அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்!
உலகப் புகழ் பெற்ற அமேசான் நிறுவனம், இந்த வருடத்திற்கான ப்ரைம் டே விற்பனை நாட்கள் குறித்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ப்ரைம் டே சேல் வரும் ஜூலை 15 மற்றும் 16ஆம் தேதிகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

பிரைம் டே சேல்ஸ் கால அவகாசம்
இதற்கு முன்பு அமேசான் பிரைம் டே விற்பனை 36 மணிநேரம் நடந்து வந்தது, ஆனால் இந்த ஆண்டு 48 மணிநேரத்திற்கு அமேசான் பிரைம் டே விற்பனையை நடத்தவுள்ளதாக அமேசான்அறிவித்துள்ளது. இந்த விற்பனை உலகம் முழுவதும் ஐந்தாவது முறையும் இந்தியாவில் மூன்றாவது முறையும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பொருட்கள் புதிய சலுகைகள்
இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள அமேசான் பிரைம் டே விற்பனையில், பல முக்கிய பிரிவுகளில் பல புதிய பொருட்களை வியக்கவைக்கும் சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்போவதாகவும். ப்ரைம் வீடியோ மற்றும் ப்ரைம் மியூசிக்கில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்யப் போவதாகவும் அமேசான் அறிவித்துள்ளது.

1 மில்லியனிற்கும் அதிகமான பொருட்கள்
நடைபெறவிருக்கும் இந்த ப்ரைம் டே சேல் விற்பனை, அமேசானின் ப்ரைம் சந்தாதாரர்களுக்கான பிரத்யேக விற்பனை கொண்டாட்ட நாளாகும். உலக அளவில் இருக்கும் சந்தாதாரர்களுக்கு சுமார் 1 மில்லியனிற்கும் மேலான பொருட்களை சலுகையுடன் விற்பனை செய்து, தனது பயனர்களைத் திகைக்கவைக்கப் போகிறது என்று அமேசான் தெரிவித்துள்ளது.

புதிய அறிமுகங்கள்
இந்தியாவில் மட்டும் சுமார் 1000திற்கும் அதிகமான பல புதிய பொருட்களை, இந்த விற்பனை நாட்களில் அமேசான் அறிமுகம் செய்யவுள்ளது. இவற்றில் ஒன்ப்ளஸ், அமேசான் பேசிக்ஸ், சாம்சங், இன்டெல் போன்ற பல நிறுவனங்களின் புதிய அறிமுகங்கள், LG நிறுவனத்தின் புதிய W30 ஸ்மார்ட்போன், "காக்டெய்ல் ஆரஞ்சு" நிறத்தில் சாம்சங் கேலக்ஸி M40 ஸ்மார்ட்போன் மற்றும் JBL சாதனங்கள், 4K டிவியின் ஆடியோ கியர் போன்ற பல பொருட்கள் இந்த விற்பனையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

புதிய திரைப்படங்கள் மற்றும் இசை வெளியீடுகள்
புதிய பொருட்களை ஆறுமுகம் படுத்துவது மட்டுமின்றி, புதிய திரைப்படங்கள் மற்றும் இசை வெளியீடுகளையும் நிகழ்த்தப் போவதாக அமேசான் தெரிவித்துள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜூலை 1 முதல் 14 ஆம் தேதி வரை பல புதிய வெளியீடுகளைச் சந்தாதாரர்கள் எதிர்பார்க்கலாம் என்றும், மேலும் இது தொடர்பாக இந்நிறுவனம் பிரபல பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஆலியா பட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிமட்ட விலைக்கு மின்னணு பொருட்கள் விற்பனை
இந்தியாவில் இதற்கு முன் அமேசான் பயனர்கள் பார்த்திராத அளவிற்குச் சலுகைகள் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் என்றும், அதுமட்டுமின்றி இந்த ஆண்டின் ப்ரைம் டே சேல் விற்பனையில் 5000திற்கும் மேற்பட்ட மின்னணு பொருட்கள் அடிமட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுமென்றும் அமேசான் தெரிவித்துள்ளது.

கூடுதல் 50% அமேசான் சலுகை
இத்துடன் அமேசான் நிறுவனத்தின் சொந்த தயாரிப்புகளான அமேசான் கின்டில், ஃபையர் டிவி ஸ்டிக் (fire TV stick), அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர், வீட்டு உபயோக பொருட்கள், புத்தகம், கேமிங் கன்சோல் போன்ற சாதனங்களுக்கு 50% சலுகை அமேசான் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.

வங்கி மற்றும் வட்டி இல்ல தவணை முறை சலுகை
HDFC வங்கியுடன் சேர்ந்து அமேசான் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு, இந்த விற்பனையில் 10% உடனடி சலுகை மற்றும் அமேசான் பே சலுகை வழங்குகிறது. இத்துடன் ICICI கிரெடிட் கார்டுகளுக்கு வெகுமதி புள்ளிகள், பல பொருட்களுக்கு வட்டி இல்ல தவணை முறை வசதி போன்ற சலுகையையும் அமேசான் தனது ப்ரைம் டே சேல் விற்பனையில் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications