Amazon Prime Day 2022: எதை எடுத்தாலும் தள்ளுபடி., இதை நோட் பண்ணிங்களா!

|

பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனை மற்றும் அமேசான் பிரைன் தின விற்பனை ஏறக்குறைய ஒரே தினங்களில் நடக்கிறது. இரு தளங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்குகின்றன. ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற சொலவடை போல் இந்த இரண்டு தளங்களின் போட்டியும் நமக்கு தான் லாபமாக இருக்கிறது. வாங்க விவரங்களை பார்க்கலாம்.

அமேசான் பிரைம் தின 2022 விற்பனை தள்ளுபடி

அமேசான் பிரைம் தின 2022 விற்பனை தள்ளுபடி

அமேசான் பிரைம் தின 2022 விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் பல ஸ்மார்ட்போன்களும் அதீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதாவது எஸ்பிஐ, ஐசிஐசிஐ கார்ட் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு 10% உடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கேட்ஜெட்கள் வாங்க திட்டமிட்டால் அதற்கு இது சரியான நேரமாகும்.

40% வரை தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்

40% வரை தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் அமேசான் பிரைம் தின 2022 விற்பனையானது ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி ஜூலை 24 வரை நடைபெறுகிறது. இந்த தள்ளுபடி அறிவிப்பில் ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. No Cost EMI, எக்ஸ்சேஞ்ச் சலுகை என பலவகை சலுகைகள் வழங்கப்படுகிறது. Apple, Samsung, OnePlus, Realme மற்றும் Xiaomi உள்ளிட்ட முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்களும் பட்டியலில் உள்ளது.

பாகுபாடில்லாமல் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடிகள்

பாகுபாடில்லாமல் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடிகள்

எடுத்துக்காட்டாக ஆப்பிள் ஐபோன் 13 இன் ஆரம்ப விலை ரூ.79,900 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த மாடல் ரூ.66,900 என்ற விலையில் கிடைக்கிறது. இதுமட்டுமில்லை பரிமாற்ற சலுகையும் வழங்கப்படுகிறது. பட்ஜெட், மிட் ரேன்ஜ், ப்ரீமியம் என பாகுபாடில்லாமல் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் அமேசான் பிரைம் 2022 விற்பனையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

OnePlus Nord CE 2 5G

OnePlus Nord CE 2 5G

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 900 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கு இப்போதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.23,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.22,499 என கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை கூடுதலாக பெறலாம். ஆனால் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி என்பது நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

Samsung Galaxy M13

Samsung Galaxy M13

சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போனானது அமேசான் பிரைம் தின 2022 விற்பனையில் ரூ.2000 வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. எக்ஸ்சினோ 850 எஸ்ஓசி சிப்செட், 6 ஜிபி ரேம், 50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் கேமரா ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையானது ரூ.9,999 என கிடைக்கிறது.

iQoo Z6 5G

iQoo Z6 5G

ஐக்யூ இசட்6 5ஜி ஸ்மார்ட்போனின் நிர்ணய விலை ரூ.15,499 ஆகும். அமேசான் பிரைம் தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999 என கிடைக்கிறது. அது விஷயமில்லை இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் தான் இங்கு குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது ப்ரீமியம் தர அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி சிப்செட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே, டிரிபிள் கேமரா உடன் ஐந்து அடுக்கு லிக்விட் கூலிங் சிஸ்டம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

Realme Narzo 50A பிரைம்

Realme Narzo 50A பிரைம்

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனானது ரூ.11,499 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6.6 இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் 50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது.

OnePlus Nord CE 2 Lite 5G

OnePlus Nord CE 2 Lite 5G

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.19,999 என விற்கப்பட்ட நிலையில் அமேசான் பிரைம் தின விற்பனை 2022 இல் ரூ.17,499 என கிடைக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே உடன் 64 எம்பி பிராதன கேமராவைக் கொண்டிருக்கிறது. 33 வாட்ஸ் சூப்பர்வூக் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Redmi Note 11

Redmi Note 11

Redmi Note 11 ஸ்மார்ட்போனானது ரூ.13,499 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.10,749 என கிடைக்கிறது. ரியல்மி நோட் 11 ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே, ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி, 6 ஜிபி ரேம் ஆதரவுடன் 50 எம்பி முதன்மை கேமரா உட்பட குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி 33 வாட்ஸ் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதில் இருக்கிறது.

Samsung Galaxy M33 5G

Samsung Galaxy M33 5G

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.18,999 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே உடன் ஆக்டோ கோர் எக்ஸினோஸ் சிப்செட் வசதியைக் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியோடு குவாட் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது. அதோடு 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

Xiaomi 11T Pro 5G

Xiaomi 11T Pro 5G

சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.39,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.29,999 என கிடைக்கிறது. சுமார் ரூ.10,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி வசதியோடு ஹர்மன் கார்டனால் டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது.

OnePlus Nord 2T 5G

OnePlus Nord 2T 5G

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.28,999 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.27,499 என கிடைக்கிறது. 90 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா உடன் 4500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1300 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

பிரத்யேகமாக இவர்களுக்கு மட்டுமே

பிரத்யேகமாக இவர்களுக்கு மட்டுமே

இது தவிர பல ஸ்மார்ட்போன்களுக்கும் சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் அமேசான் பிரைம் டே 2022 விற்பனையானது பிரைம் உறுப்பினர்களுக்கு என பிரத்யேகமானது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. நீங்கள் இந்த சலுகையை பெற வேண்டும் என்றால் பிரைம் உறுப்பினராக இருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Amazon Prime Day 2022 Sale: Best smartphones available with Huge discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X