Amazon Prime பயனர்கள் ஷாக்: ஆண்டு சந்தா விலை ரூ.9,070 ஆக உயர்வு? காலத்தின் கட்டாயம்!
Amazon Prime சந்தா விலை சில நாடுகளில் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் பிரான்ஸ் மட்டும் 43 சதவீதம் வரை விலை உயர்வை காணும் என ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவக்கிறது. அதுசரி, இந்தியா லிஸ்ட்டில் இருக்கிறதா, அப்படி இருக்கும்பட்சத்தில் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்று கேள்வி வருகிறதா?. வாங்க தகவலை விரிவாக பார்க்கலாம்.

43 சதவீதம் வரை விலை உயர்வு
அமேசான் ப்ரைம், விலை உயர்வு பட்டியலில் இருக்கும் நாடுகளின் விவரங்களை பார்க்கலாம். சில நாடுகளில் மட்டும் ப்ரைம் சந்தா விலையை அதிகரிக்க அமேசான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பிரான்ஸ் அதிகபட்சமாக 43 சதவீதம் வரை விலை உயர்வைக் காணும் என கூறப்படுகிறது. இந்த விலை உயர்வானது செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு கொண்டு வர அமேசான் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நாட்டில் மட்டும் அதீத அளவு அதிகம்
இதுகுறித்து வெளியாகியுள்ள ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, அமேசான் ப்ரைம் சந்தாக்கான விலை 43 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த விலை உயர்வு சதவீதம் ஆனது ஒவ்வொரு நாடுகளிலும் வேறுபட்டு இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த விலை உயர்வானது ஒரு நாட்டில் மட்டும் அதீத அளவு எதிரொலித்து இருக்கிறது.
அந்த நாடு அமேசான் ப்ரைம் சந்தா அணுகலை பெற ஒரு ஆண்டுக்கு ரூ.9,070 செலுத்த வேண்டும் என்றால் நம்ப முடிகிறதா?

பட்டியலில் உள்ள நாடுகளின் பெயர்?
Amazon Prime சந்தா விலையானது பிரான்ஸ் நாட்டில் 43 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டிருப்பதாக அறிக்கைத் தகவல் கூறுகிறது.
அதாவது பிரான்ஸ் நாட்டவர்கள் அமேசான் பிரைம் சந்தாவை பெற வேண்டும் என்றால் ஆண்டுக்கு EUR 69.90 செலுத்த வேண்டும். அதாவது இந்திய விலை மதிப்புப்படி ரூ.5,640 செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
அதேபோல் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் அமேசான் பிரைம் ஒரு ஆண்டு சந்தாக்கான விலை EUR 49.90 ஆக இருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு சுமார் ரூ.4,032 ஆகும். இந்த நாடுகளில் அமேசான் பிரைம சந்தா 39 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டு சந்தா விலை ரூ.9,070
அமேசான் ப்ரைம் சந்தா விலை உயர்வு பட்டியலில் அடுத்துள்ள நாடுகளின் பெயர் மற்றும் விலை உயர்வு விவரங்களை பார்க்கலாம்.
இங்கிலாந்தில் அமேசான் ப்ரைம் சந்தா அணுகல் பெற ஆண்டுக்கு £95 செலுத்த வேண்டும். அதாவது இதன் இந்திய விலை மதிப்பு ரூ.9,070 ஆகும்.
தொடர்ந்து ஜெர்மனியில் வசிப்பவர்கள் EUR 89.90 (சுமார் ரூ.8,590) ஆண்டு சந்தாத் தொகையாக செலவழிக்க வேண்டும்.
அமெரிக்காவுக்கு பிறகு அமேசானின் மூன்றாவது பெரிய சந்தையாக இங்கிலாந்து இருக்கிறது. இதெல்லாம் சரி, இந்திய நிலவரம் என்னவென்று பார்த்து விடலாம்.

இந்தியாவில் அமேசான் ப்ரைம் சந்தா விலை
கடந்த அக்டோபர் 2021 இல் தான் இந்திய சந்தைக்கான புதிய விலையை அமேசான் அறிவித்தது. இந்தியாவில் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்புக்கான ஆரம்ப விலை ரூ.179 முதல் தொடங்குகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கிறதா என்றால்? ஒரு கவலையும் வேண்டாம்.

பெரு மூச்சு விடும் அமேசான் ரசிகர்கள்
அமேசானின் இந்த விலை உயர்வு பட்டியலில் இந்தியா இல்லை. அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களாக நீங்கள் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக சந்தோஷத்தில் பெரு மூச்சு விட்டிருப்பீர்கள். இதற்கே இப்படி என்றால் ரூ.10,300 செலுத்தி ஒரு நாடு அமேசான் ப்ரைமிற்கான ஆண்டு சந்தாவை பெற்று வருகிறது.

அதிகப்பட்ச சந்தா தொகை எந்த நாட்டில்?
அமேசான் ப்ரைம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் 20 சதவீதம் வரை சந்தா விலையை அதிகரித்தது.
அமேசான் ப்ரைம் மாத சந்தா $12.99 ஆக இருந்த நிலையில் விலை உயர்வுக்கு பிறகு $14.99 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது இந்திய விலை மதிப்புப்படி மாத சந்தா ரூ.1,120 ஆகும்.அதேபோல் அமெரிக்காவில் அமேசான் ப்ரைம் ஆண்டு சந்தா $139 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய விலை மதிப்புப்படி ஆண்டு சந்தாவுக்கு ரூ.10,300 செலுத்த வேண்டும்.

சந்தா விலை உயர்வுக்கு காரணம் என்ன?
அமேசான் பிரைம் உறுப்பினர்கள் சந்தா விலையை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் காலத்தின் கட்டாயம் என்றே கூறலாம்.
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி "அதிகரித்த பணவீக்கம் மற்றும் இயக்க செலவுகள்" தான் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சரியான நேரத்தில் சிறந்த உள்ளடக்கத்தை வழங்குவதற்கு விலை உயர்வு என்பது மிக அவசியம் என அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டு சந்தா விலை என்ன?
அக்டோபர் 2021 இல் அமேசான் இந்தியா ப்ரைம் மெம்பர்ஷிப் விலை உயர்த்தப்பட்டது. ஆனாலும் அது இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் கூறவேண்டும்.
காரணம் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய விலை எவ்வளவோ பரவாயில்லை. இந்தியாவை பொறுத்த வரை 1 மாதத்திற்கு ரூ.179 முதல் செலுத்தி அமேசான் பிரைம் மெம்பர் ஆகலாம்.
அதேபோல் காலாண்டு சந்தாத் தொகை ரூ.459 ஆகும். அதாவது மூன்று மாதத்திற்கு அமேசான் ப்ரைம் உறுப்பினராக இருக்க வேண்டும் பட்சத்தில் ரூ.459 செலுத்த வேண்டும்.
ஆண்டுத் திட்டமாக தேர்வு செய்ய விருப்பம் இருக்கும் பட்சத்தில், சந்தாத் தொகை ரூ.1,499 செலுத்தி 12 மாதத்திற்கு அமேசான் உறுப்பினராக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications