அமேசானில் OnePlus ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத சலுகைகள்: உடனே முந்துங்கள்.!
இதுவரை ஐபிஎல் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், வரும் 31-ம் தேதி ஐபிஎல் 16-வது சீசன் தொடங்குகிறது. குறிப்பாக இந்த சீசனுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகிவருகின்றன. அதேபோல் இந்த ஐபிஎல் 2023 போட்டிகளை ரசிக்க அசத்தலான புதிய ஸ்மார்ட் டிவியை தேடுகிறீர்களா? கவலை வேண்டாம் சலுகை விலையில் அட்டகாசமான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் கிடைக்கிறது.
அதாவது ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால், தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள். இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கிறது. இப்போது சலுகை விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளைப் பார்ப்போம்.

32-இன்ச் டிவி: அமேசான் தளத்தில் 32-இன்ச் ஒன்பிளஸ் Y Series ஸ்மார்ட் டிவிக்கு 40 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் கூடுதலாக ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.
குறிப்பாக 32-இன்ச் Y Series ஸ்மார்ட் டிவி ஆனது 64-பிட் பவர்ஃபுல் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு பெசல்-லெஸ் டிசைன், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளம், டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.
43-இன்ச் 4கே டிவி: அமேசான் தளத்தில் 43-இன்ச் ஒன்பிளஸ் Y Series 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.27,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

இந்த 43-இன்ச் ஒன்பிளஸ் Y Series 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளம், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, Gamma Engine, டூயல் பேண்ட் வைஃபை, கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ஸ்மாரட் டிவி.
55-இன்ச் டிவி: அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 55-இன்ச் U Series 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.42,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும்.

குறிப்பாக ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிசைன், Gamma Engine, எச்டிஆர் பிளஸ் ஆதரவு, ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளம், டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications








