அமேசான் ப்ரைம் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய திட்டம்.!

அமேசான் ப்ரைம் சேவை கடந்த 2016-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு சேவை ஆகும், இது குறிப்பாக நெட்ஃபிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையாகும்.

|

அமேசான் ப்ரைம் சேவை கடந்த 2016-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு சேவை ஆகும், இது குறிப்பாக நெட்ஃபிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையாகும். இந்த அமேசான் ப்ரைம் சேவை அறிமுகம் செய்தபோது வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்கள் வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு இலவசமாக வீடியோ சேவைகளை வழங்கிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் ப்ரைம் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய திட்டம்.!

பின்னர் வருடாந்திர கட்டணம் ரூ.499 /-பணம் செலுத்த வேண்டியிருந்தது, அதன்பின்பு ஆண்டுக்கு ரூ 999/-செலுத்தி வாடிக்கையாளர்கள் ப்ரைம் சேவையை பயன்படுத்திவந்தனர். தற்சமயம் அமேசான் நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, அது என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ. 129/- திட்டம்:

ரூ. 129/- திட்டம்:

அமேசான் இப்போது மாத சந்தா ரூ. 129/- திட்டம் அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் குறிப்பாக வாடிக்கையாளர்கள் 30நாட்களுக்கு பயன்படுத்த முடியும், பின்பு உங்களுக்கு பிடித்த வீடியோக்களை இனிமேல் குறைந்த விலையில் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:

அமேசான் மாத சந்தா ரூ. 129/- திட்டத்தைப் பயன்படுத்தி சில புதிய திரைப்படங்கள், உங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை போன்ற அனைத்து வீடியோ சேவைகளையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் ப்ரைம் மியூஸிக்

அமேசான் ப்ரைம் மியூஸிக்

அமேசான் இந்தியாவின் பிரிவு, அமேசான் ப்ரைம் மியூஸிக் என்ற பாடல் ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கியுள்ளது. விளம்பரமில்லாத இந்த இசை ஸ்ட்ரீமிங் சேவையில் அலெக்சா என்ற டிஜிட்டல் உதவியாளரை வைத்து பிடித்தமான பாடல்கள், ஆல்பங்கள், கலைஞர்கள் பற்றி கேட்கலாம்.

 தமிழ்:

தமிழ்:

அமேசான் ப்ரைம் உறுப்பினர்களுக்கு இந்த சேவை முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும். ஆங்கிலம், தமிழ், இந்தி, பஞ்சாபி, பெங்காலி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் லட்சக்கணக்கான பாடல்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயலி

செயலி

ஆண்ட்ராய்ட் மொபைல்கள், ஆப்பிள் மொபைல்கள், டெஸ்க்டாப் என மூன்று தளங்களிலும் செயலிகள் மூலமாகவும் இந்த சேவையை பயன்படுத்தலாம். அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் அமேசான் எகோ கருவிகளிலும் இந்த இசை சேவையை பயன்படுத்தமுடியும்.

Best Mobiles in India

English summary
Amazon Prime Monthly Subscription Now Available in India at Rs. 129 Per Month : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X