Home
News

அதிரடி தள்ளுபடியில் ஐபோன் 12- சரியான வாய்ப்பு: அமேசான் பிரைம் தின சலுகை இன்றுதான் கடைசி!

ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதில் பிரதானமாக இருக்கும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்கள் அவ்வப்போது சலுகை தின அறிவிப்புகளை அறிவித்து தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. அதன்படி தற்போது அமேசான் நிறுவனத்தின் அமேசான் பிரைம் தின விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையானது ஜூலை 26 முதல் ஜூலை 27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிரடி தள்ளுபடியில் ஐபோன் 12- சரியான வாய்ப்பு: அமேசான் பிரைம் தினம்!

இந்த அறிவிப்பில் ஸ்மார்ட்போன்கள், ஹெட்செட் போன்ற சாதனங்கள், லேப்டாப்கள், டிவி, வாஷிங்மெஷின், ஃப்ரிட்ஜ்களில் தொடங்கி ஐபோன்கள் வரை அனைத்துக்கும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி தற்போது ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்துக்கு கிடைக்கும் சலுகை குறித்து பார்க்கலாம். இந்த சலுகை விற்பனை இன்றுதான் கடைசி என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்நாள் வரை நீங்கள் ஆண்ட்ராய்டு சாதனம் பயன்படுத்தி வந்திருக்கலாம். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஐபோன் வாங்கவும் திட்டமிட்டிருக்கலாம் அதற்கு இதுதான் சரியான நேரம். காரணம் அமேசான் பிரைம் தின விற்பனையில் ஐபோன் 12 சாதனத்துக்கு சிறந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் விலை ரூ.79,900 ஆக இருக்கிறது. தற்போது அமேசான் பிரைம் தின விற்பனையில் இந்த ஐபோன் 12 ரூ.70,900 ஆக இருக்கிறது. தற்போது இந்த ஐபோனுக்கு ரூ.9000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 மினி சாதனம் ரூ,69,900 ஆக இருக்கிறது. தற்போது அமேசான் தளத்தில் இதன் விலை ரூ.66,400 ஆக இருக்கிறது. இந்த சாதனம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஐபோன் 12 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.1,15,900 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1,25,900 என இருக்கும் நிலையில் இந்த சாதனத்துக்கு எச்டிஎஃப்சி வங்கி கார்ட்களின் சேவை மூலம் ரூ.5000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் அமேசான் பிரைம் தின விற்பனையில் ஐபோன்களுக்கு ஏணைய வங்கி சலுகைகள் வழங்கப்படுகிறது.

ஐபோன் 12 ப்ரோ 6.1 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஐபோனில் உள்ள கேமராக்கள் மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளது. ஐபோன் 12 ப்ரோ டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. ஐபோன் 12 ப்ரோ எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் டால்பை விஷன் ஆதரவுகள் இதில் இருக்கிறது.

ஐபோன் 12 ப்ரோ ஐஓஎஸ் 14 அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படுகிறது. ஐபோன் 12 ப்ரோ இரட்டை சிம் ஆதரவோடு வருகிறது. இது 64ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. நானோ சிம்களின் ஆதரவுகள் இதில் இருக்கிறது. மேலும் இந்த சாதனம் கோல்ட், கிராஃபைட், பசிபிக் ப்ளூ மற்றும் சில்வர் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும் இதில் ஐபி 68 மதிப்பிடப்பட்ட வாட்டர் மற்றும் தூசி ரெசிஸ்டன்ட் ஆதரவு இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Prime Day Sale 2021: Apple Iphone 12 Gets Huge Discount in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X