தங்கத்த தூங்கிட்டு வாங்கடா.. ரூ.999 விலைக்கு வந்த டாப் 4 இயர்பட்ஸ்.. மிஸ் பண்ணா வாங்க முடியாது!
அமேசான் பிரைம் டே சேல் விற்பனையில் பாதிக்குப்பாதி ஆஃபர் விலையில் கிடைக்கக்கூடிய டாப் 4 இயர்பட்ஸ்களின் லிஸ்டை இங்கே கொண்டு வந்துள்ளோம். இதில் போட் (boAt), நாய்ஸ் (Noise) மற்றும் ப்ளூபங்க்ட் (Blaupunkt) நிறுவனங்களின் இயர்பட்ஸ் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்த விவரம் இதோ.
அமேசான் பிரைம் டே சேல் 2023 (Amazon Prime Day Sale 2023) விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூலை 15ஆம் தேதி மற்றும் ஜூலை 16ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே நடக்கிறது. இந்த நாட்களில் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என்று அனைத்து பொருட்களும் நம்ம முடியாத ஆஃபர் விலையில் கிடைக்கிறது. இந்த ஆஃபரில் ரூ.1000க்கும் கீழ் விற்பனைக்கு வந்துள்ள டாப் 4 இயர்பட்ஸ் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

நாய்ஸ் பட்ஸ் விஎஸ்104 இயர்பட்ஸ் அம்சங்கள் மற்றும் விலை: இந்த நாய்ஸ் இயர்பட்ஸ் 45 மணி நேரம் பிளே பேக் டைம் கொண்டுள்ளது. இஎன்சி (ENC) டெக்னாலஜியுடன் கூடிய குவாட் மைக் வருகிறது. 13 மிமீ டிரைவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 50 எம்எஸ் லோவ் லேட்டன்சி (Low Latency) வருகிறது.
v5.2 ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதி இருக்கிறது. IPX5 தர வாட்டர் ரெசிஸ்டென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 200 நிமிடங்கள் பயன்படுத்திகொள்ள முடியும். இந்த இயர்பட்ஸ் விலை ரூ.3,499ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஆஃபரில் ரூ.1000 க்கு கிடைக்கிறது.
போட் ஏர்டோப்ஸ் 144 இயர்பட்ஸ் அம்சங்கள் மற்றும் விலை: இந்த போட் இயர்பட்ஸ் 42 மணி நேரம் பிளே பேக் டைம் கொண்டுள்ளது. இஎன்எக்ஸ் (ENx) டெக்னாலஜியுடன் கூடிய பில்ட்-இன் மைக் வருகிறது. 8 மிமீ டிரைவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கேமிங் லோவ் லேட்டன்சி (Low Latency) மோட் வருகிறது.
v5.4 ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதி இருக்கிறது. ASAP சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 75 நிமிடங்கள் பயன்படுத்திகொள்ள முடியும். இந்த இயர்பட்ஸ் விலை ரூ.4,490ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஆஃபரில் ரூ.998 க்கு கிடைக்கிறது.
போட் ஏர்டோப்ஸ் ஆட்டம் 81 இயர்பட்ஸ் அம்சங்கள் மற்றும் விலை: இந்த போட் இயர்பட்ஸ் 50 மணி நேரம் பிளே பேக் டைம் கொண்டுள்ளது. இஎன்எக்ஸ் (ENx) டெக்னாலஜியுடன் கூடிய குவாட் மைக் வருகிறது. 13 மிமீ டிரைவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 50 எம்எஸ் லோவ் லேட்டன்சி (Low Latency) வருகிறது.
v5.3 ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதி இருக்கிறது. ASAP சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 60 நிமிடங்கள் பயன்படுத்திகொள்ள முடியும். இந்த இயர்பட்ஸ் விலை ரூ.4,490ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஆஃபரில் ரூ.799 க்கு கிடைக்கிறது.
ப்ளூபங்க்ட் BTW100 எக்ஸ்ட்ரீம் இயர்பட்ஸ் அம்சங்கள் மற்றும் விலை: இந்த ப்ளூபங்க்ட் இயர்பட்ஸ் 99 மணி நேரம் பிளே பேக் டைம் கொண்டுள்ளது. இஎன்சி (ENC) டெக்னாலஜியுடன் கூடிய குவாட் மைக் கொண்டிருக்கிறது. 10 மிமீ டிரைவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கேமிங் லோவ் லேட்டன்சி (Low Latency) மோட் வருகிறது.
v5.3 ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதி இருக்கிறது. டர்போவோல்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் விலை ரூ.3,999ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஆஃபரில் ரூ.799 க்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








