அமேசான் வெளியிடும் முதல் தமிழ் வெப் சீரிஸ்.!
அமேசான் நிறுவனம் தனது முதல் தமிழ் வெப் சீரிஸ் தொடருக்கான அறிவிப்பை இன்று அறிவித்துள்ளது.
அமேசான் நிறுவனம் தனது முதல் தமிழ் வெப் சீரிஸ் தொடருக்கான அறிவிப்பை இன்று அறிவித்துள்ளது.

ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடித்த பாபி சிம்ஹ நடிக்கும் இந்த வெப் சீரிஸ்க்கு "வெள்ள ராஜா" என்று அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது.
அமேசான் தற்பொழுது வெள்ள ராஜா சீரிஸ்ஸின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் வரும் டிசம்பர் 7 முதல் அமேசான் பிரைம் இல் ரசிகர்கள் பார்த்து மகிழலாம் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ள ராஜா சீரிஸ்ஸை மாநகரம் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று இயக்கிய இயக்குனர் குகன் இயக்குகிறார். ட்ரீம் வாரியார் நிறுவனம் இந்த வெப் சீரிஸ் நிகழ்ச்சியைத் தயாரிக்கிறது. அமேசான் நிறுவனம் தமிழில் ஒளிபரப்பும் முதல் வெப் சீரிஸ் என்ற பெருமையை வெள்ள ராஜா குழு பெற்றிருக்கிறது.
அமேசான் பிரைம் எக்ஸ்க்ளூசிவ் பிரிவில் இந்தத் தொடரை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட வெள்ள ராஜா வெப் சீரிஸ் இன் டிரைலரை இங்குக் காணலாம்.
யூடியூப் வலைத்தளம் மற்றும் அமேசான் தலத்தில் வெளியிடப்பட்ட இந்த வெப் சீரிஸ் டிரைலர்க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அமேசான் தமிழ் பயனர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.


Click it and Unblock the Notifications