Home
News

பேருக்கு வழங்கும் தள்ளுபடி இல்ல இது! பட்ஜெட் முதல் ப்ரீமியம் போன் வரை எல்லாமே இருக்கு.!

Amazon பிரைம் போன் விற்பனையில் பல ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. மேலோட்டமான ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் எதுவும் வழங்காமல் முன்னணி விற்பனை ஸ்மார்ட்போன்களுக்கும் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்த ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 மற்றும் 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் கூடிய சியோமி 12 ப்ரோ ரூ.55,999க்கும், சாம்சங் கேலக்ஸி எஸ்22 ரூ.52,999 என தள்ளுபடி விலையிலும் கிடைக்கிறது. அதேபோல் ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனானது ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

பட்ஜெட் முதல் ப்ரீமியம் போன் வரை அனைத்துக்கும் தள்ளுபடி.!

ப்ரைம் போன்ஸ் பார்ட்டி

அமேசான் தனது தளத்தில் ஒரு புதிய விற்பனை நிகழ்வை நடத்துகிறது. இந்த விற்பனை நிகழ்வானது "ப்ரைம் போன்ஸ் பார்ட்டி" என அழைக்கப்படுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த விற்பனையின் பெயர் குறிப்பிடுவது போல் இது பிரைம் மெம்பர்ஷிப் உறுப்பினர்களுக்கு மட்டுமானது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. Samsung Galaxy S22, Xiaomi 12 Pro உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அமேசான் பிரைம் விற்பனை

அமேசான் பிரைம் விற்பனை தற்போதே நேரலையில் உள்ளது. குறுகிய காலத்திற்கு மட்டுமே இது கிடைக்கும். இந்த விற்பனை நிகழ்வானது ஜனவரி 8 2023 வரை நடைபெறுகிறது. HDFC வங்கி கார்ட் பயனர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும். தள்ளுபடியில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

சியோமி 12 ப்ரோ

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 மற்றும் 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் கூடிய சியோமி 12 ப்ரோ ரூ.55,999க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் உடன் ரூ.1000 தள்ளுபடி கூப்பனும் வழங்கப்படுகிறது. பை நவ் ஆப்ஷனை கிளிக் செய்வதற்கு முன் இந்த கூப்பனுக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட வங்கி கிரெட்டி கார்ட் பயன்படுத்தினால் ரூ.8000 வரை கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

பட்ஜெட் முதல் ப்ரீமியம் போன் வரை அனைத்துக்கும் தள்ளுபடி.!

பட்ஜெட் டூ மிட்-ரேன்ஜ்

மிட் ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருக்கும். Redmi K50i ஸ்மார்ட்போனை ரூ.22,999 என்ற விலையில் வாங்கலாம். அதேபோல் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. Redmi 11 Prime என்ற ஸ்மார்ட்போனை ரூ.11,999 என வாங்கலாம். இது 5ஜி ஸ்மார்ட்போனாகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. குறிப்பிட்ட வங்கி கார்ட்கள் பயன்படுத்தி இந்த போன் வாங்கினால் ரூ.1000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனை ரூ.10,999 என வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22

சாம்சங் நிறுவனத்தின் ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக இருக்கும் கேலக்ஸி எஸ்22 போன் மீண்டும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்22 போனை ரூ.52,999 என வாங்கலாம். உயர்நிலை சிப்செட் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் டைனமிக் அமோலெட் 2X டிஸ்ப்ளே மற்றும் சிறந்த கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் பேட்டரி ஆயுள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. அதேபோல் இதில் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வேகம் வழங்கப்பட்டிருக்கிறது.

Samsung Galaxy M13

Samsung Galaxy M13 ஸ்மார்ட்போனானது ரூ.9,999 என கிடைக்கிறது. பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை கூடுதலாக ரூ.1000 வங்கி தள்ளுபடியுடன் வாங்கலாம். அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்33 போன் ரூ.16,499 எனவும் கேலக்ஸி எம்32 பிரைம் போனை ரூ.12,499 எனவும் வாங்கலாம்.

அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே

அமேசானில் கூடுதலாக சில போனும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ரியல்மி நார்சோ 50 போன் ரூ.10,999 எனவும் ரியல்மி நார்சோ 50 ப்ரோ அமேசானில் ரூ.19,999 எனவும் விற்பனைக்கு கிடைக்கிறது. கூப்பன் மற்றும் வங்கி சலுகைகள் அடிப்படையில் கூடுதலாக ரூ.2000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியானது அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Prime Phone Sale 2022: Budget to Premium Smartphone Availbale at Huge Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X