ரூ. 500 விலை அதிகரிக்கும் Amazon Prime சந்தா.. ஆனால் 'இதை' உடனே செய்தால் உங்களுக்கு தான் லாபம்..

|

அமேசான் பிரைம் இந்தியாவில் மிகவும் பிரபலமான சந்தாக்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அமேசான் பிரைம் சந்தாவிற்கான ஒரு நிலையான தொகையைச் செலுத்துவதன் மூலம், பயனர்கள் அமேசான் தயாரிப்புகள் மற்றும் அமேசான் சேவைகளின் தொகுப்பை எளிமையான அணுக முடியும். அமேசான் நிறுவனத்தின் வலைத்தளம் அல்லது மொபைல் செயலி, அமேசான் பிரைம் வீடியோ, அமேசான் பிரைம் மியூசிக் போன்ற பல சேவையைப் பயனர்கள் பயன்படுத்த முடியும். இந்த பிரைம் சந்தாவிற்கான கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

அமேசான் பிரைம் சந்தாவின் விலை அதிகரிக்கிறதா? உண்மை தானா?

அமேசான் பிரைம் சந்தாவின் விலை அதிகரிக்கிறதா? உண்மை தானா?

அமேசான் மூலம் ஆன்லைன் ஆர்டர் செய்பவருக்கு அமேசான் பிரைம் சந்தா மிகவும் பயனுள்ளதாய் அமையும். அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பற்றி மக்கள் விரும்பும் விஷயங்களில் ஒன்று, அது அதிக விலை அல்ல என்பது தான். பயனர்கள் ஒரு முழுமையான வருடத்திற்கு ரூ. 999 செலவில் வாங்க முடியும். எனினும், இந்த விலை விரைவில் மாறப்போகிறது என்று சமீபத்திய தகவல் வெளிப்படுத்தியுள்ளது. அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் இந்தியாவில் விரைவில் ரூ. 500 என்ற விலை உயர்வைப் பெற உள்ளது என்று தெரியவந்துள்ளது.

அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் 50% அதிக விலை உயர்வை பெறுகிறதா?

அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் 50% அதிக விலை உயர்வை பெறுகிறதா?

அமேசான் பிரைம் உறுப்பினர்கள் அதன் தற்போதைய விலையை விட 50% அதிக விலை கொண்டதாக மாறப்போகிறது என்பதை நிறுவனத்தின் விளம்பரம் உறுதிப்படுத்தியுள்ளது. அமேசான் இந்தியா வலைத்தளத்தின் வலைப்பக்கத்தில் நிறுவனம் புதிய விலை மாதிரியைப் புதுப்பித்துள்ளது. புதிய விலை "மிக விரைவில்" தொடங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், இது எப்போது மாற்றப்படும் என்ற சரியான தேதியை நிறுவனம் தெரிவிக்கவில்லை என்பதனால், பழைய விலையில் சந்தாவை வாங்கிக்கொள்ள இன்னும் எவ்வளவு காலம் எஞ்சியுள்ளது என்பது தெரியவில்லை.

பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?

ரூ. 500 விலை உயர்வுக்கு பின்னர் அமேசான் பிரைமின் சந்தா விலை எவ்வளவு தெரியுமா?

ரூ. 500 விலை உயர்வுக்கு பின்னர் அமேசான் பிரைமின் சந்தா விலை எவ்வளவு தெரியுமா?

அமேசான் நிறுவனத்தின் அறிவிப்புப் படி, ரூ. 500 விலை உயர்வு அமல்படுத்தப்பட்டால், அமேசான் பிரைமின் வருடாந்திர பிரைம் சந்தாவின் புதிய விலை ரூ. 1,499 என்ற விலையில் கிடைக்கும். இந்த விலை உயர்வு வருடாந்திர திட்டத்திற்கு மட்டுமானதா என்று நீங்கள் கேட்கலாம், ஆனால், இது அனைத்து திட்டங்களின் மீதும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது என்பதே உண்மை. இத்துடன் காலாண்டு மற்றும் மாதாந்திர திட்டங்கள் கூட விலை உயர்வைக் காணுகிறது. இதன்படி, அம்சோனின் மாதாந்திர திட்டம் ரூ. 129 விலையிலிருந்து ரூ. 179 ஆகவும், காலாண்டுத் திட்டம் ரூ. 329 விலையிலிருந்து ரூ. 459 ஆகவும் மாறுகிறது.

5 ஆண்டுகளுக்கு பின் விலை அதிகரிக்கப்படும் அமேசான் பிரைம் சந்தா

5 ஆண்டுகளுக்கு பின் விலை அதிகரிக்கப்படும் அமேசான் பிரைம் சந்தா

அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அமேசான் பிரைம் இந்தியாவில் தொடங்கப்பட்டதிலிருந்து (5 ஆண்டுகளுக்கு முன்பு), நிறுவனம் பயனர்களுக்கு வழங்கும் மதிப்பை மட்டுமே அதிகரித்துள்ளது என்று கூறினார். அமேசான் பிரைம் சந்தா சில தொலைத்தொடர்பு ப்ரீபெய்ட் திட்டங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரைமின் சந்தா செலவு அதிகரிப்பதால் இதுபோன்ற திட்டங்கள் கூட விலை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ரூ. 449 விலை முதல் பவர் பேங்க் வாங்க இறுதி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..இன்னும் சில மணிநேரம் தான்..ரூ. 449 விலை முதல் பவர் பேங்க் வாங்க இறுதி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..இன்னும் சில மணிநேரம் தான்..

அமேசான் பிரைம் சந்தாவை வாங்குவதற்கு இது தான் சரியான நேரம்

அமேசான் பிரைம் சந்தாவை வாங்குவதற்கு இது தான் சரியான நேரம்

சந்தா விலையின் அதிகரிப்புடன் பிரைம் சந்தாதாரர்களுக்கு புதிய சலுகைகளை நேரடியாக சேர்க்கப் போவதாக நிறுவனம் எந்தவொரு தகவலையும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் எப்போதாவது அமேசான் பிரைம் சந்தாவைப் பெறுவது பற்றி யோசித்திருந்தால், இப்போது தான் அதற்கான சிறந்த நேரமாக இருக்கும் என்பதைக் கருத்தில்கொள்ளுங்கள். காரணம், விரைவில் நிறுவனம் விலை அதிகரிப்பை நடைமுறைப்படுத்தப்போவதால், அதற்கு முன்பே ஒரு வருடச் சந்தாவை வாங்குவது உங்களுக்குச் சிறந்த ஒப்பந்தமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Amazon Prime Membership Will Become 50 Percentage More Expensive Compared To The Current Plans : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X