அமேசான் அதிரடி- எது வாங்கினாலும் தள்ளுபடி: ஆகஸ்ட் 6 வரை காத்திருங்கள்!

|

அமேசான் பிரைம் தின விற்பனையானது ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆம் தேதிமுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்திற்கும் அட்டகாச சலுகைகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

அமேசான் ஆன்லைன் விற்பனை

அமேசான் ஆன்லைன் விற்பனை

அமேசான் ஆன்லைன் விற்பனை தளமானது இந்தியாவில் பிரபலமடைந்த ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் ஒன்று. இந்த ஆன்லைன் தளத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவது வழக்கம். இதிலும் குறிப்பாக பிரைம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.

அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள்

அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள்

அமேசான் அதன் பிரைம் வாடிக்கையாளர்கள் உட்பட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வருடந்தோறும் பிரைம் தின விற்பனையை வழங்கும். இருப்பினும் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த வருடாந்திர பிரைம் தின விற்பனையை ரத்து செய்யக்கூடும் என சில வதந்திகள் வெளியாகின.

கீழடியில் 12 கோடி செலவில் அமைக்கப்படும் அருங்காட்சியகம்! தமிழர்கள் போராடியது இதற்கு தானே!கீழடியில் 12 கோடி செலவில் அமைக்கப்படும் அருங்காட்சியகம்! தமிழர்கள் போராடியது இதற்கு தானே!

2020 ஆம் ஆண்டுக்கான பிரைம் தின விற்பனை

2020 ஆம் ஆண்டுக்கான பிரைம் தின விற்பனை

இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியாவில் 2020 ஆம் ஆண்டுக்கான பிரைம் தின விற்பனை தேதியை அறிவித்துள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த விவரங்களை பார்க்கலாம்.

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உட்பட வீட்டு உபயோக பொருட்கள்

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உட்பட வீட்டு உபயோக பொருட்கள்

கடந்த ஆண்டு அமேசான் பிரைம் தின விற்பனைக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததை உணர்ந்த அமேசான் நிறுவனம் இந்த வருடமும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களுக்கு அட்டகாச சலுகைகளை அறிவித்திருக்கிறது. இந்த விற்பனையானது ஆகஸ்ட் 6 முதல் 7 வரை நடக்கிறது.

தள்ளுபடியில் பொருட்கள் வாங்க சரியான நேரம்

தள்ளுபடியில் பொருட்கள் வாங்க சரியான நேரம்

இந்த விற்பனை குறித்த சில விவரங்களை நிறுவனம் ஜூலை 23 ஆம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிவி வாங்கவோ அல்லது வேறு எதேனும் எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்கவோ நீங்கள் திட்டமிட்டு இருந்தால் இந்த விற்பனை தினம் ஒரு அறிய வாய்ப்பாகும்.

ஆகஸ்ட் 6 மற்றும் 7

ஆகஸ்ட் 6 மற்றும் 7

ஆகஸ்ட் 6 ஆம் தேதி அதிகாலை 12 மணி(நள்ளிரவு) முதல் இந்த விற்பனை தொடங்குகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், மின்னணுவியல் உபகரணங்கள், தொலைக்காட்சிகள், சமையலறை சாதனங்கள், தினசரி அத்தியாவசிய பொருட்கள், பொம்மைகள், பேஷன் அழகு சாதனங்கள் என பல்வேறு பிரிவுகளுக்கும் இந்த தினங்களில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

300 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள்

300 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள்

இதில் வழங்கப்படும் சலுகைகளில் சாம்சங், ஜாப்ரா, டைட்டன், ஜேபிஎல், ஒன்பிளஸ், மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் மற்றும் சியோமி உள்ளிட்ட பிராண்டுகளிலிருந்து 300 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் அடங்கும்.

20 சதவீத உடனடி கேஷ்பேக்

20 சதவீத உடனடி கேஷ்பேக்

குறிப்பாக அமேசான் விற்பனை நிகழ்வுகளில் பிரைம் சந்தாதாரர்களுக்கு 20 சதவீத கேஷ்பேக் சலுகையை நிறுவனம் வழங்குகிறது. இந்த பிரைம் தின விற்பனையின் போது பல்வேறு ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற கேஜெட்களுக்கு அட்டகாசமான சலுகைகளை எதிர்பார்க்கலாம். இதில் பல்வேறு பொருட்களுக்கு எச்டிஎப்சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கும்போது 10 சதவீத உடனடி கேஷ்பேக் வசதியும் வழங்கப்படுகிறது. இஎம்ஐ விருப்பங்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது.

புது திரைப்பட வெளியீடுகள்

புது திரைப்பட வெளியீடுகள்

அதுமட்டுமின்றி அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வீடியோ சேவையின் மூலம் பயனர்களை மகிழ்விக்க புது திரைப்பட வெளியீடுகளை நிறுவனம் வழங்க இருக்கிறது. இந்த அறிவிப்பில் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஹாலிவுட் பாலிவுட் என பல்வேறு திரைப்படங்கள் வெளியிடப்பட இருக்கிறது. அதுமட்டுமின்றி அமேசான் பிரைம் மயூசிக் மூலம் பிரபல பாடகர்களின் இசை பிளேலிஸ்ட்களை வழங்க இருக்கிறது.

உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்!உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்!

இந்தியாவில் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளது

இந்தியாவில் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளது

அமேசான் பிரைம் தின விற்பனையானது எப்போதும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஒருசேர நடக்கும். ஆனால் இந்த முறை அமேசான் பிரைம் தின அறிவிப்பில் இந்தியா மட்டுமே பட்டியலப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Prime Day 2020 scheduled on August 6,7 with Greatdeals in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X