வேலை தேடுறீங்களா? இதோ அமேசான் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு.!

|

பிளிப்கார்ட் தளத்தை போன்று அமேசான் வலைத்தளத்தை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த அமேசான் தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க மக்கள் இந்த அமேசான் தளத்தை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

டையாக ஏறி இறங்கி, பிடித்ததை தேடி

கடை கடையாக ஏறி இறங்கி, பிடித்ததை தேடி அலைந்து வாங்கிய காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போது மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் போதும் வீட்டிற்கே கொண்டுவந்து தருகிறார்கள். அதிலும் அமேசான்,
பிளிப்கார்ட் போன்ற பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.

அமேசான் நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டு

இந்நிலையில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டு 35 நகரங்களில் 8000-க்கும் மேற்பட்ட நேரடி பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யாரும் வருந்த வேணாம்., நாங்க இருக்கோம்- இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் விலை குறைப்பு- 6000mAh பேட்டரி, 48Mp கேமரா!யாரும் வருந்த வேணாம்., நாங்க இருக்கோம்- இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் விலை குறைப்பு- 6000mAh பேட்டரி, 48Mp கேமரா!

மேசான் தனது

அமேசான் நிறுவனத்தின் மனிதவளத் தலைவர் மேனா தீப்தி வர்மா அவர்கள் கூறியது என்னவென்றால், அமேசான் தனது கார்ப்பரேட்,தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை மற்றும் செயல்பாட்டு தளங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும், பின்பு மெஷன் அப்ளிகேஷன் சயின்ஸ்,மனிதவள மேம்பாடு, நிதி போன்ற பல்வேறு துறைகளில் வேலைவாய்புகளை ஏற்படுத்துகிறோம் என்றும்
கூறியுள்ளார்.

ஒரு பக்கம் விலை ஏற்றம்., ஒரு பக்கம் தள்ளுபடி- போக்கோ ஸ்மார்ட்போன்கள் வாங்க சரியான நேரம்: பிளிப்கார்ட் அதிரடி!ஒரு பக்கம் விலை ஏற்றம்., ஒரு பக்கம் தள்ளுபடி- போக்கோ ஸ்மார்ட்போன்கள் வாங்க சரியான நேரம்: பிளிப்கார்ட் அதிரடி!

அங்கீகாரம் அளிக்கும் நி

அதேபோல் 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு திருவிழாவாகவும் இந்தியாவின் திறனுக்கு அங்கீகாரம் அளிக்கும் நிகழ்வாகவும் இது இருக்கும் என்று தெரிவித்துள்ளார் மேனா தீப்தி வர்மா.

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி குளிப்பார்கள் தெரியுமா? முழு வீடியோவை வெளியிட்ட பெண் விண்வெளி வீரர்..விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி குளிப்பார்கள் தெரியுமா? முழு வீடியோவை வெளியிட்ட பெண் விண்வெளி வீரர்..

மறைமுகமாகவும் 20 லட்சம் வேலை

குறிப்பாக வரும் 2025-க்குள் அமேசான் நிறுவனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. பின்பு இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் 10 லட்சம் நேரடி மற்றும் முறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது.

டுவிட்டரில் அட்டகாச இரண்டு புதிய அம்சம்: இனி சூப்பர் ஃபாலோஸ், உகந்த பாதுகாப்பு தான்- எல்லாம் லாபம்தான்!டுவிட்டரில் அட்டகாச இரண்டு புதிய அம்சம்: இனி சூப்பர் ஃபாலோஸ், உகந்த பாதுகாப்பு தான்- எல்லாம் லாபம்தான்!

தொற்றுநோய் நெருக்கடிகளின் போது கூ

இந்த கொரோனா தொற்றுநோய் நெருக்கடிகளின் போது கூட 3 லட்சம் பேருக்கு வேலை வழங்கியதாக அமேசான் நிறுவனம்
கூறியுள்ளது. குறிப்பாக இப்போது அமேசான் நிறுவனம் அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பு திட்டம் பல்வேறு மக்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமது சூரிய குடும்பத்தில் 9வது கிரகத்தை தேடும் பணி தீவிரம்.. புதிய 9வது கிரகம் இருக்கும் திசை உறுதியானதா?நமது சூரிய குடும்பத்தில் 9வது கிரகத்தை தேடும் பணி தீவிரம்.. புதிய 9வது கிரகம் இருக்கும் திசை உறுதியானதா?

 ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டிவி போன்ற பல சாதனங்

குறிப்பாக இந்த அமேசான் வலைத்தளத்தில் பல்வேறு பொருட்களுக்கு அவ்வப்போது சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதிலும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டிவி போன்ற பல சாதனங்களை பண்டிகை காலங்களில் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். குறிப்பாக சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை இந்த தளத்தில் இப்போது கூட பட்ஜெட் விலையில் வாங்க முடியும். எனவே இந்த அமேசான் தளத்தை இந்தியாவிலும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய சேவைகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon plans to hire 8,000 direct employees in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X