Home
News

குறைந்த விலையில் புதிய Amazon பிரைம் லைட் சந்தா அறிமுகம்! இனி அதிக கட்டணமில்லை!

அமேசான் நிறுவனம் தற்போது இந்திய பயனர்களுக்கு புதிய லைட் வெர்ஷன் அமேசான் பிரைம் சந்தாவை வழங்க துவங்கியுள்ளது. வழக்கமான அமேசான் பிரைம் சந்தா போன்று இல்லாமல், குறைந்த விலையில் அதற்கு நிகரான நன்மைகளை அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்குகிறது.

அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் இந்தியாவில் புகழ்பெற்ற ஷாப்பிங் மற்றும் OTT சந்தாவாக திகழ்கிறது. மற்ற சந்தாக்களைக் காட்டிலும், இத்துடன் வழங்கப்படும் சேவைகள் அதிகமாகவுள்ளது. இப்போது, ​​நிறுவனம் இந்தியாவில் அமேசான் பிரைம் லைட் மெம்பர்ஷிப் எனப்படும் புதிய சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது வழக்கமான பிரைம் சந்தாவை விட குறைந்த விலையில் வழங்கப்படும் சந்தா திட்டமாக திகழ்கிறது.

குறைந்த விலையில் புதிய Amazon பிரைம் லைட் சந்தா அறிமுகம்!

தற்போது வரை, இந்திய அமேசான் பிரைம் பயனர்களுக்கு சந்தா திட்டத்தின் விலை ஒரு ஆண்டுக்கு ரூ.1,499 என்ற கட்டணத்துடன் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், தற்போது அறிமுகம் செய்யப்படும் புதிய அமேசான் பிரைம் லைட் உறுப்பினர் சந்தா திட்டம் ஒரு வருடத்திற்கு ரூ. 999 செலவில் கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது. இது வழக்கமான பிரைம் சந்தாவின் விலையை விட மிகவும் மலிவானது.

அமேசானின் பிரைம் லைட் சந்தா இலவச இரண்டு நாள் டெலிவரியை வழங்கும். அதே நேரத்தில் ஒரே நாள் மற்றும் ஒரு நாள் டெலிவரி நிலையான பிரைம் மெம்பர்ஷிப்பிற்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நிறுவனம் தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளது. அமேசான் பிரைம் லைட் பயனர்களின் தகுதியான முகவரிகளுக்கு இலவச பாஸ்ட் டெலிவரி அணுகலைப் பெறுவார்கள் மற்றும் இத்துடன் ரூ.25 கேஷ்பேக் நன்மையையும் பெறுவார்கள்.

கூடுதலாக, தகுதியான முகவரிகளுக்கு வேகமான மார்னிங் டெலிவரி அம்சத்தை பயன்படுத்த ஒரு பொருளுக்கு ரூ.175 என்ற விலையில் கிடைக்கிறது. அமேசான் பிரைம் சந்தாவுடன் ஒப்பிடுகையில், நிலையான பிரைம் சந்தா ஒரு பொருளுக்கு ரூ.50 என்று விலைக்கு மேல் இதே பலனை வழங்குகிறது. இருப்பினும், லைட் சந்தாவுடன் இலவச நிலையான டெலிவரிக்கு குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு என்று எதுவுமில்லை.

அடுத்து, Amazon Pay மூலம் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டைக் கொண்ட சந்தாதாரர்கள் டிஜிட்டல் மற்றும் கிஃப்ட் கார்டு தவிர, அனைத்து பரிவர்த்தனைக்கு 5% கேஷ்பேக்கைப் பெறலாம். பிரைம் உறுப்பினர்களைப் போலவே பிரைம் லைட் உறுப்பினர்களுக்கும், லைட்னிங் டீல்கள், பிரத்யேக லைட்னிங் டீல்கள் மற்றும் டீல் ஆஃப் தி டே ஆகியவற்றுக்கான ஆரம்ப அணுகலை அணுகி ஷாப்பிங் செய்யலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

பிரைம் லைட் மெம்பர்ஷிப்பில் பிரைம் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைக்கான வரம்பற்ற அணுகலுடன் வருகிறது. இருப்பினும், விளம்பரங்களுடன் கூடிய உயர் வரையறை (HD) தரத்தில் ஸ்ட்ரீமிங் செய்தல் மற்றும் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுக்குப் பயன்படுத்துதல் போன்ற சில வரம்புகள் அமேசான் பிரைம் லைட் சந்தாவில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. பிரைம் லைட் உறுப்பினர்களுக்கு விலையுயர்ந்த திட்டத்துடன் ஒப்பிடுகையில், பிரைம் ரீடிங் மற்றும் அமேசான் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகள் கிடைக்கிறது.

அதேபோல், 4K தரத்தில் பிரைம் வீடியோ ஸ்ட்ரீமிங், அதிக சாதனங்களுக்கான ஆதரவு, விளம்பரமில்லா வீடியோக்கள், தயாரிப்புகளில் கட்டணமில்லா EMI போன்ற நன்மைகளும் கிடைக்கிறது. 6 மாதங்கள் இலவச டிஸ்பிளே எக்ஸ்சேஞ், Amazon பேமிலி சலுகைகள் மற்றும் கேமிங் சலுகைகள் என்று அனைத்து வகையான அமேசான் நன்மைகளையும் இந்த சந்தா வழங்குகிறது. .

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Prime Lite Membership Launched At Rs 999 In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X