swiggy, Zomato பின்னடைவு: நேரத்தை சாதமாக்கி ஆன்லைன் உணவு ஆர்டரை அறிமுகம் செய்த Amazon!
அமேசான் நிறுவனம் உணவு விநியோகத்தை ஆன்லைன் மூலம் இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்த அறிமுகம் தற்போது பின்னடைவை சந்தித்து வரும் அமேசான் மற்றும் ஸ்விகிக்கு பெரும் போட்டியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்பின் பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு
கொரோனா தாக்கம் உலகளவில் பல்வேறு நிறுவனங்களையும் பாதிப்படையச் செய்து வருகிறது. கொரோனா தடுப்பின் பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு உலகின் பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டது.

1600-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம்
சொமேட்டோ தனது பணியாளர்களில் 13 சதவீதம் அதாவது 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஸ்விகி நிறுவனமும் 1,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது.

மதுபானங்கள் ஹோம் டெலிவரி
இந்தியாவின் அதிகளவு மக்கள் ஸ்விகி செயலியை பயன்படுத்தியே உணவு டெலிவரி செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஸ்விக்கி நிறுவனம் ஜார்கண்ட் அரசாங்கத்திடம் தேவையான ஒப்புதல்களைப் பெற்ற பின்னர் ராஞ்சியில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யத் துவங்கியுள்ளது. இதற்கான பல்வேறு விதிகளும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

பின்னடைவை சந்தித்து வரும் நிறுவனங்கள்
ஸ்விகி, சொமேட்டோ தங்களது உணவு டெலிவரி நிறுவனத்தில் பல்வேறு பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் அமேசான் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அமேசான் இந்தியாவில் உணவு டெலிவரி சேவையை தொடங்கியுள்ளது.

4 பகுதிகளில் உணவு டெலிவரி சேவை
அமேசான் நிறுவன அறிவிப்புப்படி முதற்கட்டமாக பெங்களூருவில் வொயிட்பீல்ட், மகாதேவபுரம் என குறிப்பிட்ட 4 பகுதிகளில் உணவு டெலிவரி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது முதற்கட்டமாக 100 ஓட்டல்களுடன் இணைந்து அமல் படுத்தப்பட்டிருக்கிறது.

அடுத்தக்கட்ட அறிவிப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை
இதன்பிறகு நாடு முழுவதும் படிப்படியாக இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. இருப்பினும் அமேசான் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

15 பில்லியன் டாலர் வரை அதிகரிக்க வாய்ப்பு
அமேசானின் இந்த உணவு டெலிவரி சேவையின் மூலம் வரும் மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் உணவு தொழில் வரவு 4 பில்லியன் டாலரில் இருந்து 15 பில்லியன் டாலர் வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதுவாகினும் அமேசான் உணவு டெலிவரி அறிமுகத்தின் மூலம் இது ஸ்விகி, சொமேட்டோவிற்கு கடும் சவாலாக இருக்கும் என்பது நிரூபனமானது என கூறலாம்.
source: firstpost.com


Click it and Unblock the Notifications