Home
News

Amazon Prime Day Sale 2022: ஆரம்ப தேதி இதான்! பிடிச்சதை எல்லாம் கார்டில் ஆட் பண்ண ரெடியா?

உங்களின் நீண்ட நாள் காத்திருப்பு மற்றும் எதிர்பார்ப்பிற்கான விடை இதோ இன்று கிடைத்துவிட்டது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு நம் அனைவருக்குமே இருந்திருக்கும். குறிப்பாக புதிய பொருட்களை வாங்கி வீட்டில் உள்ளவர்களையும், வீட்டையும் புதிதாக அலங்கரிப்பது நம்முடைய வழக்கமாகிவிட்டது. அதேபோன்ற, ஒரு எதிர்பார்ப்பு தான் Amazon Prime Day Sale நோக்கி மக்களை இழுத்துச் செல்கிறது.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த Amazon Prime Day Sale 2022

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த Amazon Prime Day Sale 2022

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அமேசான் இந்தியா பிரைம் டே சேல் 2022 (Amazon Prime Day Sale 2022) விற்பனை வரும் ஜூலை 23 ஆம் தேதி முதல் தொடங்கும் என்ற அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், ஆடியோ சிஸ்டம்ஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்ற சாதனங்களைக் குறைந்த விலையில் வாங்கக் கிடைக்கும் சூப்பர் ஹாட் ஆஃபர்கள் விரைவில் லைவ் செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டில் நீங்கள் வாங்க நினைத்த அனைத்தையும் இந்த விற்பனையின் மூலம் வாங்கலாம்.

உங்கள் காலண்டரில் இந்த தேதியை மார்க் செய்யுங்கள்

உங்கள் காலண்டரில் இந்த தேதியை மார்க் செய்யுங்கள்

Amazon Prime Day Sale 2022 விற்பனையின் கீழ் அனைத்து வகையான தயாரிப்புகளின் மீது நிறுவனம் சலுகைகளை வழங்குகிறது. இந்த சிறப்பு வீரப்பனை ஒரு நாள் மட்டுமே இயங்கும் என்பதனால், உங்கள் காலண்டரில் தேதியைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். எது ஒரு நாள் மட்டும் தானா என்று கவலைப்படாதீர்கள். ஜூலை 23 ஆம் தேதி துவங்கி 24 ஆம் தேதி வரி இந்த சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனை 48 மணி நேரம் லைவில் இருக்கும் என்று கொஞ்சம் பாஸிட்டிவாக யோசிக்கலாம்.

200 மில்லியனுக்கும் அதிகமான பிரைம் உறுப்பினர்கள்

200 மில்லியனுக்கும் அதிகமான பிரைம் உறுப்பினர்கள்

இந்தியாவிற்கான பிரைம் டே சேல் அறிவிப்பு சரியாக, அமெரிக்காவில் அமேசான் பிரைம் டே சேல் 2022 தொடங்கப்பட்ட 10 நாட்களுக்குள் இங்கு லைவ் செய்யப்படுகிறது. அமெரிக்காவில், அமேசான் பிரைம் டே சேல் 2022 ஜூலை 12 ஆம் தேதி துவங்குகிறது. அமேசான் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்தியாவில் சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமான பிரைம் உறுப்பினர்கள் உள்ளனர். அமேசான் பிரைம் பயனர்களின் ஒரு பெரிய பகுதி எண்ணிக்கை இந்தியாவிற்குச் சொந்தமானது என்பதை நிறுவனம் கூறியுள்ளது.

அமேசான் பிரைம் டே சேல் 2022 விற்பனையில் என்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?

அமேசான் பிரைம் டே சேல் 2022 விற்பனையில் என்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?

இந்த விற்பனையின் மூலம் iPhone 13 போன்ற பிரபலமான சாதனங்களின் மீது பல சலுகைகளையும் நிறுவனம் கொண்டுவரவுள்ளது. Amazon Prime Day Sale 2022 மூலம் வாடிக்கையாளர்கள் அதிக தள்ளுபடிகளை பெரும் அதே வேளையில், Samsung, Xiaomi மற்றும் Intel போன்ற 400-க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் இருந்து சுமார் 30,000-திற்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் வெளியிடப்படும் என்று Amazon தெரிவித்துள்ளது. Amazon Prime Day Sale 2022 தொடங்குவதற்கு முன்பே இந்த நிறுவனங்களிடமிருந்து புதிய தயாரிப்புகளை நாம் எதிர்பார்க்கலாம்.

55% சதவீதம் வரை தள்ளுபடி

55% சதவீதம் வரை தள்ளுபடி

இது தவிர, அமேசான் நிறுவனம் அதன் முழு எக்கோ மற்றும் ஃபயர் டிவி தயாரிப்புகள் மீது சுமார் 55% சதவீதம் வரை தள்ளுபடியை அறிவிக்கும் என்று உறுதிசெய்துள்ளது. அமேசான் தனது Amazon Prime Day Sale 2022 விற்பனையை வரும் ஜூலை 23 ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்குத் தொடங்கி ஜூலை 24 வரை இயங்கவுள்ளது. பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த காலம் 48 மணிநேர நிகழ்வாக இருக்கும். நீங்கள் பிரைம் உறுப்பினராக இல்லாவிட்டால், கவலைப்பட வேண்டாம். உடனடியாக பிரைம் மெம்பர்ஷிப் வாங்க இதைச் செய்யுங்கள்.

அமேசான் பிரைம் சந்தா இல்லையா? கவலைப்படாதீங்க இதை கொஞ்சம் பாருங்க

அமேசான் பிரைம் சந்தா இல்லையா? கவலைப்படாதீங்க இதை கொஞ்சம் பாருங்க

Amazon Prime Day Sale 2022 விற்பனைக்கு முன்னதாக பிரைம் சந்தாவை நீங்கள் வாங்க திட்டமிட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சந்தா கட்டண விபரங்களைப் பார்வையிடுங்கள். Amazon Prime ஒரு வருடச் சந்தாவிற்கு ரூ.1,499 வசூலிக்கப்படுகிறது. இது உங்களுக்கு வேண்டாம் என்றால், வெறும் ரூ.179 மாதாந்திர சந்தா கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் ஒரு மாத மெம்பர்ஷிப்பை நீங்கள் பெறலாம். ஒருவேளை நீங்கள் 18 முதல் 24 வயது வரை உள்ளவராக இருந்தால், Amazon வழங்கும் பிரைம் மெம்பர்ஷிப்பில் 50 சதவீதம் தள்ளுபடியைப் பெறலாம் என்பதை மறக்காதீர்கள்.

இவர்களுக்கு மட்டும் ரூ.2,500 வரை ரிவார்டு

இவர்களுக்கு மட்டும் ரூ.2,500 வரை ரிவார்டு

அமேசான் பிரைம் டே சேல் 2022 தயாரிப்புகளில் பெரிய சலுகைகளை வழங்குவது மட்டுமின்றி, உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் வழியாகக் கூடுதல் சலுகையை வழங்கவுள்ளது. ஐசிஐசிஐ வங்கி அல்லது எஸ்பிஐ கார்டு மூலம் Amazon Prime Day Sale 2022 விற்பனையில் நீங்கள் ஏதேனும் பொருள் வாங்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் பிளாட் தள்ளுபடி வழங்கப்படும் என்று அமேசான் அறிவித்துள்ளது. இருப்பினும், தள்ளுபடியின் உச்ச வரம்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அமேசான் பே வாடிக்கையாளர்கள் ரூ.2,500 வரை ரிவார்டு கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Prime Day Sale 2022 Launch Date and Offer Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X