3 நாட்களுக்கு ஆபர் மழை.. Amazon Prime Day 2025 Sale தேதி அறிவிப்பு.. என்னென்ன டிஸ்கவுண்ட் கிடைக்கும்?
பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon India) தனது மிகப்பெரிய சிறப்பு விற்பனைகளில் ஒன்றான அமேசான் பிரைம் டே 2025 விற்பனைக்கான (Amazon Prime Day 2025 Sale) தேதிகளை அறிவித்துள்ளது. இந்த விற்பனை எப்போது தொடங்கி எப்போது முடியும்? என்னென்ன பேங்க் ஆபர்கள் கிடைக்கும்? என்னென்ன தயாரிப்புகள் மீது சலுகைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
அமேசான் பிரைம் டே 2025 சேல் - விற்பனை தேதிகள் (Amazon Prime Day 2025 Sale Dates): அமேசான் பிரைம் டே 2025 விற்பனை ஆனது அடுத்த ஜூலை 12 ஆம் தேதி காலை 12 மணிக்கு தொடங்கும் என்றும், இந்த விற்பனை ஜூலை 14 ஆம் தேதி இரவு 11:59 மணிக்கு முடிவடையும் என்றும் அமேசான் இந்தியா அறிவித்துள்ளது.

மொத்தம் மூன்று நாட்கள் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையானது அனைத்து அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கும் பிரத்தியேகமானதாக இருக்கும். அதாவது இந்த சிறப்பு விற்பனையின் கீழ் அணுக கிடைக்கும் சலுகைகளை அணுக விரும்பும் வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தாவை வைத்திருக்க வேண்டும்.
அமேசான் பிரைம் டே 2025 சேல் - பேங்க் ஆபர்கள் (Amazon Prime Day 2025 Sale Bank Offers): இந்த அமேசான் ப்ரைம் டே 2025 விற்பனையில் பல்வேறு தயாரிப்புகளுக்கு கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் SBI மற்றும் ICICI பேங்க் கார்டுகளை பயன்படுத்தி தங்கள் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும்.
அமேசான் பிரைம் டே 2025 சேல் - என்னென்ன தயாரிப்புகள் மீது சலுகைகளை எதிர்பார்க்கலாம் (Amazon Prime Day 2025 Sale What to Expect)? வரவிருக்கும் அமேசான் பிரைம் டே 2025 விற்பனையின் போது, தள்ளுபடி விலையில் கிடைக்கும் சில தயாரிப்புகளை மட்டுமே அமேசான் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra), ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மற்றும்
ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) ஆகிய ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். இதேபோல சோனி WH-1000XM5 மற்றும் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ (Samsung Galaxy Buds 3 Pro) ஆகிய ஆடியோ தயாரிப்புகளும் ஆபர் விலையில் விற்கப்படும்.

இதேபோல், ஜூலை 12 ஆம் தேதி அன்று பிரைம் டே 2025 விற்பனை தொடங்கும் போது ஆசஸ் விவோபுக் (Asus Vivobook) லேப்டாப்கள், சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 எப்இ (Samsung Galaxy Tab S9 FE) டேப்லெட் உடன் சேர்ந்து எச்பி (HP) மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களின் பிற லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்களையும் தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
அமேசானில் ஜூலை 12 - 14 ஆபர் விலையில் கிடைக்கப்போகும் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- Aqua Touch 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட் (இது பயனர்கள் ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும்)
ஜூன் 12 முதல் விற்பனை.. OnePlus 13s இந்தியாவில் அறிமுகமானது!
- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்
-டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, NavIC உடன் கூடிய GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்
- அளவீட்டில் 150.8×71.7×8.2மிமீ
-எடையில் 185 கிராம்


Click it and Unblock the Notifications