Home
News

உடனடி பண பரிமாற்றம் செய்ய அமேசான் புதிய ஏற்பாடு.!

இந்த வசதியின் மூலம் அமேசான் பே வாடிக்கையாளர்கள் உடனடி பேங்கிங் சேவைகளை செயல்படுத்த இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி தற்சமயம் பேடிஎம்-ல் இருப்பது போன்று அமேசான் பே- வசதியிலும் இனி வாடிக்கையாளர்கள், நண்பர்களுக்கு என உடனடி பண பரிமாற்றம் செய்யலாம் என அமேசான் தெரிவித்துள்ளது.

உடனடி பண பரிமாற்றம் செய்ய அமேசான் புதிய ஏற்பாடு.!

குறிப்பாக அமேசான் தற்போது person-to-person (P2P) சேவையினை ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு துவங்கியுள்ளது. இந்த வசதியின் மூலம் அமேசான் பே வாடிக்கையாளர்கள் உடனடி பேங்கிங் சேவைகளை செயல்படுத்த இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய வசதியின் மூலம் பயனர்கள் தங்களது தொடர்பு பட்டியலில் இருக்கும் நபர்களுக்கு உடனடியாக பணத்தை அனுப்பி வைக்க முடியும், அதேபோன்று தனது நண்பர்களிடம் இருந்து
பணத்தினையும் பெற இயலும். பிரபல ஆன்லைன் வணிக செயலியாக பேடிஎம்-ல் ஏற்கனவே இந்த வசதி செயல்பாட்டில் இருக்கும் நிலையில் தற்போது அமேசான் பே இந்த வசதியை தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

உடனடி பண பரிமாற்றம் செய்ய அமேசான் புதிய ஏற்பாடு.!

பின்பு அமேசான் பே இயக்குநர் விகாஸ் பன்சால் தெரிவித்தது என்னவென்றால், தற்போது வெளியிடப்பட்ட இந்த வசதியின் மூலம் மிக பெரிய அளவிலான வாடிக்கையாளர்களை அமேசான் பே பெரும் என்றும் அமேசான் வாலட் வசதியுடன் இனி வரும் நாட்களில் வாடிக்கையாளர்கள் அமேசான் பே பணபறிமாற்றத்தையும் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்தால். மேலும் வாடிக்கையாளர்களுக்கான புதியதொரு மாற்றத்தை உண்டாக்கும் என விகாஸ் பன்சால் தெரிவித்துள்ளார்.
உடனடி பண பரிமாற்றம் செய்ய அமேசான் புதிய ஏற்பாடு.!

மேலும் அமேசான் பே-விற்கு வாடிக்கையாளர்கள் யாரேனும் பதிவு செய்திருந்தால், அவரது தொடர்பில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளரின் அமேசான் பே பயன்பாடு குறித்து தெரியப்படுத்தப்படும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அமேசான்
பே பயன்பாட்டினை மேலும் எளிமையாக பயன்படுத்தலாம் எனவும் விகாஸ் பன்சால் தெரிவித்துள்ளார்.
Best Mobiles in India

English summary
amazon-pay-launches-peer-to-peer-payments-in-india: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X