2000 ரூபாய் நோட்டுகளை வீடு தேடி வந்து வாங்கும் அமேசான்! எளிமையாக டிஜிட்டல் பணமாக மாற்றலாமா?
உங்களிம் 2000 ரூபாய் நோட் இருக்கிறதா? அதை எப்படி மாற்றுவதென்று தெரியாமல் தவிக்கிறீர்களா? கவலையைவிடுங்கள் உங்களிடம் அமேசான் கணக்கு இருக்கிறது என்றால், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது இனி மிகவும் சுலபமான வேலையாகும். இதை எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இந்த நோட்டு தொடர்ந்து செல்லுபடியாகும் நிலையில், குடிமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30, 2023 தேதிக்குள் அருகிலுள்ள வங்கிக் கிளையில் சமர்ப்பிக்கவோ அல்லது மாற்றவோ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

இதை நிறைவேற்ற இன்னும் நிறைய நேரம் இருந்தாலும், நம் அனைவரிடமும் அந்த நேரம் தான் போதுமானதாக இல்லாமல் சுற்றி திரிகிறோம். சரியான நேரத்தில் இதை செய்யாவிட்டால், இது ஏமாற்றமளிக்கும் அனுபவமாக மாறிவிடும். ஆனால், அந்த நிலைக்கு வேலை இல்லை, ஏனென்றால், அமேசான் ஒரு வசதியான தீர்வைக் கொண்டு வந்துள்ளது.
அங்கு நீங்கள் ரூ.2,000 நோட்டுகளை உங்கள் வீட்டு வாசலில் இருந்து டெபாசிட் செய்யலாம் என்று அமேசான் (Amazon) அறிவித்துள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விபரங்களும் இங்கே. அமேசான் பேயின் உதவியுடன் வாடிக்கையாளர்கள் தங்களின் ரூ.2,000 நோட்டுகளை வீட்டு வாசலில் சமர்ப்பிக்கலாம் என்று அமேசான் அறிவித்துள்ளது.
டெலிவரி ஏஜெண்டிடம் கூடுதல் பணம் அல்லது மீதமுள்ள மாற்றத்தை வழங்க பயனர்களை அனுமதிக்கும் சேவை இது. இந்த கூடுதல் தொகை உங்கள் Amazon Pay இருப்பில் சேர்க்கப்படும். அதை டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்குப் பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த வசதி அமேசானின் KYC வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இதில் நல்ல விஷயம் என்னவென்றால், ஷாப்பிங் பயன்பாட்டிலிருந்து நேரடியாக உங்கள் அமேசான் KYC ஐ முடிக்க முடியும். இது சுமார் 5-10 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும் ஒரு செயல்முறையாகும். இது ஒரு வாடிக்கையாளருக்கு மாதம் ரூ.50,000 வரை ரொக்கமாக டெபாசிட் செய்ய அனுமதிக்கும் சேவை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரூ.2,000 நோட்டுகளும் அடங்கும்.
அமேசான் பே (Amazon Pay) பேலன்ஸில் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்வது எப்படி?
நீங்கள் வழக்கமாகச் செய்வது போல் Amazon இல் ஆர்டரை பிளேஸ் செய்யவும்.
ஆனால், பேமெண்ட் முறையில் கேஷ் ஆன்-டெலிவரி (COD) விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
டெலிவரி நேரத்தில், உங்கள் Amazon Pay இருப்புக்கு பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று டெலிவரி ஏஜெண்டிடம் சொல்லுங்கள்.
உங்கள் ஆர்டர் தொகைக்கு மேல் எவ்வளவு வேண்டுமாலும் டெபாசிட் செய்துகொள்ளலாம்.
அமேசான் ஏஜென்ட்டிடம் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுக்கலாம்.
Amazon Pay இருப்பில் பணத்தைச் சேர்ப்பதை டெலிவரி ஏஜென்ட் கவனித்துக்கொள்வார். புதுப்பிக்கப்பட்ட இருப்பு விரைவில் வாடிக்கையாளரின் Amazon Pay கணக்கில் பிரதிபலிக்கத் தொடங்கும். அமேசான் பே கணக்கில் சேர்க்கப்படும் தொகையை, டிஜிட்டல் பணமாக ஃபோன் ரீசார்ஜ் செய்தல் மற்றும் ஷாப்பிங் செய்தல் போன்ற டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு இந்த இருப்பை அவர்கள் பயன்படுத்தலாம். அதற்கு பின் இந்த தொகையை நீங்கள் தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த முறையை பின்பற்றி, 2000 ரூபாய் நோட்டுகளை நீங்கள் எளிதில் மாற்றம் செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications