அமேசான் பிரைம் டே விற்பனை தேதி அறிவிப்பு.. இம்முறை 'இவர்களுக்கும்' வாய்ப்பு வழங்கும் அமேசான்..
அமேசான் பிரைம் டே விற்பனை வரும் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி மறுநாள் முடிவடையும் என்று நிறுவனம் தற்பொழுது டிவிட்டர் வாயிலாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பிரைம் டே விற்பனையுடன், அமேசான் இந்தியா நிறுவனம் இந்தியாவில் உள்ள கைவினைஞர்கள், உற்பத்தியாளர்கள், சிறு வணிகங்கள், தொடக்க நிறுவனங்கள், பெண்கள் தொழில்முனைவோர், நெசவாளர்கள் மற்றும் உள்ளூர் கடைகளைக் கொண்ட வியாபாரிகளின் விற்பனையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

Amazon பிரைமின் ஐந்தாவது ஆண்டு 'பிரைம் டே விற்பனை'
இது இந்தியாவில் பிரைமின் ஐந்தாவது ஆண்டு விழாவாகும், மேலும் இந்த விற்பனை வகைகளில் ஏராளமான தள்ளுபடிகள் மற்றும் நம்ப முடியாத பல புதிய ஒப்பந்தங்களை அமேசான் கொண்டு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரைம் டே விற்பனையை எதிர்பார்த்துக் காத்திருந்த தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்காக அமேசான் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எத்தனை நாட்கள் பிரைம் டே விற்பனை நடைபெறுகிறது?
அமேசான் இந்தியா வெளியிடத் தகவலில், அமேசான் பிரைம் டே விற்பனையின் தேதியை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது வரும் ஜூலை 26 ஆம் தேதி 12 மணி (நள்ளிரவு) தொடங்கி ஜூலை 27 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று நிறுவனம் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளது. இது அமேசான் பிரிவுகளில் உள்ள பல தயாரிப்புகள் மீது தள்ளுபடிகள், ஒப்பந்தங்கள் மற்றும் சேமிப்புகளைக் கொண்டுவரும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

300 -க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் இம்முறை அறிமுகம்
இத்துடன் இந்த பிரைம் டே விற்பனையின் போது அமேசான் நிறுவனம் 300 -க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது என்றும் நிறுவனம் கூறியுள்ளது. லாஞ்ச்பேட், சஹேலி, அமேசானில் உள்ள உள்ளூர் கடைகள், மற்றும் கரிகர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் விற்பனையாளர்களிடமிருந்து வரும் தயாரிப்புகள் குறித்த ஒப்பந்தங்கள் இந்த விற்பனையில் இடம்பெறும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

சிறிய விற்பனையாளர்களுக்கும் இம்முறை வாய்ப்பு
இந்த இரண்டு நாள் சிறப்பு விற்பனைக்குத் தயாராவதற்கு, அமேசானில் ஏராளமான சிறிய விற்பனையாளர்கள் ஜூலை 8 முதல் 2021 ஜூலை 24 வரை தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான புதிய ஒப்பந்தங்களை அமேசான் தளத்தில் உருவாக்கவுள்ளனர் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஸ்மார்ட்போன்கள், டி.வி.க்கள், உபகரணங்கள், நுகர்வோர் மின்னணுவியல், அமேசான் சாதனங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய "புதிய அறிமுகங்கள் மற்றும் சிறந்த ஒப்பந்தங்களின் வரம்பை" இந்த விற்பனையில் நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications