Amazon Mobile Savings Days sale: ஒன்பிளஸ், சாம்சங் போன்களுக்கு சூப்பர் சலுகை.!
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு மொபைல் போன்களுக்கு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சாம்சங், ரெட்மி, ஒன்பிளஸ், விவோ போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை இப்போது கம்மி விலையில் வாங்க முடியும்.

அமேசான்
தற்போது அமேசான் தளத்தில் நடைபெறும் Amazon Mobile Savings Days sale எனும் சிறப்பு விற்பனையில் கூட நீங்கள் மிகவும் எதிர்பார்த்த ஐபோன், சாம்சங், ஒன்பிளஸ் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும். குறிப்பாகஇந்த சிறப்பு விற்பனை வரும் ஜூலை 29-ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போது அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட்
ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர எக்ஸ்சேஞ்ச் வசதியைபயன்படுத்தினால் ரூ.5000 வரை தள்ளுபடி பெறலாம்.

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி
ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.38,999-ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.34,999-விலையில் விற்பனைசெய்யப்படுகிறது. அதேபோல் ஐசிஐசிஐ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடிபெறமுடியும்.

ஆப்பிள் ஐபோன் 13
அமேசான் நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, ஐபோன்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சலுகைககள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி
அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2,000 தள்ளுபடி பெறலாம்.

சியோமி 11டி ப்ரோ
முன்பு சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.37,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.4500 வரை தள்ளுபடிபெறலாம்.

டெக்னோ ஸ்மார்ட்போன்
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் டெக்னோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக டூயல் ரியர் கேமரா ஆதரவு கொண்ட டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனை ரூ.6,599-விலையில் வாங்க முடியும். இதுதவிர பல டெக்னோ ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ஸ்மார்ட்போன்கள்
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் சியோமி ஸ்மார்ட்போன்களை 40 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். குறிப்பாக ரெட்மி 9 சீரிஸ் ரூ.6,999 முதல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட்மி நோட் 10டி 5ஜி, ரெட்மி நோட் 10 ப்ரோ,ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் சூப்பர் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்
அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக பிளிப்கார்ட் தளத்தில் மொபைல் போன்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ள சலுகை இன்று (ஜூலை 27-ம் தேதி) தான் கடைசி.

சிறப்பு விற்பனை
Flipkart Big Saving Days Sale 2022 சிறப்பு விற்பனையில் லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், டிவி உள்ளிட்ட பல சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாம் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஸ்மார்ட்போன்களுக்கும் பிளிப்கார்ட் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஃப்22
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் நாம் மிகவும் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டள்ளது. அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.16,999-ஆக உள்ளது. தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த கேலக்ஸி எஃப்22 போனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
எனவே இப்போது ரூ.13,499-விலையில் சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications