Home
News

அலெக்சாவில் ChatGPT இருந்தா எப்படி இருக்கும்? Amazon போடும் மாஸ்டர் பிளான்

உலகம் முழுவதும் அதிவேகமாக வளர்ந்துவரும் சாட்ஜிபிடி (ChatGPT) தொழில்நுட்பத்தை வைத்து அமேசான் (Amazon) நிறுவனம் பிரம்மாண்ட திட்டத்தை போட்டுள்ளது. இந்த திட்டம் மட்டும் நிறைவேறினால், ஒவ்வொரு வீட்டிலும் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்பதில் சந்தேமில்லை. அப்படியென்ன திட்டம் போடுகிறது அமேசான்?

அண்மை காலமாக எங்கு பார்த்தாலும் சாட்ஜிபிடியின் பேச்சாகவே இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அமெரிக்காவின் ஓப்பன் ஏஐ (Open AI) நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் அதிவேகமாக பிரபலம் அடைந்து வருகிறது.

அலெக்சாவில் ChatGPT?  Amazon போடும்  மாஸ்டர் பிளான்

ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரும் மாற்றங்களை கொண்டுவர காத்திருக்கிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் சாட்ஜிபிடி ஒரு வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பல்கலைகழகங்களின் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் வரை சாட்ஜிபிடியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

இந்த சாட்ஜிபிடியின் சாட்போடில் (Chatbot), நீங்கள் என்ன கேள்வி கேட்டு டைப் செய்தாலும் விடை கிடைக்கும். அனைத்தும் தெரிந்த நபரிடம் நீங்கள் கேள்வி கேட்டால், எப்படி பதில் கிடைக்குமோ அப்படியே இந்த சாட்போடில் கிடைக்கிறது. நீங்கள் எந்த துறை சார்ந்த கேள்வியையும் கேட்கலாம். ஒரு சாதரண கவிதை முதல் கம்ப்யூட்டர் கோடிங் வரை சாட்ஜிபிடி உங்களுக்கு பதிலாக கொடுக்கும்.

இப்படிப்பட்ட சாட்ஜிபிடியை வைத்து தொழில்நுட்ப நிறுவனங்கள் லாபம் பார்க்க திட்டமிட்டு வருகின்றன. அதற்கு அமேசான் நிறுவனம் மட்டும் விதிவிலக்கல்ல. அந்த நிறுவனமும் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை போட்டுள்ளது. அது சாட்ஜிபிடியை போன்ற ஏஐ தொழில்நுட்பத்தை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்க்கும் திட்டம் போல் தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்பு, அமேசான் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, தனது எதிர்கால திட்டத்தை பற்றி முதலீட்டாளர்கள் இடையே பகிர்ந்துகொண்டார். உலகிலேயே சிறந்த பர்சனல் அசிஸ்டன்ட்டாக அலெக்சாவை (Alexa) உருவாக்க உள்ளதாகவும், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதோடு ஏஐ போன்றதொரு டெக்னாலஜியை அலெக்சாவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மாநாட்டுக்கு அடுத்த நாளே அமேசானின் ஏஐ சாட்போட் திட்டம் குறித்து பல்வேறு தகவல்கள் கசிந்துவருகின்றன. சாட்ஜிபிடி போலவே அலெக்சாவுக்கு என்ற பிரத்யேகமாக ஏஐ வாய்ஸ்போடை (AI Voicebot) உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மறுப்புறம் அலெக்சாவில் சாட்ஜிபிடி, கூகுள் பார்ட் போன்ற ஏதாவதொரு சாட்போட்டை இணைந்து விற்பனை செய்ய திட்டமிட்டுவருவதாகவும் தகவல்கள் பரவிவருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தையும் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon plans to use like ChatGPT technology in Alexa
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X