ஐபோன் 14 மீது கிடைக்கும் அமேசான் vs பிளிப்கார்ட் தள்ளுபடி! எது பெஸ்ட்.. எதில் அதிக லாபம்?
அமேசான் பிரைம் டே சேல்ஸ் (Amazon Prime Day sale) துவங்கி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மறுபுறம், அமேசானின் போட்டியாளரான பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனமும் அதன் சிறப்பு விற்பனையான பிக் சேவிங் டேஸ் சேல் விறபனையை இன்று துவங்கியுள்ளது.
ஒருபுறம் அமேசான் இன் அமேசான் பிரைம் டே சேல் விற்பனை களைக்கட்டுகிறது. மறுபுறம் பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் சேல் (Big Saving Days sale) விற்பனை குதூகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த இரண்டு தளங்களிலும் இப்போது எண்ணில் அடங்காத அளவிற்கு பல தயாரிப்புகளின் மீது சலுகை (offers) மற்றும் சிறப்பு தள்ளுபடிகள் (discounts) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சில பொருட்கள் அமேசான் தளத்திலும் சலுகையுடன் வாங்க கிடைக்கிறது. அதே பொருள், பிளிப்கார்ட் தளத்திலும் தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது. இதனால், பொருட்களை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் உருவாகிறது. அப்படி இரண்டு தளங்களிலும் காணப்படும் ஒரு சாதனமாக ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14) உள்ளது.
ஐபோன் 14 மற்றும் அதன் சீரிஸ் இல் உள்ள மற்ற சாதனங்கள் மீதும் தற்போது சலுகைகள் இரண்டு தளங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் (Amazon vs Flipkart) ஆகிய இந்த இரண்டு தளங்களில் எந்த தளத்தில் அதிக சலுகையுடன், மிகவும் குறைந்த விலையில் ஐபோன் 14 வாங்க கிடைக்கிறது என்ற தகவலை தான் பார்க்கப்போகிறோம்.
உண்மையை சொல்ல போனால், ஐபோன் 14 (iPhone 14) சாதனத்தை மிகவும் குறைந்த விலையில் வாங்க இதுவே சரியான நேரமாகும். ஐபோன் 14 மீது தற்போது கிடைக்கும் Amazon சலுகை மற்றும் Flipkart சலுகையை ஒப்பிட்டு பார்த்து, எது அட்டகாசமான சலுகை என்பதை கண்டறிய போகிறோம். எந்த தாளத்தில் இருந்து புதிய ஐபோனை வாங்கினால் பணம் மிச்சமாகும் என்பதையும் தெரிந்துகொள்ள போகிறோம்.

அமேசான் பிரைம் டே (Amazon Prime Day) விற்பனையில், புதிய ஐபோன் 14 மாடலை வெறும் ரூ.65,499 என்ற அதிரடி தள்ளுபடி விலையில் நாம் வாங்கலாம். இந்த தளத்தில் ஐபோன் 14 ரூ.66,999 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. வங்கிச் சலுகைகளுடன், iPhone 14 மீது ரூ.1,500 வரை தள்ளுபடி கிடைக்கும். கூடுதலாக ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ் தள்ளுபடியும் கிடைக்கிறது.
ஐபோன் 14 இன் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் (ரெட் - Red) பிளிப்கார்ட் வழியாக வெறும் ரூ.67,999 க்கு வாங்க கிடைக்கிது. ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடி மற்றும் EMI விருப்பத்திற்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. Flipkart ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுக்கு 5% தள்ளுபடி மற்றும் ரூ.500 வரை சலுகை கிடைக்கிறது.
சிட்டி கிரெடிட் கார்டுக்கு 10% உடனடி தள்ளுபடி மற்றும் EMI விருப்பத்தின் மீது ரூ.1,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த இரண்டு சலுகைகளையும் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டும் ஏறக்குறைய ஒரே அளவிலான சலுகையை தான் வழங்குகிறது என்றாலும், அமேசான் இன் சலுகை அணைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரே மாதிரியாக கிடைக்கிறது.
ஆனால், பிளிப்கார்ட் அறிவித்துள்ள சலுகை குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் விதத்தில் அமைந்துள்ளது. இறுதியில், அமேசான் வழங்கும் ஐபோன் 14 சலுகை தான் சிறந்ததாக தெரிகிறது. உங்களுக்கு எது பிடித்தமான தளமோ அங்கிருந்து விரும்பிய பொருட்களை வாங்குவது சிறந்தது. வங்கி சலுகையுடன் பொருட்களை வாங்க பிளிப்கார்ட் பெஸ்ட்டானது.


Click it and Unblock the Notifications








