Home
News

Amazon Prime Day 2022: ரூ.15,000 தள்ளுபடியுன் ஆப்பிள், ஒன்பிளஸ், சியோமி, சாம்சங் ஸ்மார்ட்போன்!

Amazon Prime Day 2022 அறிவிப்பில் ஆப்பிள், ஒன்பிளஸ், சாம்சங், சியோமி உள்ளிட்ட முன்னணி பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒன்பிளஸ் 9 தொடர் ஸ்மார்ட்போனை சொல்லலாம். 5ஜி ஆதரவோடு கூடிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை ரூ.15,000 தள்ளுபடியுடன் வாங்கலாம்.

பெரும் தள்ளுபடியுன் அமேசான் பிரைம் டே 2022

பெரும் தள்ளுபடியுன் அமேசான் பிரைம் டே 2022

மிகவும் எதிர்பார்த்த அமேசான் பிரைம் டே 2022 விற்பனை அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த விற்பனையானது ஜூலை 23 மதியம் 12 மணி முதல் தொடங்குகிறது. இந்த சலுகை விற்பனையானது ஜூலை 24 உடன் முடிவடைகிறது. 48 மணிநேரம் மட்டுமே நடக்கும் இந்த விற்பனையில் பல்வேறு சாதனங்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதில் OnePlus, Xiaomi, iQOO, Realme உள்ளிட்ட முன்னணி பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

OnePlus ஸ்மார்ட்போன்களுக்கு அதீத தள்ளுபடி

OnePlus ஸ்மார்ட்போன்களுக்கு அதீத தள்ளுபடி

ஒன்பிளஸ் 9 தொடர் 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.37,999 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனை அமேசான் பிரைம் தின விற்பனையில் வங்கி சலுகையுடன் ரூ.15,000 வரை தள்ளுபடியை பெறலாம். அதேபோல் OnePlus 10R 5G மற்றும் OnePlus 10 Pro 5G ஸ்மார்ட்போனை 9 மாதம் வரை நோ காஸ்ட் இஎம்ஐ, ரூ.4000 கூப்பன் தள்ளுபடி மற்றும் ரூ.7000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி என பல சலுகையுடன் வாங்கலாம்.

Xiaomi அமேசான் தள்ளுபடி

Xiaomi அமேசான் தள்ளுபடி

சியோமி ஸ்மார்ட்போன்கள் 40 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை ரூ.600 கூப்பன் தள்ளுபடியுடன் ரூ.6899 என வாங்கலாம். ரெட்மி நோட் 10டி 5ஜி, ரெட்மி நோட் 10 ப்ரோ, ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மற்றும் ரெட்மி நோட் 10எஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களையும் தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன்களுக்கு உடனடி வங்கி தள்ளுபடிகள் மற்றும் கூப்பன் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

தள்ளுபடி விலையில் சியோமி ஸ்மார்ட்போன்கள்

தள்ளுபடி விலையில் சியோமி ஸ்மார்ட்போன்கள்

அதேபோல் சமீபத்திய சியோமி ஸ்மார்ட்போனான சியோமி 11 லைட் ஸ்மார்ட்போனானது ரூ.23,999 எந கிடைக்கிறது. அதேபோல் சியோமி 11டி ப்ரோ ரூ.35,999 எனவும் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.56,999 எனவும் வாங்கலாம். அமேசான் பிரைம் டே 2022 விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு வகையில் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தள்ளுபடி விலையில் Samsung ஸ்மார்ட்போன்கள்

தள்ளுபடி விலையில் Samsung ஸ்மார்ட்போன்கள்

Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போனை 30% தள்ளுபடியுடன் வாங்கலாம். அதேபோல் சாம்சங் எம் தொடர் ஸ்மார்ட்போனை இதுவரை பார்த்திடாத தள்ளுபடி விலையில் வாங்கலாம். சாம்சங்கின் சமீபத்திய மற்றும் மேம்பட்ட ஸ்மார்ட்போன்களை 30% வரை தள்ளுபடியுடன் வாங்கலாம். 5ஜி ஆதரவோடு கூடிய சாம்சங் எம்52 5ஜி ஆனது ரூ.15,000 தள்ளுபடியுடன் வாங்கலாம். அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி, கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன்கள் ரூ.8000 வரை தள்ளுபடியை பெற்றிருக்கிறது. அதேபோல் சாம்சங் எம்32 ஸ்மார்ட்போனும் ரூ.5000 தள்ளுபடியை பெற்றிருக்கிறது.

Realme ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி

Realme ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி

ரியல்மி ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் ரூ.6000 வரையிலான தள்ளுபடியுடன் வாங்கலாம். ரியல்மி நார்சோ 50 5ஜி, ரியல்மி நார்சோ 50 ப்ரோ மற்றும் நார்சோ 50ஏ ப்ரைம் என சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களும் அமேசான் பிரைம் தின விற்பனையில் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களும் தற்போது பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆனது கூப்பன்கள் மற்றும் வங்கி தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன்களுக்கு தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன்களுக்கு தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன்களானது அமேசான் பிரைம் தின விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. புதிய ஐபோன் 14 சாதனம் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் ஐபோன் 13 தொடர் சாதனத்துக்கு தொடர்ந்து அதிரடி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய சாதனங்கள் பெரும் சலுகையில் கிடைக்கிறது. அமேசான் சலுகை தின அறிவிப்பில் ஐபோன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒன்பிளஸ் 9 தொடர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

ஒன்பிளஸ் 9 தொடர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

ஒன்பிளஸ் 9 தொடரில் ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 ஆர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றிருக்கிறது. ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனாநது 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் Fluid OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. 48எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மோனோக்ரோம் சென்சார் மற்றும் 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் செல்பி கேமரா ஆதரவு இருக்கிறது. அதேபோல் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மேம்பட்ட ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 10ஆர்

ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 10ஆர்

ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போன்களும் மேம்பட்ட ஆதரவுகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. ஒன்பிளஸ் 10ஆர் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டிருக்கிறது. மீடியாடெக் Dimensity 8100 Max சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Amazon Prime Day 2022: Offers For Apple, oneplus, Samsung, Xiaomi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X