திடீரென ரூ. 500 விலை அதிகரிக்கும் Amazon Prime சந்தா.. பழைய விலையில் திட்டத்தை வாங்க இது தான் இறுதி வாய்ப்பு..

|

அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பயன்படுத்தும் பயனர்களின் கவனத்திற்கு, வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் முதல் புதிய அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தாவிற்கான கட்டணம் 50 சதவீதம் வரை விலை உயரும் என்று கூறப்பட்டுள்ளது. அமேசான் செயலியின் புதிய ஸ்கிரீன்ஷாட், தற்போதைய வருடாந்திர பிரைம் மெம்பர்ஷிப் திட்டத்தின் விலையான ரூ. 999 விலையை காட்டுகிறது. ஆனால், டிசம்பர் 13 ஆம் தேதிக்குப் பின் அதிகரிக்கப்பட புதிய விலையில் மட்டுமே அமேசான் பிரைம் சந்தா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம் சாந்தாவின் கட்டணம் அதிகரிக்கிறதா?

அமேசான் பிரைம் சாந்தாவின் கட்டணம் அதிகரிக்கிறதா?

அமேசான் பிரைம் சாந்தாவின் கட்டணம் ரூ. 999 என்ற விலையில் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. அதன் பிறகு, Amazon Prime சந்தாவின் விலை உயர்த்தப்படும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாகக் கூறியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பின் படி, இனி அமேசான் பிரைம் சாந்தாவின் விலை ரூ. 1,499 ஆக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதன் படி, முன்பை விட அமேசான் பிரைம் சாந்தாவின் மீது நிறுவனம் ரூ. 500 அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட இது 50 சதவீத கட்டண உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon அதன் சந்தா திட்டத்தின் விலையை உயர்த்தப் போகிறது

Amazon அதன் சந்தா திட்டத்தின் விலையை உயர்த்தப் போகிறது

தெரியாதவர்களுக்கு, ஒரு மாதத்திற்கு முன்பு, Amazon நிறுவனம் அதன் சந்தா திட்டத்தின் விலையை உயர்த்தப் போகிறது என்ற செய்தியை உறுதிப்படுத்தியது. அதை நாங்களும் முன்பே தெரிவித்திருந்தோம், ஆனால் மாற்றத்திற்கான சரியான தேதி வெளியிடப்படவில்லை என்று கூறியிருந்தோம். இப்போது, நிறுவனம் அதன் பக்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவலை வெளிப்படுத்தியுள்ளது. Desi Dime மன்றங்களில் உள்ள ஒரு சமூக உறுப்பினர் Amazon செயலியில் இருந்து ஒரு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

வாட்ஸ்அப் ட்ரிக்ஸ்: சேட்டிங்கை எதுக்கு டெலிட் செய்யனும்., மறைத்து வைக்கலாமே- சிம்பிள் பாஸ்!வாட்ஸ்அப் ட்ரிக்ஸ்: சேட்டிங்கை எதுக்கு டெலிட் செய்யனும்., மறைத்து வைக்கலாமே- சிம்பிள் பாஸ்!

பழைய விலையில் அமேசான் பிரைம் கிடைக்கும் நாள் இது தான்

பழைய விலையில் அமேசான் பிரைம் கிடைக்கும் நாள் இது தான்

இதன்படி, வரும் டிசம்பர் 13 ஆம் தேதி முதல் புதிய Amazon Prime சந்தா விலைகளுக்குத் திட்டங்கள் மாற்றப்படுவதை உறுதிப்படுத்துகிறது. புதிய விலைகள் Amazon ஆல் முன்பே உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது வெளியான தகவலின் படி, அமேசான் பிரைம் ஒரு ஆண்டு சந்தாவிற்கான திட்டம் ரூ. 1,499 விலையில் கிடைக்கும் என்று நிறுவனத்தின் விளம்பரம் காட்டுகிறது. இதற்கு முன்னர், இந்த திட்டத்தின் விலை வெறும் ரூ. 999 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அமேசான் பிரைம் சந்தா பட்டியலின் கீழ் கிடைக்கும் மூன்று மாத திட்டத்தின் விலையிலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எந்தெந்த திட்டங்களில் எவ்வளவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது?

எந்தெந்த திட்டங்களில் எவ்வளவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது?

புதிய விலை அதிகரிப்பிற்குப் பின்ன அமேசான் பிரைம் சாந்தாவின் மூன்று மாத திட்டம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதிக்குப் பின்னர் ரூ. 459 என்ற விலையில் கிடைக்கும் என்று அமேசான் நிறுவனத்தின் விளம்பரம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் இப்போது வரை வெறும் ரூ. 329 விலையில் கிடைக்கிறது. தெரியாதவர்களுக்கு, அமேசான் நிறுவனம் சமீபத்தில் அதன் அமேசான் பிரைம் சந்தாவிற்கான ஒரு மாத திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்தது. அதன் படி, அமேசான் பிரைம் சந்தாவின் ஒரு மாத திட்டம் இனி ரூ. 179 விலையில் கிடைக்கும்.

மீண்டும் தாக்குதலை துவங்கிய ஜோக்கர் மால்வேர்.. இந்த 15 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்..மீண்டும் தாக்குதலை துவங்கிய ஜோக்கர் மால்வேர்.. இந்த 15 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்..

திதாக அமேசான் சந்தா வாங்க நினைக்கும் பயனர்கள் கவனத்திற்கு

திதாக அமேசான் சந்தா வாங்க நினைக்கும் பயனர்கள் கவனத்திற்கு

இதற்கு முன்பு இந்த திட்டம் வெறும் ரூ. 129 விளையில் கிடைக்கிறது. அமேசான் பிரைம் சந்தாவிற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாக அமேசான் சந்தா வாங்க நினைக்கும் பயனர்கள் டிசம்பர் 13 ஆம் தேதிக்கு முன்னர் அவர்களுக்குத் தேவையான சந்தாவை வாங்கிக்கொண்டாள் முடிந்த வரை புதிய விலை அதிகரிப்பின் இருந்து தப்பிக்க முடியும். அதனால், அமேசான் பிரைம் சந்தாவைப் புதுப்பிக்க வேண்டிய பயனர்கள் அதை விரைவில் செய்வது பணத்தை மிச்சம் பிடிக்க உதவும்.

ரூ. 500 அதிகரிக்கப்படும் அமேசான் பிரைம் சந்தா

ரூ. 500 அதிகரிக்கப்படும் அமேசான் பிரைம் சந்தா

ஏனெனில் வருடாந்திர உறுப்பினர் சந்தாவிற்கான கட்டணம் ரூ. 500 அதிகரிக்கிறது. இந்த கட்டணத்தைத் தவிர்க்க விரும்பும் பயனர்கள் இப்போது கிடைக்கும் விலையில் அவர்களின் சந்தாவை வாங்கி பயன்பெற முடியும். புதிய பிரைம் உறுப்பினர் கட்டணத்தைக் காட்டும் அமேசான் தனது வலைப்பக்கத்தைக் கூட புதுப்பித்துள்ளது. பழைய விலையில் சந்தாவை வாங்க டிசம்பர் 13 கடைசி நாள் என தற்போது தெரிய வந்துள்ளது. விலைகள் உயர்த்தப்பட்டாலும், அமேசான் பிரைம் சந்தா நன்மைகள் அப்படியே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமிக்குள் வரும் சிறுகோள்களை அழிக்க செயற்கைகோள்.. SpaceX மற்றும் NASA திட்டம் என்ன தெரியுமா?பூமிக்குள் வரும் சிறுகோள்களை அழிக்க செயற்கைகோள்.. SpaceX மற்றும் NASA திட்டம் என்ன தெரியுமா?

Prime சாந்தாவின் கீழ் என்ன-என்ன நன்மைகள் கிடைக்கும்?

Prime சாந்தாவின் கீழ் என்ன-என்ன நன்மைகள் கிடைக்கும்?

இலவச நிலையான டெலிவரிக்கும், குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு இல்லாமல் சரியான நேரத்தில் டெலிவரி, தகுதியான சந்தா முகவரிகளுக்கு ஒன்று முதல் இரண்டு நாள் டெலிவரியை இந்த அமேசான் பிரைம் உறுப்பினர் சந்தா இலவசமாக வழங்குகிறது. இது Prime Video மற்றும் Prime Music உள்ளடக்கத்திற்கான அணுகலையும் வழங்குகிறது. கூடுதலாக, Amazon Prime உறுப்பினர் அமேசான் Pay ICICI வங்கி கிரெடிட் கார்டு மூலம் Amazon ஷாப்பிங்கில் வரம்பற்ற 5 சதவீத வெகுமதி புள்ளிகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி வாய்ப்பை நழுவவிடாதீர்கள்

இறுதி வாய்ப்பை நழுவவிடாதீர்கள்

பிரைம் கேமிங்கில் பிரபலமான மொபைல் கேம்களில் இலவச இன்-கேம் உள்ளடக்கத்திற்கான அணுகல் மற்றும் சுழலும் தேர்வுக்கான இலவச அணுகலை வழங்குகிறது. முதன்மை வாசிப்பு கொண்ட புத்தகங்களுக்கும் இந்த சந்தா செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் பிரைம் சாந்தாவின் கட்டணம் திடீரென உயர்த்தப்படுவதால், அமேசான் பிரைம் பயனர்கள் உங்களின் முந்தைய திட்டம் முடியும் நாட்களைக் கருத்தில் கொண்டு, முன்பே அமேசான் பிரைம் சந்தாவைப் பழைய விலையில் வாங்கி பயன்பெற இதுவே இறுதி வாய்ப்பு என்பதை மறக்க வேண்டாம். டிசம்பர் 13 ஆம் தேதிக்கு பின்னர் ரூ. 500 கூடுதல் செலுத்த வேண்டியது இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Prime Membership to Get Costlier by Up to 50 Percent From December 13 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X