இதுக்கெல்லாம் இப்போ நேரமில்ல: கொரோனாவால் இதை ஒத்தி வைத்த அமேசான்!

|

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் அமேசான் இந்தியா ஜூன் மாதத்தில் உலகளாவிய பிரைம் தின விற்பனையை ஒத்தி வைத்திருக்கிறது.

அமேசான் பிரைம் தின விற்பனை

அமேசான் பிரைம் தின விற்பனை

அமேசான் பிரைம் தின விற்பனை ஒத்திவைக்கப்படுவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. அமேசான் பிரைம் தின விற்பனை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினல் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் கனடாவில் பிரைம் தின விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் புதுப்பிப்பு தேதிகள் மற்றும் பிற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும் அமேசான் இந்தியா விரைவில் இதை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்று இரண்டாம் அலை

கொரோனா தொற்று இரண்டாம் அலை

அதேபோல் கடந்தாண்டு ஜூலை மாதம் நடைபெற இருந்த அமேசான் பிரைம் தின விற்பனை அக்டோபர் வரை பெரும்பாலான உலக சந்தையில் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் விற்பனை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது விற்பனையாளர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் பயனளிக்கும் என்பதால் இது கண்டிப்பாக நடைபெறும் ஆனால் ஜூன் மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய அரசு உத்தரவுக்கு இணங்க டெலிவரி

மத்திய அரசு உத்தரவுக்கு இணங்க டெலிவரி

ஆன்லைன் வலைதளங்கள் அனைத்தும் மத்திய அரசின் உத்தரவுக்கு இணங்கவே செயல்பட்டு வருகிறது, அதன்படி அமேசான் தற்போது அமேசான் பிரைம் தின விற்பனையை ஒத்தி வைத்திருக்கிறது. மேலும் அத்தியாவசிய மட்டும் உத்தரவுக்கு ஏற்ப பூட்டுதல் இடங்களிலும் அமேசான் வழங்கி வருகிறது.

உணவு, மளிகை, மருத்துவ பொருட்களை மட்டும் நாடு முழுவதும் இ-காமர்ஸ் தளம் அதிக அளவில் விற்பனை செய்து வருகிறது. கோவிட்-19 பரவலை தடுக்க ஏப்ரல்முதல் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. இந்த சமயத்தில் உணவு, மளிகை, மருத்துவ பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றன.

தடுப்பூசி விவரங்கள்

தடுப்பூசி விவரங்கள்

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள் குறித்து பார்க்கையில் இதுவரை இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும். இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசி மே மாதம் முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்பட்டது. ஒரு டோஸ் விலை இந்திய மதிப்புப்படி ரூ.750 என கூறப்படுகிறது.

கோவிட்-19 தடுப்பூசிகள் விலை

கோவிட்-19 தடுப்பூசிகள் விலை

கோவிட் தடுப்பூசிகள் விலை குறித்து பார்க்கையில், கோவிட் தடுப்பூசி நாடு முழுவதும் இருக்கும் மத்திய அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும். இருப்பினும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் ஒரு டோஸ் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் செலுத்த வேண்டும் என்றால் விலை நிர்ணயத்தில் கிடைக்கின்றன. கோவிஷீட் தடுப்பூசி மாநிலங்களுக்கு ரூ.400 எனவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.600 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் கோவாக்சின் விலை இன்னும் தெரியவில்லை.

தடுப்பூசி முன்பதிவு விவரங்கள்

தடுப்பூசி முன்பதிவு விவரங்கள்

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக 60 வயது மேற்பட்டவர்களுக்கும் அடுத்தாக 45 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கையில், ஏப்ரல் 28 முதல் கோவிட்-19 தடுப்பூசி Co-WIN செயலி மற்றும் போர்டல் மூலமாக பதிவு செய்யப்பட உள்ளது. இதை எப்படி பதிவு செய்வது மற்றும் அதற்கு எந்தந்த விவரங்கள் அளிக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். மூன்றாம் கட்டத்திற்கான கோவிட்-19 தடுப்பூசி பதிவு புதன்கிழமை தொடங்கப்பட உள்ளது. பயனர்கள் இந்த டோஸ்-க்கான பதிவை Co-WIN செயலி மற்றும் போர்டல் மூலமாக மேற்கொள்ளலாம்.

முன்பதிவு செய்வது எப்படி

முன்பதிவு செய்வது எப்படி

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி பதிவு இந்தியாவில் ஏப்ரல் 28-ல் தொடங்கப்பட்டுள்ளது. பயனர்கள் Co-WIN செயலி மற்றும் போர்டல் மூலமாக தடுப்பூசி அளவை பதிவு செய்யலாம். ஆரோக்ய சேது பயன்பாட்டின் மூலமாகவும் பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Amazon Prime Day Sale Postponed Due to Corona Virus Second Wave

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X