Amazon Prime Day 2025: கிடைக்காத ரேட்ல OnePlus 13, நோர்ட் சிஇ4 லைட்.. எந்தெந்த மாடல்கள்.. எவ்வளவு டிஸ்கவுண்ட்?
அமேசான் பிரைம் டே 2025 (Amazon Prime Day 2025) விற்பனையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஜூலை 12 முதல் ஜூலை 14ஆம் தேதி வரையில் நடக்கும் இந்த விற்பனையில் ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ்13எஸ், ஒன்பிளஸ் 13ஆர் மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் லைட் போன்ற மாடல்களுக்கு அதிகப்படியான டிஸ்கவுண்ட் வருகிறது. இந்த ஒன்பிளஸ் மாடல்களின் மார்கெட் விலை, டிஸ்கவுண்ட் விலை மற்றும் பீச்சர்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் 13 (OnePlus 13): பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்ற இந்த போனின் ரூ.12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.64,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.5,000 விலை குறைப்பு மற்றும் ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது. ஆகவே, ரூ.54,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

இந்த போனில் 6.82 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 கிடைக்கிறது. 50 எம்பி மெயின் + 50 எம்பி அல்ட்ரா வைடு + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ உள்ளது. 6000mAh பேட்டரி, 100W சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது.
ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s): இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.54,999ஆக இருக்கிறது. அமேசான் பிரைம் டே 2025 விற்பனையில் ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.49,999 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. இந்த போன் லேட்டஸ்ட் மாடலாக இருக்கிறது. 6.32 இன்ச் அமோலெட் டிஸ்பிளேவை கொடுக்கிறது.

ஆகவே, காம்பாக்ட் டிசைனில் எதிர்பார்க்கலாம். ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 மற்றும் அட்ரினோ 830 ஜிபியு கிடைக்கிறது. 50 எம்பி மெயின் + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 5,850mAh பேட்டரி மற்றும் 80W சார்ஜிங் உள்ளது.
ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R): இந்த 13ஆர் போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.42,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.39,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இதுபோக அமேசான் பிரைம் 2025 டே விற்பனையில் காம்போ ஆஃபராக ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) கிடைக்கிறது.

இந்த போனில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 80W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் (OnePlus Nord CE4 Lite): இந்த நோர்ட் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. அமேசான் பிரைம் டே 2025 விற்பனையில் ரூ.2,000 விலை குறைப்பு மற்றும் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.15,999 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. ஜூலை 12 முதல் ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








