Amazon அறிவித்துள்ள திடீர் ரூல்.. Prime மெம்பர்கள் இனி எக்ஸ்ட்ராவாக ரூ.249 செலுத்தணும்.. இல்லனா?
நெட்பிளிக்ஸ் (Netflix), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) மற்றும் அமேசான் பிரைம் (Amazon Prime) போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் தங்கள் வருவாய் மற்றும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை எப்படியெல்லாம் அதிகரிக்கலாம் என்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்துவது போல் தெரிகிறது.
சமீபத்தில் டிஸ்னி நிறுவனமானது (நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை போலவே) பயனர்கள் தத்தம் பாஸ்வேர்ட்களை மற்றவர்களுடன் பகிர்வதை தடுக்க, அதற்கு தனியாக கட்டணம் செலுத்தும்படி கேட்கப்போவதாக அறிவித்திருந்தது. இப்படி செய்வதன் மூலம் அதிக லாபம் பார்க்க முடியும் அல்லது அதிக சந்தாதாரர்களை சேர்க்க முடியும் என்பது வெளிப்படை.

இதற்கிடையில் அமேசான் பிரைம் ஆனது தனது ஸ்டாண்டர்ட் சர்வீஸில் இருந்து டால்பி விஷன் எச்டிஆர் மற்றும் டால்பி அட்மோஸ் சரவுண்ட் சவுண்ட் அம்சங்களை நீக்கியுள்ளது. அதோடு உயர்தர ஆடியோ மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங்கை அணுக கூடுதல் கட்டணம் செலுத்துமாறு பயனர்களைக் கேட்கிறது.
தனது கட்டண சந்தாவில் விளம்பரங்களை சேர்த்தது மட்டுமல்லாமல், உயர்தர ஆடியோ மற்றும் வீடியோ விருப்பத்தையும் நீக்கியுள்ளதை அமேசான் நிறுவனமே உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது, மேற்குறிப்பிட்ட ஆடியோ மற்றும் வீடியோ குவாலிடிடியை மீட்டெடுக்கவும், விளம்பரங்களை அகற்றவும் பயனர்கள் இப்போது தங்கள் அமேசான் பிரைம் சந்தாவின் மேல் கூடுதலாக மாதம் $2.99 (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.249) செலுத்த வேண்டும்.

இங்கே இந்தியர்களுக்கான நல்ல செய்தி என்னவென்றால், நெட்பிளிக்ஸ் நிறுவனமானது பாஸ்வேர்ட் ஷேரிங்கிற்கான கூடுதல் கட்டணத்தை (தற்போது வரையிலாக) சில வெளிநாடுகளில் மட்டுமே வசூலிக்கிறது. அது எப்போது இந்தியாவிற்கும் வரும் என்பது குறித்து தகவல் இல்லை. அதேபோல டிஸ்னி நிறுவனமும் பாஸ்வேர்ட் ஷேரிங் கட்டணத்தை மார்ச் 2024 முதலே அமல்படுத்த திட்டமிட்டுள்ளது
இதுகுறித்து பேசிய டிஸ்னியின் தலைமை நிதி அதிகாரியான ஹக் ஜான்ஸ்டன், பல டிஸ்னி பிளஸ் அக்கவுண்ட்கள் ஆனது "முறையற்ற பகிர்வு" (Improper Sharing) என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே வருகிற மார்ச் 2024 முதல், பயனர்கள் தத்தம் பாஸ்வேர்ட்களை பகிர்வதை கட்டுப்படுத்த உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படலாம். இதன்கீழ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வைத்திருக்கும் ஒரு நபர், தனது வீட்டிற்கு வெளியே வசிப்பவர்களை தனது அக்கவுண்டில் சேர்க்க விரும்பினால் அதற்கு கூடுதலாக கட்டணம் (Extra Charges) செலுத்த வேண்டி இருக்கும் (அதாவது நெட்பிளிக்ஸ் என்ன செய்கிறதோ அதை அப்படியே டிஸ்னியும் செய்யவுள்ளது).
இப்படியாக, ஸ்ட்ரீமிங் தளங்களின் லாப நோக்கமானது, ஸ்ட்ரீமிங் சேவைகளின் மீதான விலை உயர்விற்கு வழிவகுக்கும் என்பதிலும், வரும் மாதங்களில் அது இந்திய பயனர்களை பாதிக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். தற்போது இந்தியாவில் பிரைம் மெம்பர்ஷிப் ஆனது ஆண்டுக்கு ரூ.1499 க்கும், ஒரு மாதத்திற்கு ரூ.299 க்கும், ஒரு வருடத்திற்க்கான பிரைம் லைட் திட்டம் ரூ.799 க்கும் கிடைக்கிறது.
நெட்பிளிக்ஸின் மாதாந்திர திட்டங்களை பொறுத்தவரை, மொபைல் பிளான் ஆனதுரூ.149 க்கும், பேஸிக் பிளான் ஆனது ரூ.199 க்கும், ஸ்டாண்டர்ட் பிளான் ஆனது ரூ.499 க்கும், பிரீமியம் பிளான் ஆனது ரூ.649 க்கும் கிடைக்கிறது. ஸ்டாண்டர்ட் நெட்பிளிக்ஸ் திட்டமானது ஃபுல் எச்டி 1080பி குவாலிட்டியின் கீழ் ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களில் ஸ்ட்ரீமிங் செய்ய அனுமதிக்கிறது. பிரீமியம் திட்டமானது ஒரே நேரத்தில் நான்கு டிவைஸ்களில் கன்டென்ட்டை பார்க்க அனுமதிக்கும்.
முன்னரே குறிப்பிட்டபடி, ஆடியோ மற்றும் வீடியோ குவாலிட்டியில் சமரசம் செய்வது, பாஸ்வேர்ட் ஷேரிங்கை கட்டுப்படுத்துவது போன்ற விஷயங்களுக்கு பின்னால் இருப்பது - லாப நோக்க மட்டுமே ஆகும். இதுபோன்ற நடவடிக்கைகள் இந்நிறுவனங்களின் வருவாயை கணிசமாக அதிகரிக்கும். முக்கியமான பாஸ்வேர்ட் ஷேரிங் செய்யும பணம் செலுத்தும் சந்தாதார்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், நல்ல லாபத்தை பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications