நீங்கள் அதிகம் எதிர்பார்த்த அமேசான் ப்ரைம் தின விற்பனை: ஷாப்பிங் பண்ண ரெடியா?
அமேசான் இந்தியா ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தேய விற்பனை வரும் ஜூலை 16-ம் தேதி முதல் ஜூலை 18-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி அமேசானின் ப்ரைம் தின விற்பனையின் தேதிகள் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது. மேலும் கண்டிப்பாக பல்வேறு பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் இந்தியா ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தேய விற்பனை வரும் ஜூலை 16-ம் தேதி முதல் ஜூலை 18-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 200-க்கும் அதிகமான பொருட்கள் முதன்முறையாக இந்த அமேசான் ப்ரைம் தின விற்பனைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 16:
ஜூலை 16-ம் தேதி மதியம் 1மணி முதல் ஆறு வகை ப்ளாஷ் சேல்கள் நடைபெற உள்ளது, இதில் எச்டிஎப்சி வங்கி கார்டுகள் பயன்படுத்தி
பொருட்கள் வாங்கினால் 10 சதவீதம் பணம் திரும்ப கிடைக்கும் என அமேசான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங்:
குறிப்பாக க்ளவுட் வாக்கர், சீகேட், சாம்சங் ஒன்ப்ளஸ், சென்ஹெய்சர், WD, காட்ரேஜ் போன்ற நிறுவனங்களில் இருந்து பல்வேறு புதிய பொருட்கள் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ப்ரைம் விற்பனையில் சில போட்டிகள் நடத்தப்படும்
அதில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரைம் வீடியோ:
அமேசான் ப்ரைம் வீடியோ வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 10 ஆம் தேதி முதல் ஏழு புதிய படங்கள் வெளியாக உள்ளன என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் மியூசிக் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை எக்கோ டாட்ஸ் வெல்லும் வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றே டெலிவரி:
அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் இப்போது பெற்று வரும் ஒரு நாள் டெலிவரி ஆர்டர் செய்த அன்றே டெலிவரி, ப்ரைம் வீடியோ,
ப்ரைம் மியூசிக், எக்ஸ்க்ளூசிவ் டீல்ஸ், ப்ரைம் நவ்வின் இரண்டு மணி நேர டெலிவரி ஆகிய வசதிகளை தொடர்ந்து பெறமுடியும்.


Click it and Unblock the Notifications