் ஒளிபரப்பு செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.

கிரிக்கெட் போட்டிக்கு பெரும் வரவேற்பு
இந்தியாவில் கிரிக்கெட் போட்டி மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது எனவும் அதன்படி கிரிக்கெட் போட்டியை நேரலையில் ஸ்ட்ரீம் செய்வதில் தாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் எனவும் அமேசான் பிரைம் வீடியோ அதிகாரி தெரிவித்துள்ளார். அமேசான் பிரைம் உடனான ஒப்பந்தம் நியூசிலாந்து கிரிக்கெட் தலைமைக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
அமேசான் ஏணைய முன்னணி திரைப்படங்கள் வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதன்படி அமேசான் பிரைம் வீடியோ எடுத்த இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவில் அமேசான் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source: thehindu.com


Click it and Unblock the Notifications