ஆண்ட்ராய்டு இயங்குளங்களுக்கு என அமேசான் பே யு.பி.ஐ அறிமுகம்.!

அமேசான் யு.பி.ஐ தளம் மூலம் பல்வேறு புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களது அனுபவத்தை மேம்படுத்தும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

|

அமேசான் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சேவைகள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது,அந்தவகையில் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு என்றே அமேசான் நிறுவனம் பே யு.பி.ஐ அறிமுகம் செய்திருக்கிறது.

ஆண்ட்ராய்டு இயங்குளங்களுக்கு என அமேசான் பே யு.பி.ஐ அறிமுகம்.!

குறிப்பாக பயனர்களுக்கு யு.பி.ஐ ஐ.டி.க்களை வழங்க அமேசான் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்திருக்கிறது, மேலும் இதை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு தங்களது வங்கி கணக்கை அமேசான் மொபைல் செயலியுடன் இணைந்துக்
கொள்ளலாம்.

அமேசான் பே யு.பி.ஐ

அமேசான் பே யு.பி.ஐ

மேலும் இவ்வாறு செய்த பின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து அதிவேக பணபரிமாற்றங்களை மிக எளிமையாக மேற்கொள்ள முடியும். அதே சமயம் அமேசான் பே யு.பி.ஐ ஐ.டி கொண்டு அமேசான் வலைதளத்தில்
பொருட்களை வாங்கவோ, அன்றாட தேவைகளுக்கான பொருட்களை வாங்கும் போதோ, ரீசார்ஜ் அல்லது கட்டணங்களை நேரடியாக வங்கி கணக்கில் இருந்து செலுத்த முடியும்.

மொபைல் வெரிஃபிகேஷன்

மொபைல் வெரிஃபிகேஷன்

இந்த அமேசான் பே யு.பி.ஐ மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிமாற்றமும் மொபைல் வெரிஃபிகேஷன் மற்றும் யு.பி.ஐ
பின் பதிவிட்ட பின்னரே உறுதிசெய்யப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கை ஒருமுறை இணைத்துக்
கொண்டு யு.பி.ஐ பின் செட்டப் செய்துவிட்டால், பின்பு இதை கொண்டு பரிமாற்றங்கள் செய்யலாம்.

அனுபவத்தை மேம்படுத்தும்

அனுபவத்தை மேம்படுத்தும்

அமேசான் யு.பி.ஐ தளம் மூலம் பல்வேறு புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களது அனுபவத்தை மேம்படுத்தும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேமெண்ட் முறையாக வைத்துக் கொள்ள வேண்டும்

பேமெண்ட் முறையாக வைத்துக் கொள்ள வேண்டும்

அமேசான் பே யு.பி.ஐ பணபரிமாற்றங்களை பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் தங்களது ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இருந்து அமேசான் சேவையில் லாக் இன் செய்து கொண்டு யு.பி.ஐ சேவையை பேமெண்ட் முறையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் அமேசானில் பொருட்களை வாங்கி, புதிய யு.பி.ஐ மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் செலுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Amazon Pay UPI for seamless transactions launched for Android: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X