Home
News

Amazon Prime Video: வச்சான் பாரு ஆப்பு.. இனி நிம்மதியா படம் கூட பார்க்க முடியாதா? என்னயா செஞ்சு வச்சிருக்கீங்க

அமேசான் பிரைம் பயனர்களே கொஞ்சம் கவனியுங்க. உங்களிடம் அமேசான் பிரைம் வீடியோஸ் (Amazon Prime Video) சந்தா இருக்கிறது என்றால், இந்த பதிவு கட்டாயம் உங்களுக்கானது. இனி பிரைம் வீடியோஸில் உங்களால் நிம்மதியாக ஒரு முழு ஷோ அல்லது திரைப்படத்தை பார்க்க முடியாது மக்களே.

காரணம், வரும் ஜனவரி 29 ஆம் தேதி 2024 முதல், அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) தளத்தில் திரைப்படம் (movies), டிவி (TV) நிகழ்ச்சி, சீரிஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இடையே விளம்பரங்கள் கட்டாயமாக ஒளிபரப்பப்படும் என்று அமேசான் அறிவித்துள்ளது. ஆம், மக்களே இனி திரைப்படங்களுக்கு இடையில் விளம்பரங்கள் (Ads) வந்து நம்மை கடுப்பேற்ற போகிறது. விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

வச்சான் பாரு ஆப்பு.. இனி நிம்மதியா படம் கூட பார்க்க முடியாதா?

இந்த செய்தியை கேட்கவே சிலருக்கு கடுப்பாக இருக்கலாம். ஆனால், இது தான் உண்மை மக்களே. சமீபத்தில் வெளியான தகவலின் படி, வரும் ஜனவரி 29, 2024 முதல், நீங்கள் பணம் செலுத்தி அமேசான் பிரைம் வீடியோஸ் சந்தா (Amazon Prime Video Subscription) வாங்கிய உறுப்பினராக இல்லாவிட்டால், ஸ்ட்ரீமிங் சேவைக்கு (streaming service) இடையில் சில விளம்பரங்களை அமேசான் கட்டாயம் காண்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம் வீடியோ விளம்பரம் (Amazon Prime Video Ads):

அமேசான் பிரைம் வீடியோஸ் சேவைக்கான உள்ளடக்கத்தை உருவாக்குவதில் அமேசான் (Amazon) அதிக முதலீடு செய்ய விரும்புவதால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அமேசான் பிரைம் வீடியோஸ் தளத்தில் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் முதல், விருது பெற்ற அமேசான் ஒரிஜினல்ஸ் (Amazon Originals) மற்றும் லைவ் ஸ்போர்ட்ஸ், வெப் சீரிஸ் (web series) போன்றவற்றை இந்த தளம் HD தரத்தில் வழங்குகிறது.

இன்னும் கூடுதல் உற்சாகமான உள்ளடக்கத்தை பிரைம் வீடியோ தளத்திற்கு கொண்டு வர, அமேசான் பிரைம் வீடியோஸ் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் சில விளம்பரங்களைச் சேர்க்கத் (Amazon Prime Video Ads) தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதலில் அமெரிக்கா (America or US), இங்கிலாந்து (England), ஜெர்மனி (Germany) மற்றும் கனடாவில் (Canada) நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.

வச்சான் பாரு ஆப்பு.. இனி நிம்மதியா படம் கூட பார்க்க முடியாதா?

அமேசான் பிரைம் வீடியோ இந்தியா (Amazon Prime Video India):

அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் (France), இத்தாலி (Italy), ஸ்பெயின் (Spain), மெக்சிகோ (Mexico) மற்றும் ஆஸ்திரேலியா (Australia) போன்ற பிற நாடுகளிலும் இந்த ஆண்டின் பிற்பகுதிக்குள் இந்த விளம்பர அம்சம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமேசான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் (Amazon Prime India) இந்த மாற்றங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது பற்றி தகவல்கள் எதுவும் அமேசான் பதிவில் குறிப்பிடப்படவில்லை.

இந்த 2024 ஆம் ஆண்டில் அமேசான் பிரைம் வீடியோஸ் கட்டணம் மாறாது என்று கூறப்படுகிறது. இருப்பினும், நீங்கள் விளம்பரங்களைத் தவிர்க்க விரும்பினால், US ப்ரைம் உறுப்பினர்களுக்கு மாதத்திற்கு $2.99 ​​கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு, பயனர்கள் புதிய திட்டத்தில் சேரலாம் என்று Amazon தெரிவித்துள்ளது. இந்த கட்டணம் அமெரிக்காவுக்கு மட்டும் பொருந்தும். பிற நாடுகளுக்கான விலைகள் பின்னர் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விளம்பர சந்தா உலக நாடுகளில் உள்ள பல நாடுகளில் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், இது இந்திய அமேசான் பிரைம் வீடியோஸ் சந்தையிலும் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அமேசான் பிரைம் வீடியோ பயனர்களும் விரைவில் சில மாற்றங்களை சந்திக்க நேரிடலாம் என்று டெக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த புதிய விளம்பர சேவை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கமெண்ட் செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Prime Video Confirms To Show Ads Starting From January 29 In US UK Germany Canada
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X