Amazon Sale: ஜூலை 23 இல் Prime மெம்பர்களுக்கு காத்திருக்கும் 6 அதிர்ஷ்டங்கள்!

|

நம்மில் பலரும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை ஆபர் விலையில் வாங்க, அமேசான் அல்லது பிளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனைகளை பயன்படுத்திக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

அப்படியாக, வருகிற ஜூலை 23 மற்றும் ஜூலை 24 ஆம் தேதிகளில் நடக்கவுள்ள Amazon Prime Day Sale 2022 மீது உங்களுக்கு ஒரு கண் இருந்தால்.. அதே சமயம் ஒரு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற திட்டமும் உங்களிடம் இருந்தால்.. உண்மையாகவே "உங்களுக்கு எங்கோ ஒரு அதிர்ஷ்ட மச்சம் இருக்கிறது" என்று தான் அர்த்தம்!

ஏனென்றால்?

ஏனென்றால்?

வழக்கமாக இதுபோன்ற சிறப்பு விற்பனையின் கீழ், சற்றே பழைய ஸ்மார்ட்போன்கள் தான் ஆபர் விலைகளில் கீழ் வாங்க கிடைக்கும்.

ஆனால் இம்முறை நடக்கும் Amazon Prime Day Sale 2022 விற்பனையின் போது, மிகவும் லேட்டஸ்ட் ஆக அறிமுகமான / இந்த வாரம் (ஜூலை 18 - 20 வரை) அறிமுகம் செய்யப்படவுள்ள ஸ்மார்ட்போன்கள் முதன் முதலாக விற்பனைக்கு வரவுள்ளன.

ரூ.30,000 க்குள் நீங்க வேற ஏதாச்சும் ஒரு 43-inch TV வாங்குனா.. நாங்க பொறுப்பில்ல!ரூ.30,000 க்குள் நீங்க வேற ஏதாச்சும் ஒரு 43-inch TV வாங்குனா.. நாங்க பொறுப்பில்ல!

ஜூலை 23-இல் மொத்தம் 6 ஸ்மார்ட்போன்களின் First Sale!

ஜூலை 23-இல் மொத்தம் 6 ஸ்மார்ட்போன்களின் First Sale!

அமேசான் பிரேம் டே விற்பனை தொடங்கும் முதல் நாளன்று, அதாவது ஜூலை 23 ஆம் தேதியன்று மொத்தம் 6 "புதிய" ஸ்மார்ட்போன்கள் தத்தம் முதல் விற்பனையை சந்திக்க உள்ளன.

அதென்ன ஸ்மார்ட்போன்கள்? என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? என்கிற விவரங்களை பற்றி பேசும் முன், மூன்று முக்கியமான 'மேட்டர்'களை குறிப்பிட விரும்புகிறோம்.

அதென்ன 'மேட்டர்'கள்?

அதென்ன 'மேட்டர்'கள்?

ஒன்று - நடக்கவுள்ள அமேசான் பிரேம் டே சேல் 2022 ஆனது வெறும் 2 நாட்கள் மட்டுமே நடக்கும்.

இரண்டாவது - ஒவ்வொரு ஆண்டையும் போலவே, இம்முறையும் இது முழுக்க முழுக்க பிரைம் மெம்பர்களுக்கான ஒரு விற்பனையாகவே இருக்கும்!

மூன்றாவது - கீழ்வரும் பட்டியலில் நாம் காணவுள்ள 6 ஸ்மார்ட்போன்களில் 4 ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே அறிமுகமாகி விட்டன. மீதமுள்ள 2 ஸ்மார்ட்போன்கள் இனிமேல் தான் (ஜூலை 20-க்குள்) அறிமுகம் செய்யப்பட உள்ளன (அதில் ஒன்று புதிய கலர் ஆப்ஷனை மட்டுமே பெறுகிறது).

இருந்தாலும் இவைகள் அனைத்துமே அமேசான் வழியாக வாங்க கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டன.

ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!

01. சாம்சங் கேலக்சி எம்13 (Samsung Galaxy M13)

01. சாம்சங் கேலக்சி எம்13 (Samsung Galaxy M13)

சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனான Samsung Galaxy M13 ஆனது, வருகிற ஜூலை 23 ஆம் தேதியன்று - அமேசான் ப்ரைம் டே சேல் வழியாக - ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கும்.

6.6-இன்ச் அளவிலான FHD+ டிஸ்ப்ளேவை பேக் செய்யும் இந்த ஸ்மார்ட்டான எக்ஸிநோஸ் 850 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் இது 12GB RAM (RAM Plus அம்சம் வழியாக) மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜையும் வழங்குகிறது. உடன் இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 6000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

02. சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி (Samsung Galaxy M13 5G)

02. சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி (Samsung Galaxy M13 5G)

ரூ.13,999 முதல் என்கிற விலைக்கு வாங்க கிடைக்கும் Samsung Galaxy M13 5G ஸ்மார்ட்போனும் ஜூலை 23 ஆம் தேதியன்று தன் முதல் விற்பனையை சந்திக்க உள்ளது.

சந்தேகமே வேண்டாம், கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போனின் 5G வேரியண்ட் ஆனது இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலையில் வாங்க கிடைக்கும் 5ஜி போன்களில் ஒன்றாகும்.

இது 11 5ஜி பேண்ட்-களை ஆதரிக்கிறது மற்றும் MediaTek Dimensity 700G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 6.5 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 50MP + 5MP டூயல் ரியர் கேமரா செட்டப், 5000mAh பேட்டரி, மற்றும் 15W பாஸ்ட் சார்ஜிங் போன்ற முக்கிய அம்சங்களையும் பேக் செய்கிறது.

Samsung, OnePlus, Xiaomi உட்பட 12 போன்கள் மீது தாறுமாறான விலைக்குறைப்பு; இதோ லிஸ்ட்!Samsung, OnePlus, Xiaomi உட்பட 12 போன்கள் மீது தாறுமாறான விலைக்குறைப்பு; இதோ லிஸ்ட்!

03. டெக்னோ கேமன் 19 நியோ (Tecno Camon 19 Neo)

03. டெக்னோ கேமன் 19 நியோ (Tecno Camon 19 Neo)

நினைவூட்டும் வண்ணம் டெக்னோ நிறுவனம் சமீபத்தில் தான் அதன் கேமன் 19 மற்றும் கேமன் 19 நியோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

அதில் கேமன் 19 நியோ மாடல் ஆனது பிரைம் டே விற்பனையின் போது முதல் முறையாக விற்பனைக்கு வர உள்ளது. இது ரூ.12,999 க்கு ( 6GB RAM + 128GB) வாங்க கிடைக்கும்.

மீடியாடெக் ஹீலியோ G85SoC மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 18W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடனான 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

04. ஐக்யூ நியோ 6-இன் புதிய கலர் ஆப்ஷன் (IQoo Neo 6)

04. ஐக்யூ நியோ 6-இன் புதிய கலர் ஆப்ஷன் (IQoo Neo 6)

அமேசான் பிரைம் டே விற்பனையின் போது (ஏற்கனவே அறிமுகமான) ஐக்யூ நியோ 6 மாடல் ஆனது முற்றிலும் புதிய கலர் ஆப்ஷனை பெற உள்ளது. இருப்பினும், அது என்ன நிறம் என்கிற விவரம் வெளியிடப்படவில்லை.

முக்கிய அம்சங்களைப் பொறுத்தவரை, இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6.6 இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட், 12ஜிபி ரேம், 80W ஃப்ளாஷ் சார்ஜ் போன்றவைகளை கொண்டுள்ளது.

Nothing Phone 1 பிடிக்காமல் பலரும் தேடிச்செல்லும் 5 Nothing Phone 1 பிடிக்காமல் பலரும் தேடிச்செல்லும் 5 "மாற்று" ஸ்மார்ட்போன்கள்!

05.ரெட்மி கே50ஐ 5ஜி (Redmi K50i 5G)

05.ரெட்மி கே50ஐ 5ஜி (Redmi K50i 5G)

இது வருகிற ஜூலை 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் மற்றும் இது ரூ 25,000 முதல் ரூ 30,000 வரை என்கிற பட்ஜெட்டின் கீழ் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 சிப்செட், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே மற்றும் LPDDR5 ரேம் போன்ற அம்சங்களை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

06. டெக்னோ ஸ்பார்க் 9 (Tecno Spark 9)

06. டெக்னோ ஸ்பார்க் 9 (Tecno Spark 9)

ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில், 11ஜிபி ரேம் உடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் என்கிற "விளம்பரத்தின்" கீழ் பரப்பரப்பாக பேசப்படும் டெக்னோ ஸ்பார்க் 9 ஆனது இன்று (ஜூலை 18) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அமேசான் லிஸ்டிங்கின் படி, இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 6.6-இன்ச் டிஸ்ப்ளே, 6ஜிபி ரேம் + 5ஜிபி விர்ச்சுவல் ரேம் என மொத்தம் 11 ஜிபி ரேம், 128ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ், 5000mAh பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ சிப்செட் போன்ற அம்சங்களை பேக் செய்யும்.

இந்த 6 ஸ்மார்ட்போன்களில் நீங்கள் வாங்க போவது எதை? கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கவும்.

Best Mobiles in India

English summary
List of New Smartphones all set to First Time Sale in India on July 23 in Amazon Prime Day Sale 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X