ஒன்பிளஸ் சாதனம் வாங்க சரியான வாய்ப்பு- அட்டகாச தள்ளுபடியுடன் அமேசான் பிரைம் தின விற்பனை 2021!
ஒன்பிளஸ் ப்ரீமியம் ஃபிளாக்ஷிப்கள் மற்றும் இடைப்பட்ட சலுகைகள் என பல்வேறு விலைப்பிரிவில் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. ஒன்பிளஸ் 9 தொடர் மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் போன்ற சாதனங்களுக்கு அமேசான் பிரைம் தின விற்பனை 2021-ல் சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 9 தொடர் மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சாதனங்கள் பயனர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு இது சரியான வாய்ப்பாகும். அமேசான் பிரைம் தின விற்பனை 2021 சிறந்த சலுகைகளோடு அறிவிக்கப்பட உள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி, நோர்ட் சிஇ 5ஜி, நோர்ட் 2 5ஜி ஆகிய சாதனங்கள் இந்திய சந்தையில் கவர்ச்சிகரமான அம்சங்களோடு அறிமுகமாகியுள்ளன.
ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம் ரூ.29,999 ஆக இருக்கிறது. கூடுதலாக வங்கி சலுகை மற்றும் பல அறிவிப்புகள் கிடைக்க இருக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி அமேசான் பிரைம் தின விற்பனை 2021-ல் விலைக்குறைப்பை பெறுகிறது. இந்த தள்ளுபடி அறிவிப்பில் ரூ.1000-த்துக்கு மேல் விலைக்குறைப்பு எதிர்பார்க்கலாம்.
அமேசான் பிரைம் தின விற்பனை 2021-ல் ஒன்பிளஸ் 9 தொடர் சாதனங்களுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது. நோர்ட் தொடர் சாதனம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இடைப்பட்ட அம்சங்களை கொண்ட சாதனமாகும். ஆனால் ஒன்பிளஸ் 9 தொடர் சாதனங்களானது முதன்மை மற்றும் ப்ரீமியம் ரக அம்சங்களை கொண்டது. அமேசான் பிரைம் தின விற்பனை 2021-ல் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ஆர் ஆகிய சாதனங்களுக்கு அதிக தள்ளுபடி வழங்கப்பட உள்ளன. ஒன்பிளஸ் 9 தொடர் சாதனம் ப்ரீமியம் ரக ஹாலஸ்பாட் கேமராக்களுடன் வருகிறது. இதன் விலை தள்ளுபடி கூப்பன்களுடன் ரூ.49,999 என வருகிறது.
ஒன்பிளஸ் 9 ஆர் 5ஜி 120 ஹெர்ட்ஸ் திரவ டிஸ்ப்ளேவுடன் கம்பீரமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அமேசான் பிரைம் தின விற்பனை 2021, ஒன்பிளஸ் 9 ஆர் 5ஜியின் தள்ளுபடி விலையை இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் இந்த சாதனங்களுக்கு அமேசானில் விலையில்லா இஎம்ஐ வசதி கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அமேசான் பிரைம் தின விற்பனை 2021, ஜூலை 26 ஆம் தேதிமுதல் ஜூலை 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒன்பிளஸ் சாதனம் வாங்க திட்டமிட்டிருக்கும் பயனர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும்.


Click it and Unblock the Notifications