Home
News

Amazon பிரைம் டே சேல்: லேட்டஸ்ட் Motorola போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா போன்கள் வெளிவருகின்றன. எனவேதான் இந்நிறுவனத்தின் போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன

இந்நிலையில் அமேசான் பிரைம் டே சேல்(Amazon Prime Day Sale) எனும் சிறப்பு விற்பனை நாளை (ஜூலை 15) நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனை ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் டிவி, இயர்பட்ஸ், ஸ்பீக்கர்கள் மற்றும் பல அசத்தலான சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்படுகின்றன. குறிப்பாக கம்மி விலையில் போன்களை வாங்க இதுதான் சரியான நேரம்.

Amazon பிரைம் டே சேல்: லேட்டஸ்ட் Motorola போனுக்கு  விலைகுறைப்பு.!

அதேபோல் அமேசான் அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா போனுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போனுக்கு தான் தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த போன் இந்தியாவில் ரூ.89,000-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

நாளை நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனை ரூ.82,000-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போனுக்கு ரூ.7000 தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.

மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் ஆனது 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனில் 3.6-இன்ச் வெளிப்புற டிஸ்பிளே வசதியும் உள்ளது. இதன் வெளிப்புற டிஸ்பிளே ஆனது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியும் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் உடன் அட்ரினோ 730ஜிபியு வசதி கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன். பின்பு Moto MyUX சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் மூலம் இந்த போன் இயங்குகிறது. மேலும் இந்த போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

Amazon பிரைம் டே சேல்: லேட்டஸ்ட் Motorola போனுக்கு  விலைகுறைப்பு.!

டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டு இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த போன் 3800 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் 30 வாட்ஸ் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 5 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்குகிறது இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன்.

12எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போல்டபில் போன் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Prime Day Sale: Motorola Razr 40 Ultra phone can be bought at a discount of Rs.7000 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X