கையை காண்பித்து பணம் செலுத்தலாமா? இனி Google Pay, PhonePe தேவையில்லை.. கை அசைவில் கட்டணம்.. புது டெக்னாலஜி..
கனவில் கூட நீங்கள் நினைத்து பார்க்காத ஒரு புதிய தொழில்நுட்பம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இனி சூப்பர் மார்க்கெட் (Super market), மெட்ரோ ஸ்டேஷன் (Metro station), பஸ் பயணம் (Bus travel), தியேட்டர் (Theatre), மால் (Mal) என்று நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் உள்ளங்கையை (palm or hand) காண்பித்து கட்டணத்தை செலுத்தும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை காரணமாக இனி மக்களுக்கு டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸ்களின் (Digital payment apps) தேவை இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் இப்போது மக்கள் அதிகமாக கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), அமேசான் பே (Amazon Pay), வாட்ஸ்அப் பேமென்ட் (WhatsApp Payment) போன்ற பணப்பரிவர்த்தனை ஆப்ஸ்களை பயன்படுத்திவருகிறார்கள். இதற்கு முன்பு, கிரெடிட் கார்டு (Credit Card) மற்றும் டெபிட் கார்டு (Debit Card) போன்ற வங்கி அட்டைகளின் மூலம் கட்டணத்தை செலுத்தி வந்தனர். அதற்கும் முன்பாக, மக்கள் ரொக்கமாக பணத்தை (Cash) வழங்கி கட்டணத்தை செலுத்தி வந்தனர்.

கை அசைவில் கட்டணம்.. புது பாம் ஸ்கேன் பேமெண்ட் டெக்னாலஜி (New Palm Scan Payment Technology):
இப்படி நாம் கட்டணம் செலுத்தும் முறை ஒவ்வொரு தசாப்தமாக நகர்ந்து முன்னேறி, இப்போது வெறும் கை அசைவில் கட்டணத்தை செலுத்தக்கூடிய செயல்முறை வரை அதிகபயங்கரமாக உருமாறியுள்ளது. இப்போது அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் பாம் ஸ்கேன் பேமெண்ட் டெக்னாலஜி (Palm Scan Payment Technology) என்ற புதிய தொழில்நுட்பம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை அமேசான் (Amazon) நிறுவனம் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக பிரத்தியேகமான பாம் ஸ்கேனிங் சாதனங்கள் (Palm Scanning Devices) அந்நாட்டில் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது? எப்படி கை அசைவில் கட்டணம் செலுத்த முடியும்? என்பது போன்ற விஷயங்களை இப்போது தெளிவாக பார்க்கலாம். பாம் ஸ்கேன் பேமெண்ட் டெக்னாலஜியை (Palm Scan Payment Technology) அமேசான் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த புதிய அதிநவீன கட்டண தொழில்நுட்ப முறையை பயன்படுத்த, மக்கள் அமேசான் உடன் அவர்களுடைய வங்கி விபரங்களை (bank details) பதிவு செய்ய வேண்டும். இதனுடன் முக்கியமான அடையாள சான்றாக உங்கள் கை ரேகைகள் (Palm details) மற்றும் கைகளில் உள்ள நரம்புகளின் (hand veins) தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவல்களை சரியாக ஸ்கேன் செய்ய, பிரத்தியேகமான பாம் ஸ்கேனர்களை (palm scanner) அமேசான் தன் வசம் வைத்துள்ளது.
எப்படி இந்த அமேசான் பாம் ஸ்கேன் பேமெண்ட் டெக்னாலஜியை பயன்படுத்துவது? (How to use this Amazon Palm Scan Payment Technology):
உங்கள் கைரேகை, கைரேகை நரம்புகள், வங்கி தகவல்கள், பெயர் (Name), மொபைல் எண் (Mobile number), ஈமெயில் விபரம் (email), புகைப்படம் (Photo), மற்றும் மற்ற அடிப்படை தகவல்கள் என்று எல்லாமே அமேசான் கிளவுட் (Amazon Cloud) சேவையில் சேமித்து வைக்கப்படும். அவ்வளவு தான் வேலை முடிந்தது. இனி நீங்கள் செல்லும் இடங்களில் காணப்படும் பாம் ஸ்கேன் பேமெண்ட் டிவைஸ்கள் மீது உங்கள் கையை காண்பித்தால் போதும் கட்டணம் தானாக செலுத்தப்படும்.
எவ்வளவு கட்டணம் செலுத்தப்பட்டது என்ற அணைத்து விபரங்களும், உங்கள் மொபைல் எண் மற்றும் ஈமெயில் வழியாக நோட்டிபிகேஷன் அனுப்பப்படும். இந்த புதிய கட்டண முறையை அமெரிக்காவை தொடர்ந்து அமேசான் (Amazon) நிறுவனம் இன்னும் பல நாடுகளில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இந்த புதிய பாம் ஸ்கேன் பேமெண்ட் டெக்னாலஜி பற்றிய உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








