Amazon உடன் இணைந்த Uber: இனி போனாலும் தள்ளுபடி, வந்தாலும் தள்ளுபடி- எல்லாமே நமக்கு சாதகம் தான்!

|

அமேசான் பிரைம் தின விற்பனை இந்தியாவில் ஜூலை 23 ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து தங்களது பிரைம் பயனர்களுக்கு பிரத்யேக பலன்களை வழங்குவதற்கு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அமேசான் உடன் உபர் இணைய காரணம் என்ன?

அமேசான் உடன் உபர் இணைய காரணம் என்ன?

இதற்கு இ-காமர்ஸ் தளமான அமேசான் நிறுவனம் உபர் உடன் இணைந்திருக்கிறது. இந்த கூட்டமைப்பின் கீழ் பிரைம் உறுப்பினர்களுக்கு UberGo விலையில் UberPremier-க்கான அணுகல் வழங்கப்படுகிறது. இதன் பலன் என்னவென்று பார்த்தால், மாதம்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட சவாரிகளுக்கு அதீத தள்ளுபடியை பெறலாம்.

உபரின் பிரத்யேக சலுகையை பெறலாம்

உபரின் பிரத்யேக சலுகையை பெறலாம்

இதுகுறித்து அமேசான் அளித்த தகவலின்படி, அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இனி உபரின் பிரத்யேக சலுகையையும் இலவசமாக அனுபவிக்கலாம் என தெரிவித்துள்ளது. மாதத்திற்கு மூன்று முறை மேற்கொள்ளும் சவாரிகளுக்கு UberPremierக்கு வழங்கப்படும் சலுகையை பிரைம் உறுப்பினர்கள் பெற முடியும்.

எந்தெந்த சவாரிகளுக்கு தள்ளுபடி கிடைக்கும்

எந்தெந்த சவாரிகளுக்கு தள்ளுபடி கிடைக்கும்

அதோடு கூடுதலாக ஒரு மாதத்தில் மூன்று பயணங்களுக்கு 20% வரை அதாவது ரூ.60 வரை தள்ளுபடியும் கிடைக்கும். இந்த தள்ளுபடி Uber Auto, Motor உள்ளிட்டவைகளில் மேற்கொள்ளும் சவாரிகளில் பெற முடியும். இந்த சலுகையை பெறுவதற்கு Uber கணக்கை உங்கள் Amazon Pay வாலட்டுடன் இணைக்க வேண்டும்.

Amazon Pay வாலட் மூலம் பணம் செலுத்த வேண்டும்

Amazon Pay வாலட் மூலம் பணம் செலுத்த வேண்டும்

நிறுவனத் தகவலின்படி, அமேசான் பிரைம் உறுப்பினர்கள் தங்கள் Amazon Pay வாலட் மூலம் பணம் செலுத்தும் போது தள்ளுபடிகள் தானாகவே அவர்களுக்கு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது. அமேசான் பிரைம் உறுப்பினராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் உபர் ரைடுகளுக்கு தள்ளுபடி பெறுவது எப்படி என பார்க்கலாம்.

தள்ளுபடி பெறுவது எப்படி?

தள்ளுபடி பெறுவது எப்படி?

Amazon Prime சந்தாதாரர்களா என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் உபர் வாலட் உடன் அமேசான் பே-ஐ இணைக்க வேண்டும்.

அமேசான் பே வாலட் மூலம் உபர் சவாரிக்கு பணம் செலுத்த வேண்டும்

பின் தள்ளுபடி தானாகவே உங்களுக்கு கிடைக்கும்

அமேசான் பே வாலட்டை உபருடன் இணைப்பது எப்படி?

அமேசான் பே வாலட்டை உபருடன் இணைப்பது எப்படி?

அமேசான் பே வாலட்டை உபருடன் இணைக்கும் வழிமுறைகள்.

Amazon Pay வாலட்டை Uber உடன் இணைப்பது எப்படி என்பது குறித்தும் பலன்களை எப்படி பெறுவது என்பது குறித்தும் பார்க்கலாம்.

உபர் பயன்பாட்டை ஓபன் செய்து கீழே உள்ள ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

வாலட் என்பதை தேர்ந்தெடுத்து கீழே ஸ்க்ரால் செய்தால் "Add payment method" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் "Amazon Pay" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தொடர்ந்து அமேசான் கணக்குக்குள் உள்நுழைந்து "Add Funds" என்ற விருப்பத்தை கிளிக் செய்து பணத்தை பரிமாற்றத்தை செய்யலாம்.

அமேசான் பிரைம் தின விற்பனை

அமேசான் பிரைம் தின விற்பனை

இதை கவனித்தீர்களா, நீண்ட நாள் காத்திருந்த அமேசான் பிரைம் தின விற்பனை ஜூலை 23 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உங்கள் வீட்டில் ஏதேனும் புது பொருட்களோ, ஏதேனும் கேட்ஜெட்களோ வாங்க திட்டமிட்டால் அதற்கு இது சரியான நேரமாகும்.

பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடி

பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடி

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், ஆடியோ சிஸ்டம்ஸ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட சாதனங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். Amazon Prime Day Sale 2022 விற்பனை இரண்டு தினங்களுக்கு மட்டுமே நடக்கும் என்ற காரணத்தால் இந்த தினத்தை மறக்காமல் நோட் செய்து கொள்ளுங்கள். இந்த விற்பனை சுமார் 48 மணி நேரம் வரை நேரலையில் இருக்கும்.

நீங்களும் பிரைம் உறுப்பினராக மாறலாம்

நீங்களும் பிரைம் உறுப்பினராக மாறலாம்

இந்த பிரைம் தின விற்பனையில் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் சலுகையும் கிடைக்கும். இந்தியாவில் சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமான பிரைம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். Amazon Prime Day Sale 2022 விற்பனை வரும் ஜூலை 23 ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு தொடங்கி ஜூலை 24 இரவு வரை நேரலையில் இருக்கும். இது பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே என்பது கவனிக்கத்தக்க ஒன்று. பிரைம் உறுப்பினராக இல்லாதபட்சத்தில் கவலையே வேண்டாம், உடனே பிரைம் மெம்பர்ஷிப்பை இயக்கிக் கொள்ளுங்கள்.

அமேசான் பிரைம் ஒரு வருட சந்தா விலை

அமேசான் பிரைம் ஒரு வருட சந்தா விலை

Amazon Prime Day Sale 2022 விற்பனைக்கு முன்பாக பிரைம் சந்தாவை நீங்கள் பெற விரும்பினால் அதற்கான வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம். அமேசான் பிரைம் ஒரு வருட சந்தா விலை ரூ.1,499 ஆகும். மாதாந்திர சந்தா சலுகையும் வழங்கப்படுகிறது. ரூ.179 மாதாந்திர சந்தா கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் ஒரு மாத மெம்பர்ஷிப்பை நீங்கள் பெறலாம். ஒருவேளை நீங்கள் 18 முதல் 24 வயது வரை உள்ளவராக இருந்தால், Amazon வழங்கும் பிரைம் மெம்பர்ஷிப்பில் 50 சதவீதம் தள்ளுபடியைப் பெறலாம் என்பதை மறக்காதீர்கள்.

சலுகைகள் மற்றும் ரிவார்ட்களும் இருக்கு

சலுகைகள் மற்றும் ரிவார்ட்களும் இருக்கு

அமேசான் பிரைம் டே சேல் 2022 தயாரிப்புகளில் பெரிய சலுகைகளை வழங்குவது மட்டுமின்றி, உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் வழியாகக் கூடுதல் சலுகையை வழங்கவுள்ளது. ஐசிஐசிஐ வங்கி அல்லது எஸ்பிஐ கார்டு மூலம் Amazon Prime Day Sale 2022 விற்பனையில் நீங்கள் ஏதேனும் பொருள் வாங்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் பிளாட் தள்ளுபடி வழங்கப்படும் என்று அமேசான் அறிவித்துள்ளது. இருப்பினும், தள்ளுபடியின் உச்ச வரம்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அமேசான் பே வாடிக்கையாளர்கள் ரூ.2,500 வரை ரிவார்டு கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Amazon Prime Day Sale 2022: Amazon teams up with Uber For Exclusive Offer Benefits

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X