வெறும் ரூ.129 விலையில் அமேசான் பிரைம் சந்தா வாங்கலாம் தெரியுமா? ஆனால் டிவிஸ்டை செக் செய்யுங்கள்..

|

அமேசான் இந்தியாவில் தனது பிரபலமான மாதாந்திர பிரைம் சந்தாவை மீண்டும் கொண்டு வந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதவர்களுக்கு இந்த அமேசான் பிரைம் மாதாந்திர சந்தா இப்போது வெறும் ரூ. 129 என்ற ஒருமுறை கட்டணத்தை மூலம் பயன்படுத்தக் கிடைக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் படி, அமேசான் நிறுவனம் மீண்டும் தனது ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செயலாக்க கூடுதல் காரணி அங்கீகாரத்தை (AFA) செயல்படுத்தக் கோரியதை அடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் அது நீக்கப்பட்டது.

அமேசான் பிரைம் சாந்தாவின் கீழ் இப்போது மூன்று திட்டங்களா?

அமேசான் பிரைம் சாந்தாவின் கீழ் இப்போது மூன்று திட்டங்களா?

அமேசான் நிறுவனம் இப்போது வரை தனது அமேசான் பிரைம் சாந்தாவின் கீழ் வெறும் இரண்டு திட்டங்களை மட்டுமே வழங்கி வந்தது. இதில் மூன்று மாத அமேசான் பிரைம் கிடைக்கும் சந்தா மற்றும் ஒருவருடம் செல்லுபடியாகும் வருடாந்திர பிரைம் சந்தாக்களை மட்டுமே வழங்கி வந்தது. ஆனால், அமேசான் இப்போது புதிதாக ஒரு மாதம் மட்டும் செல்லுபடியாகும் மாதாந்திர திட்டத்தை தற்போது அதன் சந்தா திட்டப் பட்டியலில் கீழ் சேர்த்துள்ளது.

ஒரு மாதம் செல்லுபடியாகும் திட்டத்தை தேர்வு செய்வதற்கு முன் இது கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

ஒரு மாதம் செல்லுபடியாகும் திட்டத்தை தேர்வு செய்வதற்கு முன் இது கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

இப்போது அமேசான் நிறுவனத்தின் தளத்தில் இந்த மாதாந்திர திட்டம் நேரலையில் உள்ளது. விருப்பம் உள்ள பயனர்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பு இந்த திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய நிபந்தனைகள் மற்றும் பயன்களை முழுமையாகத் தெரிந்துகொண்ட பின்னர் வாங்குவதற்கு முற்படுவது பாதுகாப்பானது. தெரியாதவர்களுக்கு, நிச்சயமாக இந்த மாதாந்திர சந்தா சில எச்சரிக்கைகளுடன் வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்க, இது அனைத்து மின்னணு முறைகளிலும் இது செல்லுபடியாகாது என்பதையும் கவனிக்க மறக்காதீர்கள்.

புதுசா ஒன்பிளஸ் 5ஜி போன் வாங்க ரெடியா? பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த மாடலை மிஸ் பண்ணிடாதீங்க..புதுசா ஒன்பிளஸ் 5ஜி போன் வாங்க ரெடியா? பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த மாடலை மிஸ் பண்ணிடாதீங்க..

அமேசான் இப்போது வரை வழங்கி வந்த அமேசான் பிரைம் சந்தாவின் விலை என்ன?

அமேசான் இப்போது வரை வழங்கி வந்த அமேசான் பிரைம் சந்தாவின் விலை என்ன?

இதற்கு முன்பும் அமேசான் இந்த மாதாந்திர திட்டத்தை வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் இ-காமர்ஸ் நிறுவனமானது, இப்போது பிரைம் மெம்பர்ஷிப்பிற்கான மூன்று சந்தா விருப்பங்களைத் தனது பயனர்களுக்காகப் பட்டியலிட்டுள்ளது. ரூ. 999 விலையின் கீழ் அமேசான் பிரைம் சேவைக்கான ஆண்டுத் திட்டம் கிடைக்கிறது. அதேசமயம், மூன்று மாத திட்டம் தள்ளுபடி விலையில் இப்போது வெறும் ரூ. 329 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 387 என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் ரூ. 129 விலையில் அமேசான் பிரைம் சந்தாவா?

வெறும் ரூ. 129 விலையில் அமேசான் பிரைம் சந்தாவா?

மேலே குறிப்பிட்ட இந்த இரண்டு திட்டங்களையும் பயன்படுத்தி பயனர்கள் அமேசான் தளத்திலிருந்து அனைத்து மின்னணு முறைகள் மூலமும் பொருட்களை வாங்கலாம். அதேபோல், இந்த ரூ. 129 என்ற மாதாந்திர ப்ரைம் சந்தா திட்டம் அமேசானில் மீண்டும் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் இதை வைத்துக் குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட டெபிட் கார்டுகள் மூலம் மட்டுமே பயனர்கள் அமேசான் இல் இருந்து பொருட்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்- விண்கலத்தை அனுப்பி சிறுகோளை திசை திருப்பும் நாசா: டார்ட் ஆரம்பம்!பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்- விண்கலத்தை அனுப்பி சிறுகோளை திசை திருப்பும் நாசா: டார்ட் ஆரம்பம்!

அமேசானின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

அமேசானின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

அமேசானின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கம் ரூ. 129 மாதாந்திர பிரைம் உறுப்பினர் ஆர்பிஐ-யின் இ-ஆணை வழிகாட்டுதல்களுக்கு இணங்க வங்கிகள் மூலம் மட்டுமே வாங்க முடியும். மாற்றங்களுக்கு இணங்காத அனைத்து வங்கிகளும் தானியங்கி கொடுப்பனவுகளுக்கான எந்த கோரிக்கைகளையும் செயல்படுத்த முடியாது. தெரியாதவர்களுக்கு, புதிய ஆன்லைன் விதிமுறைகள், தொடர்ச்சியான ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செயலாக்கக் கூடுதல் அங்கீகார காரணியை (AFA) செயல்படுத்தும்படி கேட்கிறது.

புதிய ஆர்பிஐ வழிகாட்டுதல் என்ன சொல்கிறது?

புதிய ஆர்பிஐ வழிகாட்டுதல் என்ன சொல்கிறது?

புதிய ஆர்பிஐ வழிகாட்டுதல்கள் காரணமாக, அமேசான் பிரைம் இலவச சோதனைக்கான புதிய உறுப்பினர் பதிவுகளை மறு அறிவிப்பு வரும் வரை அமேசான் நிறுத்தியது. அந்த மாற்றம் இன்னும் நடைமுறையில் உள்ளது. புதிய ரிசர்வ் வங்கி உத்தரவு வங்கிகள் ரூ. 5000 வரை மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு ஒரு முறை AFA ஐ பயன்படுத்துமாறு கேட்கிறது. கட்-ஆஃப் மேலே உள்ள பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு கட்டணத்திற்கும் AFA தேவைப்படும் என்று கூறியுள்ளது.

150 மில்லியன் கூகிள் பயனர்களுக்கு ஆட்டோமேட்டிக் பாதுகாப்பு நடவடிக்கை.. ஸ்கெட்ச் தெளிவா இருக்கு மக்களே.!150 மில்லியன் கூகிள் பயனர்களுக்கு ஆட்டோமேட்டிக் பாதுகாப்பு நடவடிக்கை.. ஸ்கெட்ச் தெளிவா இருக்கு மக்களே.!

மெசேஜ் இன்பாக்ஸ் செக் செய்து பாருங்கள்

மெசேஜ் இன்பாக்ஸ் செக் செய்து பாருங்கள்

இது தொடர்பான மெசேஜ்களை நீங்கள் உங்கள் வங்கியிடம் இருந்து இந்த வாரத்தில் பெற்றிருப்பீர்கள். இதை பற்றி அறியாதவர்கள் உங்கள் மெசேஜ் இன்பாக்ஸை ஒருமுறை செக் செய்துபாருங்கள். நுகர்வோர் தங்கள் அட்டைகளில் மீண்டும் பணம் செலுத்துவதைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்கள் முதன்முதலில் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. பல கட்ட தாமதங்களுக்குப் பிறகு இறுதியாக அக்டோபர் 1 ம் தேதி இந்த கட்டமைப்பானது நடைமுறைக்கு வந்துள்ளது. இது பற்றிய கூடுதல் செய்தியை அறிந்துகொள்ள எங்கள் பக்கத்தில் உள்ள தகவலைப் பார்வையிடுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Prime Monthly Subscription With Rs 129 Makes A Comeback Check The Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X