Amazon Prime-அ இப்படி கம்மி காசுக்கும் கூட வாங்கலாமா? இந்த சமாச்சாரம் தெரியாம போச்சே.!
அமேசான் தளத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் மூலம் ஷாப் செய்யும் பழக்கத்தை மக்கள் இப்போது அதிகம் விரும்புகின்றனர். பெரும்பாலானோர், இந்த ஷாப்பிங் தளத்தைப் பயன்படுத்த துவங்கியதில் இருந்து, ஆர்டர் செய்யும் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் விநியோகம் செய்வதில் தாமதங்கள் ஏற்படத் துவங்கிவிட்டது.
இதனால், நிறுவனம் ஸ்மார்ட் ஆக யோசித்து, அமேசான் வாடிக்கையாளர்களுக்காகப் பிரத்தியேகமாக அறிமுகம் செய்த சேவை தான் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா. இந்த சந்தாவை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் ஆர்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதேபோல், இவர்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் அதே நாள், அல்லது 1 நாளுக்குள் டெலிவரி செய்யப்படும்.

இத்துடன், அமேசான் தளத்தில் மற்ற OTT சேவைகள் மற்றும் மியூசிக் சேவைகள் என்று பல நன்மைகளும் பயன்படுத்தக் கிடைக்கிறது. ஆனால், இந்த அமேசான் பிரைம் சாந்தாவின் விலை சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. இதனால், பலரால் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து, மெம்பர்ஷிப் சந்தாவை வாங்க முடியவில்லை. இதனால், நிறுவனம் இப்போது ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக பிரைம் லைட் என்ற புதிய சந்தா சேவையை அமேசான் சோதித்து வருகிறது. பீட்டா பதிப்பாக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்தச் சேவை தற்போது கிடைக்கிறது, இதன் அறிமுக விலை வெறும் ரூ. 999 மட்டுமே. இதுவும், அமேசான் பிரைம் அசல் சந்தாவை போல 1 வருடச் செல்லுபடியுடன் வருகிறது.
புதிய அமேசான் பிரைம் லைட் மற்றும் அமேசான் பிரைம் சேவைக்கு நடுவே சில முக்கிய வேறுபாடுகளுடன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பலன்கள் மற்றும் சேவைகளை நிறுவனம் வழங்குகிறது. ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், புதிய பிரைம் லைட் மெம்பர்ஷிப்பில் Amazon Prime Musicக்கான அணுகல் இல்லை. அதேபோல், பிரைம் லைட் பயனர்கள் கட்டணமில்லா EMI, இலவச இ-புக்ஸ் அல்லது பிரைம் கேமிங் சேவைக்கு தகுதி பெற மாட்டார்கள்.

டெலிவரி அடிப்படையில், அமேசான் பிரைமின் அதே நாள் அல்லது ஒரு நாள் டெலிவரியை வழங்குகிறது. அமேசான் பிரைம் லைட், இதற்கு மாறாக, இரண்டு நாள் டெலிவரியை வழங்குகிறது. பிரைம் லைட் பயனர்கள் ப்ரைம் வீடியோவில் வரம்பற்ற உள்ளடக்கத்தை அணுக முடியும். ஆனால் இது HD வடிவத்தில் இருக்காது மற்றும் விளம்பரங்களைக் கொண்டிருக்கும்.
உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை இது இரண்டு சாதனங்களில் ஒரே நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. அதில் ஒன்று மொபைல் ஃபோனாக இருக்க வேண்டும் என்று அமேசான் பிரைம் லைட் விதிமுறைகள் குறிப்பிடுகிறது. இந்தியாவில் அமேசான் பிரைம் ஆண்டு சந்தா விலையை ரூ. 999 இலிருந்து நிறுவனம் கடந்த டிசம்பர் 2021 ஆம் மாதம் ரூ. 1499 ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய Amazon Prime Lite சந்தா சலுகை முந்தைய விலையான ரூ. 999 விலையில் நிறுவனம் இப்போது பீட்டா பயனர்களுக்கு வழங்கி சோதனை செய்து வருகிறது. அமேசான் பிரைமின் அனைத்து நன்மைகளும் தேவைப்படாத பயனர்களுக்கு இந்த பிரைம் லைட் சந்தா மிகவும் மலிவு விலை விருப்பமாகும்.
அமேசானின் பிரைம் லைட் சேவை தற்போது பீட்டா சோதனையில் உள்ளது மற்றும் இந்தியாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் இந்த சேவை எப்போது கிடைக்கும் என்பதை நிறுவனம் இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்தியாவில் இந்த பிரைம் லைட் சேவை மிக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








