Home
News

இலவசமாக அமேசான் பிரைம் சந்தா வேண்டுமா? அப்போ இந்த Airtel மற்றும் Vi திட்டங்களைத் தேர்வு செய்யுங்கள்..

அமேசான் பிரைம் டே சேல்ஸ் விற்பனை பற்றி தான் இப்போது எல்லா பக்கமும் பேச்சு, பிரைம் சந்தா உள்ள அனைவரும் இந்த விற்பனை மூலம் கூடுதல் பயனை அடையாளம். அமேசான் பிரைம் சந்தா என்பது நிறுவனத்தின் கட்டண உறுப்பினர் சேவையாகும். இதன் கீழ் இலவச ஒன் டே டெலிவரி அம்சம், பிரைம் வீடியோ அம்சம், பிரைம் மியூசிக் அம்சம், பிரைம் ரீடிங் மற்றும் இலவச கேம் கன்டென்ட் போன்ற பல அம்சங்கள் பிரைம் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கிறது.

இலவசமாக அமேசான் பிரைம் சந்தா வேண்டுமா? அப்போ இதை உடனே செய்யுங்க..

அமேசான் பிரைம் பயனர்களுக்கு விற்பனையில் முந்தைய கலந்துகொள்ளும் வாய்ப்பும் இதனால் கிடைக்கிறது. குறைந்த ஸ்டாக் உடன் அதிக சலுகை கிடைக்கும் டிமாண்ட் பொருட்களை அள்ளிச்செல்ல அமேசான் பிரைம் சந்தா அனுமதிக்கிறது. இந்த பிரைம் சந்தாவைப் பெற, ஒரு பயனர் மாதம் தோறும் ரூ.129 அல்லது ஒரு வருடத்திற்கு ரூ.999 என்ற கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஆனால், நீங்கள் ஏர்டெல் அல்லது Vi பயனர் என்றால் இந்த பிரைம் சந்தாவை இலவசமாகப் பெற வாய்ப்புள்ளது.

ஏர்டெல் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டம்
இந்த திட்டம் உங்களுக்கு மொத்தம் 75 ஜிபி டேட்டா நன்மையை, எல்லா நெட்வொர்க்கிற்குமான வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலனுடன் வருகிறது. இந்த திட்டம் உங்களுக்கு அமேசான் பிரைம் உறுப்பினர் சந்தாவை 30 நாட்களுக்கு வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம்
இந்த திட்டம் முதலில் ஒரு ஆட் ஆன் திட்டம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இது 1 + 2 ஆட் ஆன் பயனுடன் வருகிறது. இது மொத்தமாக 210 ஜிபி டேட்டாவை (முதன்மை எண்ணுக்கு 150 ஜிபி + ஆட் அன் செய்யப்பட்ட எண்களுக்கு தனித்தனியே 30 ஜிபி) வழங்குகிறது. இதுவும் வரம்பற்ற அழைப்பு நன்மையுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு அமேசான் பிரைம் உறுப்பினர் சந்தாவை 30 நாட்களுக்கு வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.1599 போஸ்ட்பெய்ட் திட்டம் (1 + 3 ஆட் ஆன்)
இந்த திட்டமும் ஒரு ஆட் ஆன் திட்டம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இது 1 + 3 ஆட் ஆன் பயனுடன் வருகிறது. இது மொத்தமாக 500 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதுவும் வரம்பற்ற அழைப்பு நன்மையுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு அமேசான் பிரைம் உறுப்பினர் சந்தாவை 30 நாட்களுக்கு வழங்குகிறது.

இலவசமாக அமேசான் பிரைம் சந்தா வேண்டுமா? அப்போ இதை உடனே செய்யுங்க..

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்டு திட்டம்
இது ஒரு ப்ரீபெய்டு திட்டமாகும். இது தினமும் 2.5 ஜிபி டேட்டா நன்மையுடன் வரம்பற்ற அழைப்பு நன்மையை வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் என்று அனைத்து நன்மைகளையும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இந்த திட்டமும் உங்களுக்கு அமேசான் பிரைம் உறுப்பினர் சந்தாவை 30 நாட்களுக்குத் தடையின்றி வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.131 ப்ரீபெய்டு திட்டம்
இது ஒரு ஆட் ஆன் திட்டமாகும். இந்த திட்டம் உங்களுக்கு மொத்தம் 100MB டேட்டவுடன் வரம்பற்ற அழைப்பு நன்மையையும் வழங்குகிறது. இது தினமும் 100 எஸ்எம்எஸ்போன்ற நன்மைகளைப் பயனரின் ஆக்டிவ் பிளான் வேலிடிட்டி முடியும் வரை செல்லுபடியாகிறது. இந்த திட்டமும் உங்களுக்கு அமேசான் பிரைம் உறுப்பினர் சந்தாவை 30 நாட்களுக்கு வழங்குகிறது.

இலவசமாக அமேசான் பிரைம் சந்தா வேண்டுமா? அப்போ இதை உடனே செய்யுங்க..

வோடபோன்-ஐடியா ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டம்
இந்த திட்டம் உங்களுக்கு மொத்தம் 75 ஜிபி டேட்டா நன்மையை, அனைத்து நெட்வொர்க்கிற்கான வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலனுடன் வருகிறது. இந்த திட்டம் உங்களுக்கு அமேசான் பிரைம் உறுப்பினர் சந்தாவை 30 நாட்களுக்கு வழங்குகிறது.

வோடபோன்-ஐடியா ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டம்
இந்த திட்டம் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா நன்மையை, அனைத்து நெட்வொர்க்கிற்கான வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலனுடன் வருகிறது. இந்த திட்டம் உங்களுக்கு அமேசான் பிரைம் உறுப்பினர் சந்தாவை 30 நாட்களுக்கு வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Prime Day Sale 2021 Now get free Prime membership with THESE Airtel Vi postpaid and Prepaid plans : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X